மின்சாரம்

 

'தினமலர்', 'விஜயபாரதம்', 'துக்ளக்' ஏடுகள் இப்பொழுது பிஜேபியின் அதிகாரபூர்வமற்ற அவாள் ஏடுகள், 'தினமணி'யும் அவ்வப்பொழுது தன் பூணூல் சேட்டையைச் செய்து கொண்டுதானிருக்கும்.

இவாளின் ஒரே நோக்கு - போக்கு - திமுக எப்படி யும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதுதான்.

எடுத்துக்காட்டாக இவ்வார 'துக்ளக்'கை (3.10.2018) எடுத்துக் கொள்ளலாம்.

கேள்வி: அ.தி.மு.க. முன்பு போல் அடக்கமாக இல்லாமல், மத்திய அரசை அதிகம் விமர்சிக் கிறதே என்ன காரணம்...?

பதில்: நாட்டில் அளவுக்கு மீறி ஏராளமாக கருத்து சுதந்திரம் இருப்பதால்தான், அடக்கமாக இருந்தே பழக்கப்பட்ட அ.தி.மு.க.வே துணிந்து பேசுகிறது. அப்படி இருந்தும் ஸ்டாலின், மோடி ஆட்சியில் கருத்து சுதந்திரம் பறி போய் விட்டது என்று ஒப்பாரி வைக்கிறாரே?

நமது பதில்: மோடி ஆட்சியைப் பற்றிக் கருத்துச் சொன்னாலே போதும் - மோடி ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் கொடி கட்டிப் பறக்கிறது என்பதற்கு என்றால் இது மோடி ஆட்சிக்குப் பெருமையா? அ.தி.மு.க. ஆட் சிக்குப் பெருமையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

அதுவும் எப்படியாம்? மோடி ஆட்சி பற்றி அ.தி. மு.க. துணிந்து கருத்துச் சொல்லுகிறதாம்.

நையாண்டி ஒரு பக்கம் - மோடி ஆட்சி என்றால் பெரிய கொம்பு என்ற திமிர் இன்னொரு பக்கம்.

துக்ளக் குருமூர்த்திக்கு என்ன துணிச்சல் தெரியுமா?

அ.தி.மு.க. முதல் அமைச்சர் துணை அமைச்சர் இருவரையும் ஆண்மையற்றவர்கள் (மினீஜீஷீtமீஸீt) என்று சொன்ன பொழுதுகூட அவர்கள் வாய்த்திறக்க வில்லையே! தூங்குவோரின் தூக்கம் எத்தனை டிகிரியில் இருக்கிறதோ, அந்தளவுக்கு அந்த ஆசாமி களின் தொடையில் கயிறு திரிக்கலாம் அல்லவா!

கேள்வி: விரைவில் புல்லட் நாகராஜன் விடுதலை கோரியும், நளினி, பேரறிவாளன் உட்பட அனைவருக்கும் பாரத ரத்னா விருது கோரியும் - அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தும் காலம் வருமா?

பதில்: 2019இல் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சோனியா -- ராஹுல் குடும்பத்தின் மனித நேயத்தை நிலை நாட்ட, அது ராஜீவ் கொலையாளிகளுக்கு 'பாரத ரத்னா' வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை.

நமது பதில்: 'புல்லட்' நாகராஜனை பேரறிவாள னோடு ஒப்பிடும் 'துக்ளக்'குக்கு ஒரு கேள்வி. ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்ட பேரறிவா ளனை விசாரித்த சி.பி.அய். அதிகாரி தியாகராசன், தவறாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்றும், வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ், இந்த வழக்கு விசாரணையில் தவறு நடந்து விட்டது என்றும் சொன்ன பிறகும், அவர்களைக் குற்ற வாளிகள் என்று சொல்லுகிறது 'துக்ளக்' என்றால், அதன் அடி மனதில் குடிகொண்டிருக்கும் 'துவேஷத்தை' என்னவென்று சொல்லுவது! இந்த வழக்கில் அக்கிர காரத்து அம்பி ஒருவன் சிக்கி இருந்தால் துக்ளக்கின் பூணூல் பேனா இப்படியெல்லாம் எழுதுமா?.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் மேலாளர் சங்கரராமன் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவாளின் லோகக்குரு ஜெயேந்திர சரஸ்வதியாகிய சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட நிலையில், இதே 'துக்ளக்' என்ன எழுதியது. 'பெரியவாள் விஷயத்தில் அநீதி நடந்து விட்டது' என்று ஒப்பாரி வைக்கவில்லையா? எப்படி எப்படியெல்லாம் கசிந்துருகி எழுதியது? ('துக்ளக்', 11.12.2013).

83 பிறழ் சாட்சிகள் காரணமாக விடுதலை செய்யப் பட்டவர் தான் அவர்களின் ஜெகத்குரு என்பது நினைவில் இருக்கட்டும். இதே குருமூர்த்தி அய்யர் தினமணியில் (28.11.2013) சங்கரராமன் கொலையாளி சங்கராச்சாரியார் பற்றி வரிந்து விரிந்து எழுதினாரே. அதில்கூட அவர் கைது செய்யப்பட்டது ஜெயலலிதா ஆட்சியில் என்ற ஒரு வார்த்தை கிடையாதே - காரணம் அவாள்! அவாள்!!

அக்கிரகாரப் பெண்மணியான எழுத்தாளர் அனு ராதா ரமணன் காஞ்சி மடம் சென்றபோது இவாளின் லோகக்குரு ஜெயேந்திரர், அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுக்கவில்லையா? காரித் துப்பாத குறையாக தொலைக்காட்சியில் கண்ணீரும் கம்பலை யுமாகவே கூறினாரே அந்தப் பார்ப்பனப் பெண்மணி - அப்பொழுது கூட இந்தக் குருமூர்த்தி அய்யர்வாள், அந்தப் பெண் மீது தான் இல்லாததும் பொல்லாததுமாகக் கதைகட்டினாரே தவிர, காவி வேடம் தரித்த அந்தக் காமாந்தக காம + கோடி பற்றி ஒரு வார்த்தை எழ வில்லையே!

ஜெயேந்திரர் அருளால்தான் தமது பக்கவாத நோய் குணம் அடைந்ததாக எழுத்தாளர் அனுராதா ரமணன் சொன்னதாக குருமூர்த்தி சொன்னது பற்றி கேட்டபோது - அந்த ஆளை என்முன் கொண்டு வந்து  நிறுத்துங்கள் என்று ஆவேசப்பட்டாரே அனுராதா (குமுதம், 10.1.2005 பக். 61-63) அப்பொழுது ஓடி ஒளியவில்லையா இந்தக் குருமூர்த்தி?

வீண் வம்புக்கு வந்தால் உங்கள் கொடி வழிப் பட்டியல் நாற்றமெடுத்துவிடும் ஜாக்கிரதை!

கேள்வி: பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா - இவர்களின் பகுத் தறிவுக் கொள்கைகளின் வேறுபாடு என்ன?

பதில்: பெரியார் பகுத்தறிவு 'கடவுளே இல்லை, இல்லவே இல்லை' என்ற பகுத்தறிவு. அண்ணா பகுத்தறிவு 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' பகுத்தறிவு. கலைஞர் பகுத்தறிவு 'ஹிந்து கடவுள்கள் மட்டும் இல்லை. இல்லவே இல்லை' பகுத்தறிவு. எம்.ஜி.ஆர். பகுத்தறிவு 'எம்மதமும் சம்மதமே' பகுத்தறிவு. ஜெயலலிதா பகுத்தறிவு 'இதய தெய்வம் அம்மா' பகுத்தறிவு. இந்தப் பகுத்தறிவுகளின் நினைவிடங்கள் எல்லாம் கோவில்களைப் போன்றது. அவர்கள் சிலைகள் எல்லாம் தெய்வங்கள் போன்றது.

நமது பதில்: பகுத்தறிவு என்றால் பித்தலாட்டம் என்று எழுதிய திருவாளர் சோ ராமசாமியின் சீடர்கள் பகுத்தறிவைப் பற்றி பேசலாமா?

மனிதன் என்பதற்கு அடையாளமே அவனுக்குள்ள பகுத்தறிவுதான். அதையே பித்தலாட்டம் என்று கருதுபவர்கள் மனிதப் பட்டியலிலேயே இருக்கத் தகுதியற்ற ஜந்துக்கள்தானே!

தந்தை பெரியாரின் பகுத்தறிவு கடவுள் இல்லவே இல்லை என்பதுதான் - ஒத்துக் கொள்கிறது துக்ளக். அண்ணா - ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் - அவரைப் பொருத்தவரை என்றைக்கும் எந்த கோவிலுக்கும் செல்லாதவர்தான் - அரசியலுக்காக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலர் கருத்தை எதிரொலித்தார்.

பார்ப்பனப் பாரதி கூடப் பாடவில்லையா? 'ஆயிரம் தெய்வம் உண்டென்று கூறி அலையும் அறிவிலிகாள்' என்று பாடவில்லையா? அந்த அறிவிலிகளின் பட்டியலில் குருமூர்த்தியும் இருந்தால் நாம் என்ன செய்யமுடியும்! (சமீபத்தில் குடும்பத்தோடு அவர் காசிக்குச் சென்று வந்ததை யெல்லாம் சாங்கோ பாங்கமாகத் தீட்டித் தள்ளியிருக்கிறாரே - சுய புராணத்தை எழுதித் தீர்க்க சோ ராமசாமி வீட்டு 'துக்ளக்'கை எப்படியோ கைப்பற்றிக் கொண்டு விட்டார் - அது வேறு செய்தி.

கலைஞரைப் பொருத்தவரை நாக்கைப் பிடுங்கிக் கொள்ளுமாறு கேட்டவர் கற்பழிக்காத ஒரே ஒரு உங்கள் கடவுளைச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டாரே. இன்று வரை பதில் உண்டா?

எம்.ஜி.ஆருக்காகவும் ஜெயலலிதாவுக்காகவும் நாம் ஏன் பேச வேண்டும்! ஒருவர் ஆரிய வகையறாவுக்குள் சிக்கியவர். அம்மையாரோ 'நான் ஒரு பாப்பாத்தியே' என்று சட்டமன்றத்திலேயே தம்பட்டம் அடித்துக் கொண்டவர். ஆனாலும் அந்த அம்மையார் 'ஜெகத் குருவை'க் கைது செய்து கல்தா கொடுத்துச் சிறையில் தள்ளியது விசேஷம்தான். (சும்மா சொல்லக்கூடாது ஜெயிலில் அவருக்கு வாழை இலை எல்லாம் தட்டாமல் கிடைக்க வழி செய்தார்).

தந்தை பெரியார் அறிஞர் அண்ணா கலைஞர் ஆகியோருக்கு நினைவுச் சின்னம் இருப்பது அவர் களின் கண்களைக் கருவேள் முள்ளாகக் குத்திக் குருதி யைக் கொப்பளிக்கச் செய்து விட்டதே. அந்த ஆற் றாமையை எப்படியோ வெளிவிடுகிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தலைவர்களின் சிலைகளை எந்த பகுத்தறிவாளரும் கோயிலாகக் கருதவில்லை. வரலாற்றுத் தலைவர்களின் வரலாற்று நினைவுச் சின்னங்கள் என்கிற அளவில்தான் கருதுகிறோம்.

அய்யப்பன் கொள்ளைக்காரன் - அவன் கடவுளாக ஆக்கப்படவில்லையா? பவுத்த விகாரங்கள் எல்லாம் இந்துக் கோயில்களாக உருமாற்றப்படவில்லையா?

புத்தனுக்கு இருந்த விநாயகன் என்ற பெயரை, உருட்டல் புரட்டல் செய்து இந்து மதக் கடவுளாக்கி, புத்தர் சிலை இருந்த இடங்களில் எல்லாம் இந்தப்பிள் ளையாராகிய விநாயகன் பொம்மைகளைக் வைக்க வில்லையா? (எந்தெந்த ஊர்களில் இவ்வாறு செய்யப் பட்டுள்ளது என்பது ஆய்வாளர் மயிலை சீனி வெங்கட சாமி “பவுத்தமும் தமிழும்“ எனும் நூலாகவே எழுதி வெளியிட்டுள்ளாரே!)

பவுத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக்கியது போல பெரியாரை பார்ப்பனர்கள் தொட்டுக் கூடப் பார்க்க முடியாது; அதனால் தான் அந்த சிலைப் பீடத்தில் “கடவுள் இல்லை, இல்லவே இல்லை” என்று அழுத்தம் திருத்தமாகக் கல்வெட்டாகச் செதுக்கப்பட்டு உள்ளது.

மின்சாரம்

விஷமம் - பூணூல்தனம் - இவற்றைச் சன்னமாக நுழைப் பது எப்படி என்பதைத் 'துக்ளக்'கில் தான் பாடம் கற்க வேண்டும். குறிப்பாக அதன் கேள்வி - பதில் பகுதிகளில் அக்ரகாரத்தின் ஊத்தை நாற்றத்தின் மீது வாசனைத் திரவி யங்கள் பூசப்பட்டு இருப்பதை அறிய முடியும். எடுத்துக்காட் டாக இவ்வார (26.9.2018) 'துக்ளக்'கை எடுத்துக் கொள்ளலாம்.

கேள்வி: காலில் விழ வேண்டாம், பேனர் வைக்க வேண்டாம் - என்று தன் கட்சியினருக்கு அறிவுரை கூறும் மு.க. ஸ்டாலின், பொது மக்களின் போக்குவரத்திற்கு இடை யூறாக ஊர்வலமோ, பொதுக் கூட்டமோ நடத்த வேண்டாம் என்று சொல்வதில்லையே, ஏன்?

பதில்: பந்த், மறியல், உண்ணாவிரதம், ஊர்வலம், பொதுக் கூட்டம் போன்றவற்றின் மூலமாக மக்களுக்கு இடையூறு செய்தால்தானே, கட்சி இருப்பது அவர்களுக்கு நினைவு வரும்.

கேள்வியே  தன் முரண்பாடு கொண்டது  - காலில் விழு வதையும், பேனர் வைப்பதையும் கிண்டல் செய்து வந்த வர்கள், அவற்றைத் தவிர்க்குமாறு ஒரு கட்சியின் தலைவர் சொல்லும்போது யோக்கியமான புத்தியிருந்தால் அதனை வரவேற்கத்தானே செய்ய வேண்டும். அதோடு கொண்டு போய் பொதுக் கூட்டம் போடுவது, ஊர்வலம் நடத்துவதை இணைப்பது சற்றும் பொருந்துமா?

பொதுக் கூட்டங்களும், ஊர்வலங்களும் பொதுவாக நம் நாட்டில் அவாளுக்கு அனுகூலமாக இருக்காதே! சமூகநீதிக் காகவும் பகுத்தறிவுக்காகவும், மொழி உரிமைக்காகவும் இவற்றை நடத்தினால், அவாள் வீட்டில் இடி விழுந்ததாகத் தானே இருக்கும். அதனால்தான் இப்படி இடக்கு முடக்காக எழுதுவது.

சரி... விநாயகர் ஊர்வலம் நடத்திக் கலவரம் செய் கிறார்களே, தேரோட்டம் நடத்தி போக்குவரத்துக்குப் பெரும் இடையூறுகளைச் செய்து கொண்டு இருக்கிறார்களே, பிரமோத்ஸவம் என்று சொல்லி எத்தனை நாள்கள் அல்லோல கல்லோலம் செய்கிறார்கள். அதைப்பற்றி எல்லாம் மூச்சு விடச் சொல்லுங்கள் பார்க்கலாம். மயிலாப்பூரில், அறுபத்து மூவர் விழா என்று எத்தனை நாள் 'கழுதைக் கூத்து' நடக்கிறது.... போக்குவரத்துக்கு இடைஞ்சல் கொஞ்சமா நஞ்சமா? எழுதுமா  'துக்ளக்'?

அரசுக்குச் சொந்தமான இடங்களில் எல்லாம் அத்துமீறிக் கோயில் கட்டி பொது மக்களின் நடைபாதைகளை எல்லாம் ஆக்கிரமிப்பு நடந்து கொண்டுள்ளதே - ஒரே ஒரு வரி இதுகுறித்து எல்லாம் எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம் - எழுத மாட்டார்கள் - மூச்சுவிட மாட்டார்கள் - ஏன் - அந்தக் குழவிக் கல்லுதான் அவாளின் மூலச் சொத்து - என்ன புரிகிறதோ!

இன்னொரு கேள்வி பதில்

கேள்வி: 'தி.மு.க.வினர் மு.க. ஸ்டாலின் காலில் விழுவதைத் தவிர்த்து, சால்வைகளுக்குப் பதிலாக புத்தகங்களை வழங்க வேண்டும்' - என்று தி.மு.க. தலைமை வலியுறுத்தியுள்ளது குறித்து?

பதில்: சால்வைகளை இஸ்திரி போட்டு புதிய விலைக்கே விற்று விடலாம். புதிய புத்தகங்களைக்கூட பழைய புத்தக விலைக்குத்தான் விற்க முடியும். இருந்தும் ஏன் சால்வையை புத்தகமாக மாற்றினார்கள் என்று தெரியவில்லை.

இது ஒரு பதிலாம் - சால்வைகளைத் தவிர்த்துப் புத்தகங் களை வழங்குங்கள் என்பது அறிவார்ந்த செயல் என்பதுகூட  இந்த அம்பிப் பையன்களுக்குத் தெரியாதா? அந்த சால் வைகள் எதற்குப் பயன்படும்? புத்தகங்கள் வாசிப்பு ஆர்வத் தையும், கருத்துகளைத் தெரிந்து கொள்ளவும் பயன்படும். அது கூட அவாளுக்குக் குமட்டலாக இருக்கும்.

காரணம் இந்த நூல்கள் எல்லாம் பெரும்பாலும் நூல்களின் ஆதிக்கத்தை அறுக்கும் ஆயுதங்களாக இருக்குமே அதனால் தான்! இதுவே இராமாயணமாகவும், மகாபாரதமாகவும், புராணக் குப்பைகளாகவும் இருந்தால் அப்படி எழுது வார்களா?

கல்யாண வீட்டுக்கும், கருமாதிகளுக்கும் செல்லும் புரோகிதப் பார்ப்பனர்கள் பச்சையான காய்கறிகளையும், பொருட்களையும் அடித்துக் கொண்டு வருகிறார்களே அவைகூட மளிகைக் கடைகளில் விற்பதற்காகவா?

சீன யுத்தம் நடந்த போது இந்திய தரப்பில் செத்த இராணுவ வீரர்கள் எத்தனைப் பேர் என்று ஆச்சாரியார் (ராஜாஜி) கேட்டார். பொதுவாக யுத்த காலங்களில் இதுபோல செய்திகளை எந்த நாடும் வெளியிடுவது கிடையாது - அது நாட்டு மக்கள் மத்தியிலே பீதியை ஏற்படுத்தி விடும் என்பதால்!

இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பதவி வரை வகித்த ஆச்சாரியாருக்கு இது கூடத் தெரியாத பூஜ்ஜியமா? அப்பொழுதுதான் தந்தை பெரியார் நறுக்கென்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

ஏன் ஆச்சாரியார் கேட்கிறார் தெரியுமா? செத்தவர்களின் விவரங்கள் தெரிந்தால் அந்த வீடுகளுக்ªல்லாம் கருமாந்திரக் காரியங்களைச் செய்ய அவாள் ஆத்துப் புரோகிதர்களுக்குச் 'சான்ஸ்' கிடைக்கும் அல்லவா என்று கூறினாரே, அது மாதிரி பதில்கள் தான் இந்தச் சிண்டுகளுக்கு உரைக்கும்.

கேள்வி: தமிழகம் எங்கே இருக்கிறது?

பதில்: மெரினாவில் இரண்டு நினைவிடங்களுக்கு நடுவில் நின்று கொண்டு, எங்கு செல்வது என்று தெரியாமல் திண்டாடுகிறது தமிழகம் - இது ஒரு பதில்.

கேட்ட கேள்வி என்ன? அதற்குச் சொல்லப்படும் பதில் என்ன?

பார்ப்பனர்களின் நினைப்பெல்லாம் பார்ப்பனர் அல்லாத மக்களை அவர்களின் தலைவர்களைப் பற்றிதான்.

சென்னைக் கடற்கரையில் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்கள் இருக்கிறதாம். அதைப் பொறுக்க முடியவில்லை இந்த உஞ்சி விருத்திக் கும்பலுக்கு.

அண்ணாவும், கலைஞரும் மறைந்து மண்ணுக்குள் போனாலும் இந்த மடி சஞ்சிக் கூட்டத்தை அன்றாடம் உலுக்கிக் கொண்டே இருக்கிறார்களே.

இந்தத் தலைவர்களும், இவர்களுக்கெல்லாம் தலைவரான பெரியாரும் செய்த வேலைகளால் அல்லவா - உச்சிக் குடுமியோடு வெளியில் நடமாட முடியவில்லை - பூணூல் மேனியோடு பயணம் செய்ய முடியவில்லை. ஒரு காலத்தில் இப்படியெல்லாம் சென்றால் 'வாங்க சாமி' என்று கும்பிட்டு ஒதுங்கிச் சென்ற கூட்டம், இன்று கேலி செய்யும் நிலைக்கு ஆளாகி விட்டோமே என்ற ஆத்திரம் அவாளை இப்படியெல்லாம் 'அர்ச்சனை' செய்ய வைக்கிறது.

கேள்வி: 'மெரினா கடற்கரையில் கூட்டம், போராட்டம் நடத்த அனுமதியில்லை' என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பற்றி?

பதில்: மெரினா கடற்கரையில் அமைதி வேண்டும் என்பதற்காகத் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றத்துக்கு நன்றி. ஆனால், ஏன் நீதிமன்றம் அங்கு மயான அமைதி வேண்டும் என்று நினைக்கிறது என்று தெரியவில்லை.

- இப்படியொரு பதில்.

"மயான அமைதி" இந்த வார்த்தையின் பின்னணியில் என்ன இருக்கிறது என்று புரிகிறதா?

அண்ணா, கலைஞர் உடல்கள் அங்கே புதைக்கப் பட்டுள்ளதால் அது மயானமாம் - அதாவது இடுகாடாம். அதற்கு கலைஞரை அங்கே அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்து விட்டதாம் - அந்த ஆத்திரத்தைத் தீர்த் துக் கொள்ளத்தான் இப்படிப்பட்ட வார்த்தைப் பிரயோகம்!

கோடானு கோடி மக்களின் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய  தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் வேலையில் இறங்கி அவர்களைச் சீண்டுவது நல்லதா?

இதே இடத்தில் பார்ப்பனப் பிரமுகர்களை அடக்கம் செய்திருந்தால் இப்படி எழுதுவார்களா? ஏன் ஜெயலலிதாவை இதே கடற்கரையில் அடக்கம் செய்தபோது 'துக்ளக்' இப்படி எழுதியதா?

பார்ப்பனர் அல்லாத மக்களே, தொண்டர்களே, இந்தப் பார்ப்பனர்களை அடையாளம் காணுங்கள்!

‘‘90 வயதைக் கடந்த தொண்டறச் செம்மல்களே நீவிர் நீடு வாழ்கவே!''

காணக் கண்கோடி வேண்டும் என்பார்கள். எதற்குப் பொருத்தமோ இல்லையோ தந்தை பெரியார் 140 ஆம் ஆண்டு பிறந்த நாளான நேற்று (செப்டம்பர் 17) தொண்ணூறு வயதைக் கடந்த தொண்டறச் செம்மல்களுக்குப் பாராட்டு - வாழ்த்து - விருதளிப்பு என்ற வகையில், நடைபெற்ற அந்த நிகழ்ச்சிக்கு நூற் றுக்கு நூறு பொருந்தக் கூடிய பேறு பெற்ற பெருமைமிகு விழாவேயாகும்.

அது வெறும் ஒரு நிகழ்ச்சியல்ல - நெகிழ்ச்சி ததும்பிய உன்னத விழாவாகும்! தந்தை பெரியார் அவர்களின் தன்னல மறுப்புக் கொள்கை - அவ்வளவு எளிதாக எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று! அதுவும் இன்றைக்குத் தொண்ணூறு ஆண்டுகளுக்குமுன் என்றால், நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறக் கூடியது.

சூனா மானாவா... கடவுள் இல்லை என்பவனா? ஜாதி கூடாது என்கிற ஜாதி கெட்டவனா? மதத்தை ஒழிக்க வந்துவிட்டாயோ! ஆச்சார அனுஷ்டானங்கள் கூடாதா?

அய்யர் இல்லாத கல்யாணமா? மந்திரங்கள் கிடையாதா? கொலை விழும் ஜாக்கிரதை!  என்ற உருட் டல்களும், மிரட்டல்களும் நிறைந்த ஒரு காலகட்டத்தில் ஊருக்கு ஒருவர் உலவ முடியும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது!

ஆனாலும், ஊருக்கு ஒருவராய், தந்தை பெரியாரின் தொண்டராய் கருஞ்சட்டை வீரராய்க் கம்பீரமாகப் பவனி வந்தார்களே - அந்தக்  கால வாலிபர்கள் - தொண்ணூறு வயதினைத் தாண்டிய இந்தப் பருவத்தில் கையில் தடியூன்றி பக்கத்தில் ஒருவரின் அரவணைப்போடு பெரியார் திடலில் ஒவ்வொரு அடியாக நிதானமாக எடுத்து வைத்துத் தள்ளாடி தள்ளாடி வந்தார்களே - அந்தக் காட்சியைப் பார்க்கும்பொழுது கல்நெஞ்சர் களையும் கண் கலங்க வைக்கத்தான் செய்யும்!

அடேயப்பா, எத்தனை எத்தனைப் போராட்டங்கள் - எத்தனை எத்தனை சிறைவாசங்கள்! எதிர் வழக்குக்கூட ஆடாமல் சிரித்த முகத்தோடு நமது கொள்கையை ஈடேற்ற கொடுக்கவேண்டிய விலை என்று வாலிப முடுக்கோடு சிறைக்கோட்டம் ஏகிய அந்தச் சீலர்கள் 24 பேர் தள்ளாத வயதில் தடியூன்றி வந்தனரே - பொக்கை வாயில் புன்சிரிப்பு மலர் விரித்து வந்த காட்சி கண்ணுள்ளவரை ஒளிவீசிக் கொண்டே இருக்கும்.

ஆம்! அவர்களுக்கு அய்யா விழாவில் பாராட்டு - வாழ்த்து - விருதளிப்பு!

தொண்ணூறு வயது நிறைந்த அந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் இவ்வளவு பேர்தானா? என்று தப்புக் கணக்குப் போடவேண்டாம்.

எண்ணற்றோர் தமிழ்நாட்டில் இன்னும் இருக் கிறார்கள். ஆனால், அவர்களின் உடல்நிலை பயணம் செய்வதற்கு ஒத்துழைக்காத நிலை - வருவதாக இருந்த இன்னும் சிலரும்கூட கடைசி நேரத்தில் ஒத்துழைக்காத உடல்நிலை அவர்களை வீட்டிலேயே முடக்கி விட்டது. ஆனாலும், அந்த முதுபெரும் பெரியார் தொண்டர்களின் மனம் மட்டும் பெரியார் திடலை வட்டமிட்டுக் கொண்டேதான் இருந்திருக்கும்.

நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தின் மேடை யில் அத்துணைப் பேருக்கும் இருக்கை வசதிகள் அளிக்கப்பட்டு, அவரவர்களின் பெயர்களும் ஒட்டப் பட்டிருந்தன.

பெரியார் திடல் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்கள் ஒவ்வொருவரையும் அன்போடு கைகொடுத்து அழைத்து வந்து இருக்கைகளில் அமர வைத்தனர்.  நிகழ்ச்சி முடிந்து அவர்கள் ஊருக்குப் பயணம் செய்யும்வரை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டனர். அவர்கள் அமர்ந்தபோதெல்லாம் பார்வையாளர்கள் மத்தியிலிருந்து ஓயா அலைகள்போல கைதட்டல், கைதட்டல்கள்!

சிறப்பு விருந்தினராக தி.மு.க. பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் (வயது 96), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு (வயது 93) ஆகியோரும் மேடையில் அமர்ந்திருந்தனர்.

நிகழ்ச்சிக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார்.

இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்திடவேண்டும் என்ற கருத்துரு உருவானது நமது தலைவர் ஆசிரியர் அவர்களிடத்தில்தான். உண்மையிலேயே அவருக்கே உரித்தான ஒப்புயர்வற்ற உன்னதமான வரலாறு போற்றும் உயர் சிந்தனையாகும்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற தோழர் நல்லகண்ணு அவர்கள் அதனைச் சரியாகவே கணித்துச் சொன்னார். இந்தச் சிந்தனை உன்னதமானது - யாருக்கும் தோன்றாதது; தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயேகூட இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடந்ததே கிடையாது என்பதை மிகுந்த பூரிப்போடு எடுத்துச் சொன்னபோது, மிகப்பெரிய கரவொலி!

அவர் மேலும் உதிர்த்த கருத்து மணிகள் முக்கியமானவை. நான் மாணவர் பருவத்தில் பொதுவுடைமை இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன் என்றாலும், பெரியார் அவர்களின் கருத்துகள் என்னைக் கவர்ந்தவை. இன்றைக்குக்கூட மதவாத சக்திகளுக்கு மாபெரும் எதிரியாகக் காணப்படுபவர் பெரியாரே! அவர் இந்தக் காலகட்டத்தில் மிகமிகத் தேவைப்படக்கூடிய தலைவராக இருக்கிறார். அவர் மறைந்திருக்கலாம்; ஆனாலும், அவர் கொள்கைகள் மறையவில்லை; மறையக் கூடாதவை.

பெரியாரின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய மிகப்பெரிய தலைவர் நமது ஆசிரியர் என்று சுருக்கமாக - அதே நேரத்தில் செறிவாகத் தம் கருத்தினைப் பதிவு செய்தார்கள்.

பாராட்டு - விருதளிப்பு

முதலாவதாக தி.மு.க. பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை போர்த்தி அவரது தொண்டறத்தைப் பாராட்டி விருதினை வழங்கினார். இயக்க நூல்களைக் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அளித்தார்.

அடுத்து தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு அவ்வாறே சிறப்பு செய்யப்பட்டது.

97 அகவையில் அடியெடுத்து வைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள், பயணம் செய்ய இயலாத உடல் நிலையில், அவர் கட்சியின் சார்பில் தமிழ்நாடு ஜனநாயக மாதர் சங்கப் பொதுச்செயலாளர் தோழர் பி.சுகந்தி சிறப்பினைப் பெற்றுக்கொண்டார்.

101 வயதில் நடைபோடும் திருச்சி ஞான செபாஸ்தியான் அவர்கள் சார்பில் அவரது மகள் டாக்டர் மங்கையர்க்கரசி அவர்களுக்கும், காஞ்சி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அ.கோவிந்தன் (வயது 95) சார்பில் அவரது மகன் வடசென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோபால் அவர்களும், தூத்துக்குடி தவமணி (வயது 90) அவர்கள் சார்பில் மகன் பொன்ராஜ் அவர்களும், மு.காந்தியம்மாள் (வயது 98) சார்பில், பேத்தி ஓவியா அவர்களும் சிறப்பினைப் பெற்றனர்.

தொடர்ந்து ஒவ்வொரு தொண்டறச் செம்மல்களின் பெயர் வாசிக்கப்பட்டு, அவர்களைப்பற்றிய சிறு குறிப்பு - ஒலி ஒளியாகத் திரையிடப்பட்டது. தோழர்கள் அமுதரசன், பா.மணியம்மை, இறைவி ஆகியோர் குறிப்புகளைக் கூறிக்கொண்டே இருந்தனர்.

ஒவ்வொரு முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்து, பாராட்டு விருதினை அளித்து, நூல்களும் வழங்கப்பட்டன. அப்பொழுது ஒவ்வொருவருடைய நலனையும் கழகத் தலைவர் விசாரித்தபோது, அந்த பழைய கருஞ்சட்டை வாலிபர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும், உணர்ச்சிக்கும் அளவே இல்லை. ஒவ்வொருவருக்கும் சிறப்பு செய்யும்பொழுதெல்லாம் மன்றம் நிறைந்த பார்வையாளர்கள் பெருத்த கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்திக் கொண்டனர்.

எல்லோருக்கும் சிறப்புச் செய்யப்பட்ட பின், பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று (ஷிtணீஸீபீவீஸீரீ ஷீஸ்ணீtவீஷீஸீ) கரவொலி எழுப்பிய காட்சி காணற்கரியது!

ஆனந்தப் பெருக்காய் அனைவரின் கண்களிலும் நீர்த் திவலைகள் ததும்பின. பட்டம், பதவி, பவுசுகளை மட்டுமல்ல; நன்றியையும், பாராட்டையும் கூட எதிர்பாராத இந்தப் பெரியார் பெருந்தொண்டர்களாகிய செம்மல்களுக்கு ஈடு இணை இந்த உலகத்தில் ஏது? ஏது? இவர்களுக்கு நாம் என்ன கைமாறுதான் செய்யப் போகிறோம்!

இறுதியாக, தலைமையுரை - நிறைவுரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், மிகுந்த உருக்கத்தோடும், நெகிழ்ச்சியோடும் உள்ளத்தின் உதடுகளால் பேசினார்.

இங்கே பாராட்டப்பட்ட பல பேர் சிறு வயதில் நான் பேச வந்தபோது மேடையில் ஏற்றி நிற்க வைத்தவர்கள். பேச வைத்தவர்கள் என்று சொன்னபோது அரங்கமே உணர்ச்சியின் பிடியில்!

ஆம், அவர்கள் தோள்களில்தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம் (பலத்த கரவொலி) என்று நன்றி ததும்பப் பேசினார் ஆசிரியர்.

தொடக்கத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார். என்னுடைய தொண்டர்கள் துறவிகளுக்கும் மேலானவர்கள்; துறவிகளுக்குக்கூட அடுத்த ஜென்மத்தில் மோட்சம் கிடைக்க ஆசைப்படுவார்கள். எங்கள் தொண்டர்களுக்கோ அதிலும் நம்பிக்கை கிடையாது. எனவே, அவர்கள் துறவிகளுக்கும் மேலானவர்கள் என்று தந்தை பெரியார் கூறியதை தன் வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

அறிமுகவுரையாற்றிய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், உலகில் அதிக வயது வாழ்பவர்கள் கடவுள் மறுப்பாளர்களான நாத்திகர்கள்தான் என்பதை மருத்துவ ரீதியான ஆய்வுகள் கூறுவதைப் பட்டியலிட்டுக் காட்டினார். அந்தப் பட்டியலில் இடம்பெறுபவர்கள்தாம் பெரியார் பெருந்தொண்டர்கள் என்றார்.

நிகழ்ச்சிக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்க, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர் க.பார்வதி நன்றி கூறினார்.

இனமான பேராசிரியர் க.அன்பழகன் சார்பில், பிரபல இருதய நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம் ஏற்புரையாற்றினார். பெரியார் பெருந்தொண்டர்கள் நீண்ட காலம் வாழ்வதற்குக் காரணம், அவர்கள் கடைபிடிக்கும் பகுத்தறிவுதான் என்றார்.

* மின்சாரம்

தோழர்களே, தோழர்களே!

வரும் சனியன்று (8.9.2018) அனைவரும் மன்னார் குடியிலே சந்திக்க இருக்கின்றோம்.

இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட நிகழ்ச்சி ஒன்று வரும் 8ஆம் தேதி மன்னையிலே நடக்கவிருக்கிறது.

திராவிட இயக்க வரலாற்றில் மன்னார்குடிக்கு எத்தனை எத்தனையோ புகழ் மணக்கும் அத்தியாயங்கள் உண்டு. எதைச் செய்தாலும் எழுச்சியோடு செய்து பழக்கப் பட்டவர்களாயிற்றே -  அந்த வகையில் சனியன்று நடக்கவிருக்கும் நிகழ்ச்சியும் சிறப்பாகவே இருக்கும் என்று இப்பொழுதே எழுதி வைத்துக் கொண்டு விடலாம்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் இயக்கப் போராட்டத்தின் வெற்றி விழா மாநாடு தான் அது.

அப்படி என்ன மன்னார்குடிக்கு சிறப்பு? தஞ்சை மாவட்ட மன்னார்குடி கழகக் கட்டடத்தில் 20.10.1969 அன்று தஞ்சை மாவட்ட திராவிடர் கழகக் கமிட்டிக் கூட்டம் தந்தை பெரியார் தலைமையில் கூடியது.

அந்தக் கமிட்டிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் மன்னார்குடி இராஜகோபால்சாமி கோயிலில் சூத்திரன் என்னும் இழிவு நீக்கக் கிளர்ச்சியான கோயில் கர்ப்பக் கிரக நுழைவுக் கிளர்ச்சியை நடத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது. மறைந்தும் நம் நெஞ்சில் மறையாத சுயமரியாதைச் சுடரொளி மன்னை ஆர்.பி. சாரங்கன் கிளர்ச்சிக் கமிட்டியின் தலைவர்.

இன்றைக்கு 49 ஆண்டுகளுக்கு முன் மன்னார்குடியில் எடுக்கப்பட்ட அந்தத் தீர்மானத்திற்கு இப்பொழுது வெற்றி கிடைத்திருக்கிறது என்றால் அதன் மணத்தைச் சுவைக்க வேண்டிய இடம் மன்னார்குடியாகத்தானே இருக்க முடியும்.

எப்பொழுதோ இந்த வெற்றி நமக்குக் கிடைத்திருக்க வேண்டும். நாம் தமிழ் நாட்டில் போட்ட விதை கேரளாவில் முன்னதாகவே முளைத்து விட்டது. ஆறு தாழ்த்தப்பட்டவர் உட்பட 36 பார்ப்பனர் அல்லாதார் கோயில் அர்ச்சகர்களாக அங்கு நியமிக்கப்பட்டனர்.

இந்தியா முழுமைக்கும் ஒரே சட்டம்தானே - கேரளாவுக்குப் பொருந்தக் கூடியது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாதா?

2015இல்  உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தும் மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் தூக்கம் கலைந்தது. இவ்வளவுக்கும் தீர்ப்பை நினைவூட்டி முதல் அமைச்சருக்கு அதிகாரப் பூர்வமாக கடிதமே எழுதினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள். நேரிலும் வற்புறுத்தப்பட்டது அசைவதாகத் தெரியவில்லை.

அதற்குப் பிறகு மாநாட்டை நடத்தினோம். மறியல் போராட்டத்தை நடத்தி 5000 கருஞ்சட்டையினர் கைதும் செய்யப்பட்டதுண்டு.

1937ஆம் ஆண்டு முதலே தந்தை பெரியார் குரல் கொடுத்து வந்திருக்கிறார். 1958இல் திருச்சியில் கூடிய ஜாதி ஒழிப்பு மாநாட்டில் கூடத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதுண்டு.

எந்த உரிமையையும் நாம் இலவசமாகப் பெற்ற தில்லையே -  அதற்குரிய கஷ்ட நஷ்டம் என்னும் விலை கொடுத்துதானே வந்திருக்கிறது கழகம்.

இப்பொழுது மதுரையில் அர்ச்சகராகத் தேர்வு செய்யப்பட்ட பார்ப்பனர் அல்லாத தோழரான மாரிசாமி கூட  தகுதி - திறமையின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஓர் இடத்திற்கு ஆறு பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அதில் நால்வர் பார்ப்பனர், இருவர் பார்ப்பனர் அல்லாதார்.

இந்த அறுவரில் ஆகமங்களைத் தெரிந்து வைத்திருந்த திலும், மந்திரங்களை சரியாக உச்சரிப்பதிலும் முதல் இடம் பிடித்தவர் பார்ப்பனர் அல்லாத தோழரான மாரிசாமி.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 பேர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

108 வைணவக் கோயில்களுள் உள்ள பட்டர்களுள் வெறும் 30 கோயிலில் உள்ளவர்களுக்குத்தான் ஆகமம், மந்திரங்கள் தெரிந்துள்ளன என்று நீதிபதி திரு. ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு நேரில் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 116 அர்ச்சகர்கள் இருக்கின்றனர் என்றால் 28 பேர் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள். சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களுள் நான்கு அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே ஆகமம் தெரிந்துள்ளது.

இவ்வளவுக்கும் நீதிபதி திரு. ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையிலான அந்தக் குழுவில் சிவாச்சாரியார்களும், பட்டர்களும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு காலத்திற்குத் தான் ஆதிக்கப்புரியினர் ஆட்டம் போட முடியும்?

தந்தை பெரியார் தொடங்கியதில் எது தோல்வி கண்டிருக்கிறது? தந்தை பெரியார் அவர்களின் அந்த இறுதிப் போராட்டம் - அவர்கள் இன்று உயிருடன் இல்லை என்றாலும் அவர்களின் கொள்கை வென்று விட்டதே - அய்யாவின் கட்டளையை ஏற்று சட்டமியற்றிய மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் அவர்கள் மறைவதற்கு முன்பாகவே தோழர் மாரிசாமி மதுரைக் கோயில் ஒன்றில் அர்ச்சகராகி விட்டார்.

எஞ்சியிருக்கும் 200க்கும் மேற்பட்ட அர்ச்சகர் பயிற்சி பெற்றோர்களும் நியமிக்கப்பட வேண்டும்.

அதற்கான அழுத்தத்தையும் மன்னார்குடி மாநாடு கொடுக்கும். பயிற்சி பெற்று பணி நியமனத்துக்கு முன்னதாகவே மரணத்தைத் தழுவிக் கொண்டோர் தம் குடும்பத்தினருக்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும்.

பெண்களுக்கு அர்ச்சகர் உரிமை என்ற நமது அடுத்த கட்ட போர்க் குரலை தமிழர் தலைவர் கொடுத்து விட்டார். இதுகூட புதிதல்ல; 1981 மே 9 இல் கரூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்திலேயே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் அது.

மகாராட்டிர மாநிலத்தில் பாந்தார்ப்பூர் நகரில் உள்ள 900 ஆண்டு பழமை வாய்ந்த விட்டல் ருக்மணி அம்மன் கோயிலில் உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி 16 பெண் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு விட்டனரே!

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஒரு முக்கிய மைல் கல்லைக் கடந்து விட்டோம் என்று சொல்லும் பொழுது ஒரு கம்பீரம் நம்மை அறியாமலே ஏற்படவில்லையா! நமது நடையில் ஒரு புது மிடுக்கு இருக்கவில்லையா!

அந்த உணர்வோடு மன்னை நோக்கி வாரீர் வாரீர் என்று அழைக்கிறோம். தமிழர் தலைவரோடு, நமது தோழர் முத்தரசன் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர்) அவர்கள்  முழக்கமிட இருக்கிறார்கள் - மிடுக்கோடு வாரீர் தோழர்களே!

* மின்சாரம்

மூடநம்பிக்கையைக் கண்மூடித்தனமாகப் பரப்புவது என்பதுதான் பார்ப்பனர்களின் உயிர் மூச்சு.

மூடநம்பிக்கைப் பொதிச் சேற்றில் மூழ்கடிக்கப்பட்டால் - மூளையில் அந்த விலங்கை மாட்டிவிட்டால் மாட்டு மூத்திரம், சாணியைக் கலந்து கொடுத்தாலும் பஞ்ச கவ்யம் என்று நம்பி தட்சணை கொடுத்துக் குடிப்பார்களே - குடிக்கவும் வைத்து விட்டார் களே!

ஜெகத் குரு என்று தலையில் தூக்கிக் கூத்தாடும் கும்பல் - அந்த சங்கராச்சாரியாரை ஒரு டம்ளர் மாட்டு மூத்திரத்தையும், மாட்டுச் சாணியையும் கரைத்துக் குடிக்கச் சொல் லுங்கள் பார்ப்போம் என்று எந்தப் பக்தனும் கேட்க மாட்டான்; காரணம் அவன் புத்திதான் மூக்கு முட்ட மூடநம்பிக்கையில் புரையேறிக் கிடக்கிறதே. மூளையில் விலங்கு முளைக் குச்சி அடித்து மாட்டப்பட்டுள்ளதே.

கடைசிக் குழவிக்கல் (அதுதான் கடவுள்) இருக்கும் வரைக்கும் பார்ப்பன ஆதிக்க மூச்சுக் காற்று இழுத்துக் கொண்டுதான் இருக்கும்.

கடவுளும், மதமும் கெட்டாக வேண்டுமானால் பார்ப்பான் கெட்டாக (இல்லாமல் போக) வேண்டும் - அவன் கெட்ட இடம்தான் கடவுள் மதம் கெட்ட இடமாகும் என்கிறார் பகுத்தறிவுப் பகல வன் தந்தை பெரியார் (விடுதலை, 24.4.1967).

பார்ப்பானும், இந்தக் கடவுள் மத சமாச்சாரங்களும் ஒன்றோடு ஒன்று ஈர்த்து நிற்கும் நகங்களும் - சதைகளுமே!

அதனால்தான் கோயில் சிலைகள் திருடு போனாலும், கோயில்கள் தீயினால் சாம்பலா னாலும் அந்தக் கடவுள்களுக்கும் சக்தி உண்டு என்று கொஞ்சம்கூட அறிவு நாணய மின்றிக் கரடியாகக் கத்திக் கொண்டே திரிவார்கள்.

பாலியல் உணர்வு மனிதர்களுக்கு உண்டு - அது கவர்ந்து இழுக்கக் கூடிய இயற்கை உணர்வு என்பதைப் புரிந்து கொண்ட இந்தக் கூட்டம், கடவுள் சமாச்சாரங்களுக்குள் பாலி யல் உணர்வையும் தாண்டி - ஆபாசக் கதை களாகப் புனைந்து புகுத்தித் தள்ளியிருக் கிறார்கள்.

நூறு தேவ வருட காலம் சிவனும், பார்வதியும் புணர்ந்தனர் என்று கொஞ்சம் கூட அருவருப்பின்றி பக்தித் தேனில் குழைத்துக் கொடுக்கிறார்கள்.

இயற்கைப் பேரிடரால் - வெள்ளத்தின் பெரு வீச்சால் தத்தளித்து விழி பிதுங்கிப் போனது கேரளா என்கிற போது - மனிதப் பண்பும், நேயமும் இரக்கமும் உள்ளவர் கள் கிறங்கிப் போகத்தான் செய்வார்கள்.

ஆனால் துக்ளக் குருமூர்த்தி அய்யர் வாள், வீடு தீப்பற்றி எரியும் பொழுது அதில் சுருட்டுப் பற்ற வைக்கும் பாதகன்போல, அய்யப்பன் கோயிலுக்குப் பெண்கள் போகலாம் என்று சொல்லுவதா? அய்யப் பனின் கோபத்தால் ஏற்பட்டதுதான் இந்த இயற்கைப் பேரிடர் என்று எழுதுகிறார் என்றால் - இவர்களின் உள்ளத்தில் குடி யிருப்பது கூறுகெட்ட, ஈவு இரக்கமற்ற பார்ப்பனக் கோணல் புத்திதானே.

கடவுள் தேசம் என்று வெட்கமில் லாமல் - கேரளாவை சொல்லுகிறார்களே. அந்தக் கடவுள் தேசம் எப்படி இயற்கைச் சீற்றத்தால் சின்னாப்பின்னம் ஆனது என்ற கேள்வி எழாதா?

கருணையே உருவானவன் கடவுள் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை வெள்ளத்தின் மூலம் வாரிக் கொண்டு போகச் செய்கிறானே கடவுள் - என்று எழுத முடியவில்லையே ஏன்?

தாம் எழுதுவது முரண்பாடானது என்றுகூட சிந்திக்கும் திறனை இழக்கும் அளவுக்கு அவர்களின் தன்னல ஆதிக்கம் தலை குதித்தாடி நிற்கிறதே.

அய்யப்பன் சக்தி ஆக்கத்திற்கா - அழிவுக்கா? அதைவிட இன்னொரு சேதி உண்டு, அதனைப் படித்தால் புழுத்த ஈ எறும்பு கூட வாயால் சிரிக்காது.

இதே அய்யப்பன் கோயிலும், சாமியும் 1952இல் தீப்பிடித்து எரிந்து சாம்பலான கதை தெரியுமா? கோயிலும், அய்யப்பனும் வெடித்துச் சிதறியதோடு நின்று விட வில்லை; 60 பக்தர்கள் பலியானார்களே!

தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத வக்கற்ற கடவுளுக்கு சக்தி எந்த மூலையில் ஒளிந்து கிடக்கிறது?

மதுரை பி.டி.ராஜனும், நவாப் ராஜ மாணிக்கமும் முயற்சி எடுத்தல்லவா கோயி லையும், அய்யப்பனையும் புதுப்பித்தார்கள்.

1999ஆம் ஆண்டில் இதே அய்யப்பன் கோயிலில் கூட்ட நெரிசலில் 52 பேர் பலியானார்களே.

2011 ஜனவரி 14 - ஒரு பொங்கல் நாளில் ஏற்பட்ட விபத்தில் 102 பக்தர்கள் மிதிபட்டுச் செத்தனரே!

தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை; தன்னை நாடி வந்த பக்தர்களையும் காப்பாற்றத் திராணியற்ற கடவுளுக்காக இந்தப் பார்ப்பனர்கள் அடேயப்பா எப்படியெல்லாம் தில்லு முல்லுப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இப்பொழுது மட்டுமல்ல; ஒவ்வொரு கட்டத்திலும் இந்தப் பாழாய்ப்போன பார்ப்பனீயம் இந்தப் பித்தலாட்டத்தைச் செய்து கொண்டேதான் இருக்கிறது.

2013ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடு மழையால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டார்களே - அப்பொழுதுகூட என்ன சொன்னார்கள்?

உத்தரகாண்ட் மாநிலத்தில் அலக்நந்தா நதியையொட்டி யிருந்த தாரிதேவி கோயில் அதிரடியாக அகற்றப்பட்டதால் தான் அந்தக் கோரம் நடந்தது என்று சொன் னார்களே.

இன்னொன்றும் நினைவு இருக்கலாமே.

காங்கிரசுக் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மாட்டுக் கறி சாப்பிட்டுவிட்டு கேதார்நாத் யாத்திரை மேற்கொண் டதாலேயே நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி   சாமியார் கூறிடவில்லையா?

நேபாள நாட்டில் 2015 ஏப்ரல் 25 அன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 4 ஆயி ரம் பேர் உயிரிழந்தார்கள். அரித்துவாரில் பா.ஜ.க.வின் சர்ச்சை எம்.பி. சாக்ஷி சாமியார் செய்தியாளர் களிடம்  கூறுகையில், காங்கிரசுக் கட்சியின் துணைத் தலை வர் ராகுல் காந்தி மாட்டுக் கறி சாப்பிட்டு விட்டே கேதார்நாத் சென்றார். அவர் தன்னை தூய்மையாக வைத்திருக்கவில்லை. இதனால்தான் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றார்.

இந்த பேட்டியின் போது விசுவ இந்து பரிசத்தின் சர்ச்சைக்குரிய தலைவர்களில் ஒருவரான சாமியாரிணி பிராச்சியும் உடனி ருந்தார்.

பாஜக எம்.பி. சாக்ஷியின் இந்த விமர் சனத்துக்கு காங்கிரசு கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.

டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரசு கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் கூறியதாவது:

பா.ஜ.க. எம்.பி. சாக்ஷி சாமியார் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளையே பேசி வருகிறார்.

இந்துப் பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்; காந்தி கொலை யாளிகளுக்குப் பாராட்டு தெரிவிப்பது என் றெல்லாம் கூறியவர்.  தற்போது ராகுல் காந்தி கேதார்நாத் சென்றதற்கும், நிலநடுக்கத்துக்கும் தொடர்புபடுத்தி பேசி வருகிறார்.

இத்தகைய பேச்சுகளுக்காக அவர்மீது பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாரே! (ஒன் இந்தியா இணையம், 28.4.2015)

2018ஆம் ஆண்டிலும், சந்திர மண்டலத் திலே குடியேறுவது பற்றிய சிந்தனை வட்டமிட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர் - படித்த பார்ப்பனர் - ஆடிட்டர் பார்ப்பனர் - பத்தி ரிகைப் பார்ப்பனர் - ஜெகத் குருக்கள் மக்களின் அறிவின் மீது சம்மட்டி அடியைக் கொடுத்துக் கொண்டு திரி கிறார்கள் - பக்தியின் பெயரால் பகுத் தறிவைப் பாழ்படுத்தி, தங்கள் கால்களை நக்கிக் கிடக்க வேண்டும் என்ற போக் கிரித்தனமான எண்ணத்தில் நொடி தோறும் நொடி தோறும் திட்டம் தீட்டுகிறார்கள், செயல்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டால் பார்ப்பனர்கள் பிறப்பின் அடிப்படையிலேயே - அவர்களின் மரபு அணுக்களிலேயே குற்ற உணர்வு எனும் குறைபாடு குடி கொண்டு இருக்கிறது என்று தானே கருத வேண்டும் - பார்ப்பனர் அல்லாதார் சிந்திப்பார்களாக!

Banner
Banner