Banner
Banner

தற்போதைய செய்திகள்

புலியை இடறியதன் விளைவு: மும்பை அய்.அய்..டி.யில் அம்பேத்கர் - பெரியார் - புலே வாசகர் வட்டம் தோற்றம்

புலியை இடறியதன் விளைவு: மும்பை அய்.அய்..டி.யில் அம்பேத்கர் - பெரியார் - புலே வாசகர் வட்டம் தோற்றம்

  மும்பை, ஜுன்1_ சென்னை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்ததன் விளைவு _- எதிரொலியாக மும்பை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் பெரியார் புலே வாசகர் வட்டம் புதிய அமைப்பு உருவாகியுள்ளது. சென்னை அய்.அய்.டி மாணவர்களின் அமைப் பாகிய அம்பேத்கர் பெரியார்.......

02 ஜூன் 2015 15:55:03

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முக அடையாளம்சீனாவில் புதிய இயந்திரம்

Image - ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முக அடையாளம்சீனாவில் புதிய இயந்திரம்

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முக அடையாளம்சீனாவில் புதிய இயந்திரம் தயாரிப்பு பெய்ஜிங், ஜூன் 2_

செவ்வாய், 2 ஜூன் 2015

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

புத்தகச் சங்கம நிறைவு விழாவில் தமிழர் தலைவர் உரை

 

சென்னை, ஏப்.24_ பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா  இணைந்து  சென்னைப் புத்தகச் சங்கமம் மூன்றாம் ஆண்டு புத்தகக் காட்சி சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் இம்மாதம் 13 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி முடிய வெகுசிறப்பாக நடைபெற்றது சென்னைப் புத்தகச் சங்கமத்தில் அமைக்கப்பட்ட அரங்குகள் பன்னாட்டு வர்த்தக மய்யங்களில் அமைக்கப்பட்டு இருப்பதைப்போல் அமைக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு பதிப்பகத்தாருக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டு,  அவ்வரங்குகளை எளிதில் வாசகர்கள் அடைவதற்கு அரங்குகளுக்கு வரிசை எண்கள் அளிக்கப்பட்டதோடு, புத்தகக் காட்சிக்கு செல்லும் வாசகர்கள்  முகப்பிலேயே அவைகளை அறிந்துகொள்ளவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

சென்னைப் புத்தகச் சங்கமத்தின் ஒருங்கிணைப் பாளர்கள் வீ.அன்புராஜ், எமரால்டு கோ.ஒளி வண்ணன், விழிகள் வேணுகோபால், பெரிகாம்  க.ஜெயகிருஷ்ணன், வானவில் கார்த்திகேயன், பபாசி செயலாளர் புகழேந்தி உள்ளிட்டவர்களின் திட்ட மிடப்பட்ட செயல்பாடுகளின்மூலம் வெற்றிகரமாக 11 நாள்கள் புத்தகக் காட்சி நடைபெற்றுள்ளது.

நாள்தோறும் மாலை நேரங்களில் கருத்தைக் கவரும் கலை நிகழ்ச்சிகள், பல்சுவை நிகழ்ச்சிகள், அறிஞர் பெருமக்களின் சிறப்புரை என்று பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைப்பில் வாசகப் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.  அனைத்து நிகழ்ச்சிகளும் சென்னைப் புத்தகச் சங்கமத்தின் இணையத்தின் வாயிலாக நேரலை செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்ததாகும்.

சென்னைப் புத்தகச் சங்கமத்தில் பதிப்பாளர்கள் மற்றும் வாசகர்கள், பார்வையாளர்களுக்கு உரிய அனைத்து ஏற்பாடுகளையும் சென்னைப் புத்தகச் சங்கமத்தின் மேலாளர் ப.சீதாராமன் அவ்வப்போது கவனித்துக் கொண்டார். சென்னைப் புத்தகச் சங்கமத்தில் அவரவருக்கு உரிய பணி ஒதுக்கீடுகளின் படி இருபாலரும் மிகவும் நேர்த்தியாக அர்ப் பணிப்புடன் செயலாற்றினார்கள் என்றால் அது மிகை யாகாது. ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் எப்போதும் அவசர உதவிக்கு தீ அணைப்பு நிலையத்தின் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

நடமாடும் ஏடிஎம் என்கிற வங்கி அட்டையைக்கொண்டு பணம் பெறு வதற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாகனம் நிறுத் தப்பட்டிருந்தது. குருதிக்கொடை வழங்குவோருக்கு வசதியாக குருதிக்கொடை பெறும் வாகனமும் நிறுத் தப்பட்டிருந்தது.  பலவகை உணவு எந்த நேரத்திலும் வழங்கும் வகையில் சாப்பிட வாங்க நிறுவனத்தின் மூலம் சிற்றுண்டி விடுதி இயங்கியது.

கோடையின் குளிர்தரு நிழலாய் சென்னைப் புத்தகச் சங்கமம் அறிவுக்கொடையாக நூல்களின் அணிவகுப்பாக தமிழ் மற்றும் ஆங்கிலம் என்று பல மொழி வாசகர் களையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக குழந்தைகள் நூல்களின் குவியலாக ஏராள மான பதிப்பகங்களின் சார்பில் புத்தகங்கள் குவிக்கப்பட்டிருந்தன. அயல்நாட்டு எழுத்தாளர் களின் நாவல்கள், உலக வரலாறு, தத்துவ நூல்கள் ஆங்கில நூல்கள் அரங்குகளில் வாசகர்களைக் கவர்ந்தன.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் தந்தை பெரியார்  பேசிய உரைகள், எழுதியவை என்று அனைத்தும் நூல் வடிவில் கருத்துக் கருவூலங்களாக, அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார், கலை ஞர், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்ட அறிஞர் பெருமக் களின் நூல்கள் வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தன.
தமிழர் தலைவர் நிறைவுரை

நேற்று (23.4.2015) மாலை சென்னைப் புத்தகச் சங்கமத்தின் நிறைவு விழா எழுத்தாளரும், திராவிடர் கழக செயலவைத் தலைவருமான சு.அறிவுக்கரசு தலைமையில்,  நடைபெற்றது. பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன் வரவேற்றார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயலாளர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

நிறைவு நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது:
பெரியார் சுயமரியாதைப்பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா இணைந்து நடத்திய சென்னைப் புத்தகச் சங்கமத்துக்கு உதவிகரமாக  இருந் துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நல்லி, ரோட்டரி சங்கம், சிஎஸ்சி, 4 சீகார்ட், பெரியார் பிஞ்சு, சாப்பிட வாங்க, சாபோல்ஸ் குடிநீர், ஓசான், வால்வீன், விடுதலை நாளிதழ் உள்ளிட்ட அனைவரின் ஒத் துழைப்போடு சிறப்பாக நடைபெற்றுள்ளது. சென்னைப் புத்தகச் சங்கமம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது.

முதலாம் ஆண்டில் பெரியார் திடலில் நடத்தியபோது இடம் போத வில்லை என்றார்கள். சென்னையில் மய்யமான இடத் தில் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடத்துவதற்கு வீ.அன்பு ராஜ், எமரால்டு பதிப்பகம் கோ.ஒளிவண்ணன், பபாசி செயலாளர் புகழேந்தி, வானவில் பதிப்பகம் கார்த்திகேயன், பெரிகாம் பதிப்பகம் ஜெயகிருஷ்ணன், விழிகள் பதிப்பகம் வேணுகோபால் சேர்ந்து முடிவு செய்தார்கள். அதிகமான மக்கள் வரும்வகையில் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடத்தப்பட்டு வருகிறது. ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகத்தினருக்கு நன்றி.

சென்னைப் புத்தகச் சங்கமம் ஒரு பொதுவான அமைப்பு. பெரியார் சுயமரியாதை நிறுவனம் நடத்தி னாலும்கூட எல்லோருக்கும் இடம் உண்டு என்று மாற்றுக் கருத்துகளுக்கும் இடம் கொடுக்கப்பட் டுள்ளது. வாசகர் பெருமக்கள் அத்துணைப் பேருக்கும் நன்றி.
நம் நாட்டில் அறிவுக்குத் திருவிழா என்று கொண்டாடுவதில்லை.

அறிவை விரிவு செய், அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை என்று புரட்சிக் கவிஞர் குறிப்பிடுகிறார்.எந்தக் கருத்துகள் என்றாலும் புத்தகங்கள் அனைத் துக்கும் இடம் உண்டு.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் எழுத்தாளர்களைப் பாராட்டி கலைஞர் பொற்கிழி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கிவிட்டு இங்கே வந்திருக்கிறேன்.
புத்தகங்கள் வெறும் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன என்று சாதாரணமாக நினைக்காதீர்கள். இந்த உலகத் தையே புரட்டிப் போட்ட, புரட்சிக்கு அடிப்படை எதுவென்றால், புத்தகங்கள்தான்.

உலகத்தைப் புரட்டிப் போட்டதற்கு அடித்தளமாக இருந்தவை புத்தகங்கள்தான். எந்தக் காலத்திலும் பார்த்தீர்களேயானால், புத்தகக் கருத்தே பரவக் கூடாது என்று நினைக்கிறார்கள். வெடிகுண்டைப் பார்த்து பயப்படாதவன், புத்தகத்தைப் பார்த்து பயப் படுகிறார்கள். துப்பாக்கிகளைக் கண்டு பயப்படாத வர்கள், எழுத்துக்களைப் பார்த்து பயப்படுகிறார்கள்.

தடை செய்யப்பட்ட புத்தகங்கள்; இப்படி ஒரு வரலாறே இருக்கிறது. பெரிய சர்வாதிகாரிகளுடைய வாழ்க்கை வரலாற்றை, அவர்களுடைய ஆட்சி முறைகளைப் பார்த்தீர்களேயானால், அவர்கள் பயந்தது யாருக்காக? தங்களுடைய எதிரிகள், நாற்காலி களை ஆட்டக்கூடியவர்கள் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ஆனால், அதிகமாக அவர்கள் பயந்தது யாருக்காக என்று சொன்னால், நூலகங் களைக் கண்டு பயந்திருக்கிறார்கள். அன்றுமுதல் இன்றுவரை நூலகங்களைக் கண்டு பயந்துகொண்டி ருக்கிறார்கள். எனவேதான், நூலகம் ஒழுங்காக இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

அலெக்ஸ்சாண்டரியா நூலகம் எரிக்கப்பட்டது; யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது. இதுகாறும் நூலகங்களை எல்லாம் எரித்திருக்கிறார்கள். கருத்து களைக் கண்டு அவ்வளவு பயப்படுவார்கள். ஏனென் றால், கருத்துதான் மனிதர்களைச் சிந்திக்க வைக்கிறது.  மனிதனுக்கு உள்ள வளர்ச்சி என்ன என்பதை சிந்தித்துப் பாருங்கள். இப்பொழுதும்கூட சில நூல்கள் பரவக்கூடாது என்று நினைக்கிறார்களே, அந்தக் கருத்துகளே பரவக்கூடாது என்று நினைக்கிறார்களே, கருத்தை கருத்தாலே சந்திப்பதுதான் நல்ல நேர்மை. அதுதான் மிக முக்கியம்.

உங்களுடைய ஒவ்வொருவருடைய வீட்டிலும் பூஜை அறையைவிட, புத்தக அலமாரிகளை உருவாக் குங்கள்.
இவ்வளவு அருமையான முயற்சி எடுத்த அத் துணை பேருக்கும் என்னுடைய மனமுவந்த பாராட்டுதல்கள்.
குறிப்பாக, நம்முடைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பெரிகாம் பதிப்பகம் ஜெயகிருஷ்ணன், விழிகள் பதிப்பகம் வேணுகோபால், வானவில் பதிப்பகம் கார்த்திகேயன், எமரால்ட் பதிப்பகம் ஒளிவண்ணன், பபாசி செயலாளர் புகழேந்தி, வாசகப் பெருமக்கள், ஊடகவியலாளர்கள், நண்பர்கள் அத்துனை பேருக்கும் எங்களுடைய அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண் டும் சந்திப்போம். இங்கே சில பேர் சில கருத்துகளை சொன்னார்கள்.

இன்னும் கொஞ்சம் விடுமுறை அதிகமாக இருக்கக்கூடிய காலகட்டத்தில் புத்தகச் சங்கமத்தை ஏற்பாடு செய்தால், நிறைய பேர் வரு வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்றெல்லாம் சொன்னார்கள்.
தாராளமாக நீங்கள் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.  அவைகளையெல்லாம் நாங்கள்  ஆய்வு செய்கிறோம்
நீங்கள் என்ன கருதுகிறீர்களோ, என்னென்ன மாற்றங்கள் இந்த புத்தக சங்கமத்தில் வரவேண்டும் என்று கருதுகிறீர்களோ, அவைகளையெல்லாம் தாராளமாக நீங்கள் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

அவைகளையெல்லாம் நாங்கள்  ஆய்வு செய்கிறோம். இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை, கருத்து வேறுபாடுகள் இல்லை. எந்தக் கருத்தாக இருந் தாலும், ஆயிரம் சிந்தனைகள் மலரட்டும்; ஆயிரம் மலர்கள் மலரட்டும்; ஆயிரம் சிந்தனைகள் உருவா கட்டும்;
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மெய்ப் பொருள் காணுவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
எனவே, புத்தகம் உங்களுக்குப் பாதுகாப்பு!
புத்தகம் உங்களுக்குக் கேடயம்!
புத்தகம் உங்களுடைய வாள்!
புத்தகம் உங்களுடைய அரண்
புத்தகம் உங்களுடைய இளமைக்கு மிகப்பெரிய வாய்ப்பு!
எனவே, புத்தகத்தைவிட நல்ல நண்பர்கள் வேறு யாரும் கிடையாது. நண்பர்கள்கூட சில நேரங்களிலே நம்மைவிட்டுப் போய்விடுகிறார்கள்; துரோகமிழைக் கிறார்கள்.
புத்தகம் ஒருபோதும் துரோகமிழைக்காது
புத்தகம் ஒருபோதும் உங்களுக்கு சங்கடத்தை உருவாக்காது.
எனவே, புத்தகத்தோடு வாழுங்கள்! புத்துணர் வோடு வாழுங்கள்!
திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ஊடகவியலாளர் குமரேசன் உள்பட பலர் நிறைவு விழாவில் பங்கேற்றனர்.  விழிகள் வேணுகோபால்  நன்றி கூறினார்.

 • காணொளி
 • அறிவுரை
 • நிகழ்ச்சிகள்
 • கார்ட்டூன்
மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக்கொள்ள வேண்டுமென்பது பொருளல்ல; இருப் பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும்.(விடுதலை, 10.6.1970)
ஜூன் 2015
S M T W T F S
week 23 1 2 3 4 5 6
week 24 7 8 9 10 11 12 13
week 25 14 15 16 17 18 19 20
week 26 21 22 23 24 25 26 27
week 27 28 29 30
Banner
 • அறிக்கை
 • மின்சாரம்
 • வாழ்வியல்
 • கருஞ்சட்டைBanner

வாசகர் கருத்துகள்

 • எதற்கு புத்தக அறை, நாம் இருப்பது கணினி உலகத்தில், ... மேலும்...
 • [quote name="unmai sudum"]வேண்டாத மாமியார் கை பட்ட... மேலும்...
 • தமிழ்வாணன் அவர்களே!ஒரு சந்தேகம் ,அல்லல்படும் தமிழ்... மேலும்...
 • என்ன சொல்ல வருகிறீர்கள் தமிழ்வாணன் அவர்களே!உத்தர ப... மேலும்...
 • உ பி மற்றும் பீகாரில் தாழ்த்தப்படவர்க ள் ஆட்சிதான்... மேலும்...