மின்சாரம்

*மின்சாரம்

ஒழுக்கத்தைப் பற்றியும், பாலியல் வன்புணர்வு குறித்தும் இந்துத்துவாவாதிகளா பேசுவது?

உங்கள் வேதங்களும், சாஸ்திரங்களும், இதிகாசங்களும், புராணங்களும், ஆபாசக் கழிசடைச் சாக்கடைகள் அல்லாமல் வேறு என்னவாம்? உங்கள் கடவுள்களின் யோக்கியதை தான் என்ன?
கற்பழிக்காத கடவுள் உண்டா என்று கலைஞர் பெருமான் ஒரு முறை விடுத்த வினாவுக்கு இதுவரை விடையுண்டா?

"அபுத்ரா குர்வனுஜ்ஞாதாதேவரம்

புத்ரகாம்யயா:

ஸபிண்டம்வா ஸகோத்ரம்

வாக்ருதாப்யக்தம் ருதரவிராத்" (யாக்ஞவல்கியர்)

பொருள்: தனது நாயகன் இறந்துவிட்டால் அல்லது புத்திரனை உண்டு பண்ணத் தகுதியில்லாவிட்டால், புத்திரப் பேற்றை விரும்புகிற ஸ்திரீயானவள் பெரியோர்களின் அனுமதியைப் பெற்று ருதுகாலத்தில் உடம்பில் நெய்யைப் பூசித் தன் கணவனது சகோதரன் அல்லது அந்தக் குலத்தில் யாரையேனும் புணர்ந்து கொள்ளலாம். இவ்விதம் "அசர்ப் பஸம்பவாத" கருத்தரிக்கிறவரைக்கும் செய்து கொள்ளலாம். இதனால், கற்புக்கு அழிவில்லையென்றும், ஸ்மிருதி கூறுகின்றது.

இதுதான் குருமூர்த்திகள் கூறும் கற்பின் இலட்சணமா?

இன்னும் உண்டு, இன்னும் உண்டு இவாளின் ஆபாசப் பெருங்கடல்.

புத்திரகாமேஷ்டியாகம் என்ற ஒன்றை நடத்துவார்களே ஆரியர்கள் - தசரதன்கூட அதை நடத்திதான் இராமன் உள்ளிட்ட புத்திரர்களைப் பெற்றானாம்!

முற்காலங்களில் யஜமானனுக்கும், (யாகஞ் செய்வோ னுக்கு) பலபேர் பத்தினிகள் இருந்தனர். அசுவமேத யாகம் செய்யும்போது, பத்தினிகள் எல்லோரும் கைகளில் பானேஜனம் வைத்துக் கொண்டு குதிரையின் பக்கத்தில் வருகிறார்கள். பிறகு கீழ்க் குறித்திருக்கிற மந்திரத்தைச் சொல்லி, ஒன்பதுதரம் குதிரையைச் சுற்றி வரல் வேண்டும்.

அதன் விவரம்:- மந்திரத்தின் முதற்பகுதி சொன்னவுடன், ஒருதரம் வலமாகவும், பிறகு ஒன்றும் சொல்லாமல் இரண்டு தடவைகளும் இடமாகச் சுற்றிவரல் வேண்டும். நான்காவது முறை மந்திரத்தில் இரண்டாவது பகுதியைச் சொல்லிக் கொண்டு ஒருதரமும், மவுனமாக இரண்டு தடவைகளும் இடமாகச் சுற்றிவரல் வேண்டும். அடுத்த படியாக மந்திரத் தின் மூன்றாம் பகுதியைச் சொல்லிக் கொண்டு ஒருதரம் மவுனமாகவும், பின் இரண்டு தரமும் வலம் வரல் வேண்டும். இதற்கு மந்திரம்:-

1. "கணானாம் த்வா: கணபதிம் ஹவாமஹே" (வஸோமம்)

2. "பரியாணாம் த்வா: ப்ரியபதிம் ஹவாமஹே" (வஸோமம்)

3. "நிதீனாம் த்வா நிதிபதிம் ஹவாமஹே" (வஸோமம)

பொருள்: ஓ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றுந் தலைவனும், பொருட்களின் தலைவனுமாகிய உன்னை அழைக்கிறோம்.. நீ எனது பர்த்தாவாக (கணவனாக) இருக்கவேண்டும்.

(மனைவிகளுள் தலைவியை மஹிஷியென்பர்; அவளுக்குத்தான் குதிரை நாயகனாக வரவேண்டுமாம்) பிறகு, பானேஜனத்தால் யஜமானனும், பத்தினிகளும் பிராண சோதனம் (அங்கங்களைத் தொடுதல்) செய்யக் கடவர். பிறகு மஹிஷியானவள் குதிரையை நெருங்கி, அதனுடன் சேர்ந்து படுத்துக்கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

"ஆஹமஜானி கர்ப்பத மாத்வ மஜாஸி கர்ப்பதம்"

பொருள்: ஓ குதிரையே! கர்ப்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் க்ஷேபிக்கிறேன் (க்ஷேபித் தல் - இடுதல்) அதைப்போல் நீயும் செய்யவேண்டும். இம்மந்திரம் சொல்லி முடிந்ததும், ஒருதுணியைப் போட்டு குதிரையையும், மஹிஷியையும் மூடிவிட்டு அத்வர்யு சொல்லவேண்டிய மந்திரம்.

2. "ஸ்வர்க்கே லோகே ப்ரோணு வாதாம்"

பொருள்: ஓ குதிரையே! மஹிஷியே! நீவிரிருவரும் இந்த யாக பூமியில் இவ்வுடையினால் உடல் முழுவதும் மறைத்துக் கொள்ளுங்கள்.
இதன் பின்னர் மஹிஷி சொல்ல வேண்டிய மந்திரம்:

"வருஷா வாஹி ரேதோதைரெ தோ ததாது"

பொருள்: சுக்கிலத்தைத் தன்னுள் வைத்துக் கொண்டி ருக்கிற குதிரை, அதை என்னிடத்தில் வைக்கட்டும். இதன் பிறகு யஜமானன் குதிரையும், பத்தினியும் படுத்திருக்கும் இடத்திற்குச் சென்று குதிரையைத் தொட்டுக்கொண்டு கீழ்க்குறித்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

"உத்ஸக்த்யா அவகுதம் தேஹி ஸமஞ்ஜிம் சாரயா

வ்ருஷன் ய: ஸ்த்திரீணாம் ஜீவபோஜன"

பொருள்: புணர்ச்சி வேளையில் என் மனைவியாகிய இவளிடத்தில் (மஹிஷி) நான் செய்யும் காரியங்களை எனக்குப் பதிலாக நீ செய்யவேண்டும்.

எழுதுவதற்கே கூசக்கூடிய இந்தக் காட்டுமிராண்டிக் கலாச்சாரத்துக்குச் சொந்தக்காரர்கள்தாம் ஆரியப் பார்ப் பனர்கள்.

இத்தகையவர்கள் வெறுக்கத்தக்கவர்களா இல்லையா?

இவர்கள் இன்றைக்குத் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடும் இராமன் இருக்கிறானே - அவனே இத்தகைய யாகத்தில் பிறந்தவன்தான்.

ஆதாரம் தேவைப்படுவோர் மறைந்த திண்டுக்கல் பிரபல மார்க்சிஸ்டு தலைவர் தோழர் ஏ. பாலசுப்பிரமணியம்  அவர்களின் தந்தையார் அமிர்தலிங்க அய்யர் அவர்களால் எழுதப்பட்ட ராமாயண விமர்சகா என்ற நூலைப் படித்துக் கொள்ளலாம்.

பார்ப்பனர்களால் படைக்கப்பட்ட வேதாகமங்களின் தராதரங்கள் எத்தகையவை தெரியுமா?

"ஸ்தயச்: சின்னசிர: க்ருபாணம பயம்

ஹஸ்தைர் வரம் பிப்ரதீம்

கோராஸ்யம் சிரஸர்ஸ்ரஜா

ஹுருசிராமுன் முக்த கேசாவ லீம்:

ஸ்யாமாங்கீம் க்ருதமேகலாம்

சவகரைர் தேவீம் பஜேகாளிகாம்"

(மந்த்ர மஹோததி)

பொருள்: அப்போது அறுத்தெடுத்த தலை, வால், அபயம், வரம், இவைகளையுடைய கைகளும், கழுத்தில் மாலையாக விளங்குகின்ற தலைகளின் வரிசையும், அவிழ்த்துவிட்ட கூந்தலும், கடைவாயினின்றும் ஒழுகு கின்ற இரத்தப் பெருக்கும், சலங்களைத் தோடாக உடைய காதுகளும், சலத்தினது கைகளின் வரிசையே ஒட்டி யாணமாக அணிந்திரா நின்ற இடையையும் உடைய காளிகா தேவியை நான் வழிபடுகிறேன். பின்னும் தேவியின் உருவத்தை வருணிப்பது:

"அஸ்மின்பீடே யாஜேத் தேவீம்

சிவரூப சவஸ்திதாம்:

மஹாகால ரதாஸக்தாம்

சிவாபிர்திக்ஷுவேஷ்டிதாம்"

பொருள்: சவ ரூபமாயிருக்கிற சிவனுடைய உடலை மிதித்துக் கொண்டிருப்பவளும், மஹா காலனுடைய சம்போகத்தில் விருப்பமுடையவளும், பெண் நரிகளால் சூழப் பெற்றவளுமான தேவியை பீடத்தின் கண் ஆவா கித்துப் பூசிக்க வேண்டும். இங்ஙனம் பூஜித்தபின் மந்திரம் செபிக்கும் முறை:

"ஸுத்ருசோ மதனாவஸம்

பஸ்யன் ய: ப்ரஜபேன் மனும்

அயுதம் ஸோசி ராதேவ

வாக்பதே: ஸமதாமியாத்"

பொருள்: ஒரு அழகிய பெண்ணின் குறியைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் மந்திரசெபம் பண்ணுகிறவன் தேவ குருவுக்குச் சமனாவான்.

குருமூர்த்தி கூட்டமே இவை போதுமா - இன்னும் வேண்டுமா?

வேஸ்யா தரிசனம் புண்யம்

ஸ்பர்ஸனம் பாப நாஸம்

சம்பனம் சர்வ தீர்த்தானாம்

மைதுனம் மோக்ஷ சாதனம்

வேசிகளைப் பார்த்தாலே புண்ணியம் - தொட்டாலே பாவம் நாசமாகும் - முத்தம் கொடுத்தால் சகலப்புண்ணிய தீர்த்தங்களிலும் நீரோடியதற்குச் சமமான புண்ணியம் - உடலுறவு கொண்டால் மோட்சத்தை அடையும்வழி.

மோட்சத்துக்கான மோக வழியைப் பார்த்தீர்களா?

இந்த வெட்கங் கெட்ட இந்துத்துவாவாதிகள்தான் ஒழுக்கம் பொதுச் சொத்து, பக்தித் தனிச் சொத்து என்று சொன்னபடி வாழ்ந்து காட்டிய தலைவர் தந்தை பெரியாரால் தான் ஒழுக்கம் கெட்டு நாசமாகிப் போய் விட்டது என்று நாக்கில் நரம்பின்றிப் பேசுகின்றனர்.

ஒழுக்கம் என்று எதுவும் தேவையில்லை, மிருகத்தோடு கூடப் புணரலாம் (அசுவமேதயாகம்) என்று எழுதி வைத்துள்ள அசிங்கங்கள் அறிவுலக ஆசானாம் அய்யா பெரியாரை அனாவசியமாக வம்புக்கிழுக்கலாமா?

காளிதாசனின் படைப்புகள் உள்ளிட்ட பழைய சமஸ் கிருத இலக்கியங்களில் "மதனோத்சவம்" பற்றி பல இடங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.

In Ancient Sanskrit Literature, including all work of ‘Kalidasa’ there are frequent references, to MADANOTSAVA, a day on which every men or women could ask another even a stranger for sexual bliss a sort of “Free Love Day”

- Chidanda Dass Gupta Lust for life:

- "Illustrated Weekly of India", May3-9, 1987  P39

"இந்த மதன உற்சவ நாளில் எந்த ஆண் மகனும் அல்லது பெண் மகளும் அயலார் உட்பட எவரையும் புணர்ச்சி இன்பத்திற்காக அழைப்பு விடுக்கலாம். இது ஒரு வகையான "சுதந்திரமான" காதல் நாளாகும். (சிரானந்த தாஸ் குப்தா, "இல்லஸ்ட்ரேட் வீக்லி" 3-9 மே  1987 பக்கம் 39).

இந்தப் பார்ப்பன இந்துத்துவ பாரம்பரிய மரபணுதான் நடந்து வரும் பாலியல் சீண்டல்களுக்குக் காரணமே தவிர  - இவ்வாபாசங்களை அழித்தொழிக்கும் தந்தை பெரியாரோ, அவர் கண்ட பகுத்தறிவு ஒழுகலாறான இயக்கமோ, கண்ணீர்த் துளிகளோ அல்ல என்பதைக் குருமூர்த்திகள் உணரட்டும்!

அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்கிறார்களே ஆரிய குலத்தார் - அதன் தன்மை என்ன? அந்தக் காலத்திலேயே கூட்டுறவு சொசைட்டியா என்று தந்தை பெரியார் கேட்டதுதான் நினைவிற்கு வருகிறது.

அய்ந்து கணவன் போதாது என்று ஆறாவதாக கர்ணன் மீது ஆசைப்பட்டதற்குத் துரோபதை கூறிய காரணமும், விளக்கமும் என்ன தெரியுமா? தருமன் - சதா வேதாந்தம் படிப்பவன், பீமனோ உடல் பெரியவன், எப்பொழுதும் சாப் பிட்டுக் கொண்டே கிடப்பவன், அர்ச்சுனனோ அவனுக்கு ஏகப்பட்ட மனைவிகள், ஆற்று மணலை எண்ணினாலும் அர்ச்சுனன் மனைவியை எண்ண முடியாது. நான்காவது, அய்ந்தாவது நகுலனும், சகாதேவனும் எனது பிள்ளைகள் மாதிரி - எனவே கர்ணன்மீது ஆசை கொண்டேன் என்கிறார்.

இந்த ஆபாச ஆரியக் கலாச்சார ஒழுக்கக் குன்றுகள்தான் தந்தை பெரியாராலும், அவர்தம் சீர்திருத்த இயக்கத்தாலும் கலாச்சார சீரழிவு ஏற்பட்டது என்று கொஞ்சம்கூடக் கூசாமல் எழுதுகின்றனர். இன்னும் இருக்கிறது - குருமூர்த்தியாரே ஓடாதே நில்!

-மின்சாரம்-


திருவாளர் சோ.ராமசாமியின் மறைவுக் குப் பிறகு - ‘துக்ளக்கை’ அபகரித்துக் கொண் டுள்ள - கோயங்கா வீட்டு கணக்குப்பிள்ளை என்று அறிமுகமான சங்பரிவார் வட்டாரத் தின் ஒரு கூர்முனையான சுவதேசி ஜாகரான் மஞ்ச் என்ற அமைப்பின் முக்கிய பொறுப்பாளரான குருமூர்த்தி அய்யர்வாள் தனது கோணல் பூணூல் புத்தியை மையாக்கி எழுதிக் கொண்டு வருகிறார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை பிரச்சினையை மய்யப்படுத்தி இந்த சீரழிவுகளுக்கு காரணம் பெரியார் தானாம். தமிழ்நாட்டில் பெரியாரும் அவரது சீடர்களும் - கண்ணீர் துளிகள் என்று பரிகசித்து பெரியார், யாரை ஒதுக்கினாரோ, அவர்கள் உட்பட கலாச்சார சீரழிவை, சமுதாய சீர்திருத்த அரசியல் இயக்கமாக மாற்றினார்கள். அது  சாருவாக முனி துவங்கிய  விவாதமாக மட்டுமல்லாமல் மக்களின் ஒழுக்கத்தை குலைக்கும் ஒரு கருவியாகவும் மாறி, தமிழக அரசியல், ஆன்மீகம், கல்வி, சமூக நல்லிணக்கம் ஆகிய எல்லாவற்றையுமே பாதிக்கிறது என்று குருமூர்த்தி என்னும் நவீன மனு  சிலாகித்துள்ளார்(துக்ளக் 2-5-2018).

தந்தை பெரியார் மீது கை வைத்து நிர்வாண ஆட்டம் போட்டதன் பலாபலன் களை பார்ப்பனர்கள் கூட்டு வட்டியும் முதலு மாக சேர்த்து அனுபவித்து வருகிறார்கள்.

அரசியல், ஆன்மீகம், ஜாதி, மதம், நாத்திகம், ஆத்திகம் ஆண், பெண் என்ற வேறுபாடுகளையெல்லாம் வேரோடு ‘தூக்கி எறிந்து’ தமிழ்நாடே சுனாமியாக எழுந்து நின்று, ‘எங்கள் தந்தையின் மீதா, எங்கள் ஒப்பற்ற இனப் பாதுகாவலர் மீதா, ஒப்பாரும், மிக்காரும் இல்லாத உயர் எண்ணங்கள் மலரும் சோலையின் மீதா, மண்டைச் சுரப்பை உலகு தொழும் தலைவர் மீதா, பெண்ணடிமையை பெயர்த்தெறிந்த பெம்மானாம் எங்கள் தலைவர் மீதா, கை வைத்தீர்-   கைபர் கணவாய் கூட்டமே!’ என்று அனல் கக்கி ஆயிரங்கால் சிங்கமாக சிலிர்த்தெழுந்து அண்டங் குலுங்க  குரல் கொடுத்தனரே!

பட்டை போட்டவரும், நாமம் தீட்டியவர் களும் கூட வீதிக்கு வந்து வெண்தாடி வேந்தர் பக்கம் நின்று வீறு கொண்டு குரல் கொடுத்தனரே! புலிவாலை மிதித்து விட்டோமே - அதன் விளைவாக புரட்டி எடுக்கப்படுகிறோமே என்று புலம்பும் நிலைக்கு  ஆளான ஆரிய பார்ப்பனக்கூட்டம் - தங்களின் அடக்க முடியாத ஆத்திரத்தை இப்போது வேறு வகையில் வெட்கம் கெட்ட தன்மையில் காட்ட ஆரம்பித்து விட்டது.

தந்தை பெரியார் மீது சேற்றை வாரி இறைக்கத் தொடங்கி விட்டனர். வாங்கிக் கட்டியது போதாது போலிருக்கிறது - இந்த புத்திக் கெட்ட புரோகிதக் கும்பலுக்கு இல்லாததும் பொல்லாததுமான பொய்யுரைக் குப்பைகளை கொச்சைத்தனமாக வாரி இறைக்க தொடங்கி விட்டனர்.

யாரைப் பார்த்து கை நீட்டுகிறது இந்த குடுமி?

பக்தி தனி சொத்து - ஒழுக்கம் பொதுச் சொத்து என்று சொன்னவர் மட்டுமல்ல வாழ்ந்தும் காட்டியவர் தந்தை பெரியார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் (24.11.1964) பேராசிரியர், மாணவர்கள் மத்தியில் இந்த  உன்னதக் கருத்தை உதிர்த்தவர் தந்தை பெரியார்.

இயக்கத் தோழர்களுக்கு அவர் எடுத்து ரைத்தது என்ன தெரியுமா?

“நாம் எதிர்பார்த்த லட்சியத்தில் எதிலும் தோற்று விடவும் இல்லை. பெரிதும் வெற்றி பெற்றுக் கொண்டு மற்றவர்களும் ஏற்கும்படிதான் வளர்ந்து வருகின்றோம்.

இந்த நிலைமை மாறாமல் இருக்க வேண்டும், இப்படியே இருந்து வரும் நிலையிலேயே நான் சாக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

நமது தோழர்களும் நாணயமாகவும், கட்டுப்பாடாகவுமே  இருக்கிறார்கள்.

நமது கொள்கையில் ஓட்டை விழுந்தால் கூட பரவாயில்லை. ஆனால் நாணயத்தில், ஒழுக்கத்தில் தவறு இருக்கக்கூடாது அதுதான் ஒரு கழகத்திற்கு முக்கியமான பலம்.

பணம், காசு பற்றி அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. நான் கழகத்திற்கு வரும் போது கழகத்தில் பணம் இல்லை. சொந்த காசுதான் செலவு செய்தேன்.” (விடுதலை, 11.10.1964, பக்கம் -3)

மன்னார்குடியில் கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தந்தை பெரியார் இவ்வாறு கூறினார். ஒழுக்கத்திலும், நாண யத்திலும் உயர் மதிப்பும், உயிருக்கும் மேலான பற்றும் வைத்த ஒரு தலைவரைப் பற்றி ஊத்தை வார்த்தைகளை கொட்டலாமா?

ஒழுக்கத்திற்கு உயரமான இடத்தை கொடுக்கிறார் நாத்திக தலைவர் பெரியார் என்றால் பார்ப்பனர்களின் ஜகத்குருவான சூப்பர் சீனியர் சங்கராச்சாரியாரான சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?
“நல்ல ஒழுக்கம் இருந்தால் போது மென்றும், கடவுள் அவசியம் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.  இது தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால், தனி நபருக்கோ நாட்டுக்கோ விமோசனம் ஏற்பட முடியாது”. (கல்கி, 8.4.1958) இதுதான் ஜகத் குருவின் அருள்வாக்கு.

உண்மைகள் இவ்வாறு இருக்க, குருமூர்த்திகள் குடுமி தனத்தோடு ஒரு மாபெரும் தலைவரை விமர்சிக்கலாமா?

குருமூர்த்திகளும் அவர்களின் லோக குருவான சங்கராச்சாரிகளும் உச்சத்தில் வைத்துக் கூத்தாடும்  பக்தியின் யோக்கியதை தான் என்ன? பதினெட்டுப் புராணங்களை எடுத்து அலசலாமா? இதிகாசங்களைக் கொண்டு வந்து நிறுத்தலாமா? சுருதிகளையும், ஸ்மிருதி களையும் தோலுரித்துக் காட்டலமா?

அவற்றையெல்லாம் அம்பலத்துக்கு கொண்டு வந்தால்  புழுத்த நாய்கூட குறுக்கே போகாதே - ஏடுகளும் தாங்காதே - எடுத் துரைக்க நேரமும், காலமும் கூட போதவே போதாதே!
திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்த படலம் ஒன்று போதாதா?

அன்னையைப் புணர்ந்து தாதை

குரவனாம் அந்த ணாளன்

தன்னையும் கொன்ற பாவம்

தணித்து வீடளித்தத் தென்றால்

பின்னை நீ விழிநோய் குட்டம்

பெருவயிறீளை வெப்பென்று

இன்னநோய் தீர்க்கும் தீர்த்தம்

என்பதோ இதற்கு மேன்மை

- இதுதான் பரஞ்சோதி முனிவரால்  எழுதப்பெற்ற   திருவிளையாடல்  புராணப் பாடல்.

‘தந்தையைக் கொன்று  தாயைப் புணர்ந் தவனை  இந்தக் கோயில் குளம் - தீர்த்தம் மோட்சம் அளித்தது என்றால்  குஷ்டம், பெருவயிறு போன்ற கொடிய நோய்களை தீர்த்தது என்பதா இந்தத் தீர்த்தத்தின் மகிமை?’

இதுபோன்ற புராணங்களைப் பூணூலாக  தரித்துக் கொண்டிருக்கும் கூட்டமா பெரியாரால் ஒழுக்க நிலை உருக்குலைந்தது? - கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்று சிலாகிப்பது?

இதோ ‘வேதாரண்யம் தல வரலாறு’. இதனை வெளியிட்டது, ஸ்ரீவேதாரண் யேஸ்வரசுவாமி தேவஸ்தானம். இதன் 45, 46 ஆம் பக்கத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.

“வேதாரண்யத்திற்கு அண்மையிலுள்ள - ராமச்சந்திர புரத்திலே ஒரு பிராமணன் வாழ்ந்துவந்தான். தன் மகன் பிறந்த ஜாதகத்தைப் பார்த்தான். மகன் பதினாறாவது வயதில் தாயைப் புணர்தல், பசுக்கொலை, கள் குடித்தல் முதலிய பாவங்களைச் செய்வான் என்றிருந்தது. இதே கவலையாக இருந்து பிராமணன் இறந்தான். மகன் கண்ணில் தந்தை எழுதி வைத்திருந்த சாதகக் குறிப்பு அகப்பட்டது. அதனைப் படித்துப் பார்த்த மகன் அஞ்சியழுது, தேறி, இவ்வளவு பாவங்களையும் நான் இங்கிருந்தாலல்லவா செய்யக் கூடும்; எங்காவது தேசாந்தரம் போய் விடுவோம் எனப் புறப்பட்டுக் கங்கை வரை சென்று பல ஆண்டுகளைக் கழித்தான். தனக்கு பதினாறு வயது கழிந்திருக்கும் என்று எண்ணிக்கொண்டு ஊருக்குத் திரும்பினான். இரவு நேரம் வழக்கம்போல ஊரில் பிச்சை எடுத்து அதனை உண்பதற்காக ஒரு வீட்டுத் திண்ணையை அடைந்தான். அங்கே ஓரிளம் விதவை வேலைக்காரியாக இருந்தாள். இவனைக்  கண்டதும் இவன் இளமையிலும் அழகிலும் மயங்கி அவன் விருப்பப்படி இடமும், பிறவும் அளித்து உபசரித்தாள்.  எப்படியாவது இவனைக் கூடவேண்டும் என்று துடித்தாள். அவன் குடிப்பதற்காக நீர் கேட்டான். அவளோ, இவன் தன் வலையில் சிக்கமாட்டான் என்பதையறிந்து மதுவையே நீரென்று கொடுத்தாள்.

அவனும் மதுவை இதுவரையறியாத வனாகையாலே உண்டான். மதி  மயங்கினான். பக்கத்திலிருந்த பசுவையும் கொன்றான்; காமம் தலைக்கேறி, அவ்விதவையைப் புணர்ந்தான். பொழுதும் விடிந்தது. மது மயக்கமும் தெளிந்தது. தான் செய்த தவறுகளை நினைத்து வருந்தி, அவ் விதவையைப் பார்த்து -நீ யார் உன் வரலாறு என்ன? என்று கேட்டான். அவள் நடந்ததைச் சொன்னாள். (அவள் வேறுயாரும் அல்ல. அவனது தாய்தான்) அவன் விதிவலி கொடிது வெல்லுதற்கரியது என வருந்தினான். இப்பழி தொலையும் வழியாது என அலைந்தான். ஒன்றும் புலப்படவில்லை, வாளினால் கழுத்தை யரிந்து கொண்டாவது இறப்போம் எனத் துணிந்து வாளால் கழுத்தையறுத்துக் கொண்டான். அப்போது  வேதாரண்யேசர்  அவன் திருமுன் சென்று அவன் கையைப் பிடித்துத் தடுத்து, ஏ அந்தணா!  இதற்குத் தான் தற் கொலையும் செய்து கொண்டு அப்பாவத் தையும் சுமக்க எண்ணுகிறாயா? திருமறைக் காட்டில் மணிகர்ணிகையில் மூழ்கி வேதவ னேசரை வழிபட்டால் எல்லாப் பாவங்களும் நீங்கும், அப்படியே செய்’ என்றருளினார்.
“பிரம்மச்சாரியும் அப்படியே மூழ்கி உய்ந்தான்; அவன் தாய் வழிபாட்டுச் சத்தி பதம் பெற்றாள்.’’

சிவபதம் யாருக்குக்கெல்லாம் கிட்டியிருக்கிறது பார்த்தீர்களா? தாயைக் கெடுத்த தனயனுக்கும் கிடைத்தது, சோரம் போன தாய்க்கும் கிடைத்திருக்கிறது - இதுதான் குருமூர்த்திகளின் அர்த்தமுள்ள இந்து மதத்தின் கிரீடை. நாட்டில்  ஒழுக்கக் கேடும்  சீர்கேடும் பெருகி வழிவதற்கு காரணம் இந்த பக்தியும் மார்க்கமும் குருதியில் தோய்ந்தது தானே முதன்மையான காரணம். இதை மறைத்து உயர் ஒழுக்கம் ஓம்பிய ஒப்பிலாத் தலைவர் மீது மடைமாற்றம் செய்திருக்கிறது. இந்த மட்டரகமான மறையர் கூட்டம்.

பார்வதி அம்மையாரின் முலைப்பாலாம் ஞானப்பால் உண்டவன்  என்று உரைப்பாயிரம்  செய்கிறார்களே - அந்தத் திருஞான சம்பந்தன் மதுரையில் குடி கொண்டதாக கூறப்படும் சிவனிடம்  போடும் மனு  என்ன தெரியுமா?

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத் திரு ஆலவா யருள்
பெண்ணகத் தெழில் பேயமண் சாக்கிய
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே

- இதுதானே தெய்வத்தின் முலைப்பால் குடித்த பிஞ்சிலே பழுத்த சிறுவன் திருஞானசம்பந்தன் பாடிய பாட்டு.

திருவாலவாய் என்னும் மதுரையம் பதியில் வீற்றிருக்கும் சிவனே! பவுத்த சமணர் களின் வீட்டு அழகிய  பெண்களை கற்பழிக்க அருள்  புரிவாயாக என்று பாடினானே!
இந்தக் கேடுகெட்ட மரபுதானே பெண் களை  கண்டாலே வேறு மாதிரி சிந்திக்கும் சீழ்ச் சிந்தனையை ஊட்டுகிறது!

(இதில் இருக்கும் பித்தலாட்டம் என்ன? இப்பாடல் பெரிய புராணம் இரண்டாம் காண்டம் வம்பறா வரி வண்டு சருக்கம் - திருஞானசம்பந்த சுவாமிகள் வரலாறு”  எனும் திருவண்ணாமலை ஆதீனம் திரு ஆறுமுகதம்பிரான் 1885இல் வெளியிட்ட நூலில் பெண்ணர் என்று இருக்க, திருப்பனந்தாள் மடம் பிறகு 1956இல் வெளியிட்ட திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரத் தில் தெண்ணர் என்று அவமானம் கருதித் திருத்தி வெளியிட்டனரே!)

இந்த யோக்கிய சிகாமணிகள் தான்  பெரியாரின் திராவிட இயக்கம் ஏற்படுத்திய கலாச்சார சீர்கேட்டினால் தான் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக என்று நரியாக நர்த்தனம் ஆடுகின்றனர்.
பார்ப்பனர்கள் கூறும் பக்தி மார்க்கத்தின் யோக்கியதை என்ன? நாம் சொல்ல வேண் டாம். பார்ப்பனர்களின் லோகக்குரு மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி பட்டைத் தீட்டி பகரும் “பலாச்சுளைகளை” பார்க்கலாமா?.

“பத்துப் பதினைந்து வருடங்களைக் காட்டிலும்  இப்பொழுது பக்தி மக்களிடையே நிறைய தென்படுகிறது. ஆனாலும் ஜனங்களுக்குக் கஷ்டங்களும், வியாதிகளும், நிறைய இருக்கின்றன. இவைகள் நிறைய வரவர பக்தியும் மேன்மேலும் வளருகிறது.

இவ்விதம் பக்தி நம்மிடையே வளர்ந்தும் கூட துக்கங்களும் வியாதிகளும் அதிகமாக வளருவதற்கு காரணங்கள் என்ன? ஓரள வுக்கு நமக்கு கடவுள் பக்தி இருந்த போதும் பேராசையும், ஒழுக்கமின்மையும் கூட வெகு அதிகமாக நம்முடைய வாழ்க்கையை பிடித்துக் கொண்டு விட்டன.”

கூறியிருப்பவர் யார்? அவாளின்  குமரகுரு சங்கராச்சாரியார் - அதுவும் எங்கே கூறியிருக்கிறார்? காஞ்சிபுரத்திலேய நடை பெற்ற கோயில் கும்பாபிஷேகத்திலே, இதை வெளியிட்ட ஏடு எது தெரியுமா?தினமணி. (7.9.1976)

இந்த வெட்கங் கெட்டதுகள் தான் தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் அப்பழுக்கற்ற பண்பாட்டின் தனிச் சிகரமாக தகத்தகாய பகலவனாக ஒளி வீசிக் கொண்டி ருக்கும் உத்தமத்தந்தை பெரியாரைக் குறித்து நிதானமில்லாமலும், நேர்மை யின்றியும், நீசத் தன்மையில் சேற்றை வாரி இறைக்கின்றன என்பதை புரிந்து கொள்க!

குறிப்பு: இத்துடன் இவர்களை விட்டு விட முடியுமா நாளையும் இருக்கிறது.

- தொடரும்.


- மின்சாரம்

1. கருநாடக பாஜக எம்.எல்.ஏக்கள் 3 பேர் சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்து மாட்டிக் கொண்டனர்.

2. குஜராத் பாஜக அமைச்சர்கள் 2 பேர் சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்த போது பிடிபட்டு, பாஜகவின் கலாச் சாரத்தை நாடு முழுவதும் தெரிய வைத் தனர்.

3. அருணாச்சலப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ. ராமகந்த தேவ்ரி, விடுதி ஒன்றில் ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்த காணொலி வெளியாகி மாட்டிக் கொண்டார்.

4. மத்தியப் பிரதேசத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் நீரஜ் சாக்யா, விபச்சார விடுதி நடத்திவந்தார் - இவரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அரசியல் தலையீடு காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.

5. இமாச்சலப் பிரதேசத்தில் விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் விபச்சாரத் தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் ராஜிந்தர் ராணா, எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்குப் பிறகு பதவி வில கினார்.

6. மத்தியப் பிரதேச நிதி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராகவ்ஜி, வீட்டு வேலைக்காரியை பாலியல் துன் புறுத்தல் செய்ததாக கைது செய்யப் பட்டார்.

7. குஜராத் மாநில பாஜக செயலாளராக இருந்த சஞ்சய் ஜோஷியின் ஆபாசக் காணொலி வெளியானதை அடுத்து, கட்சிப் பொறுப்பிலிருந்து விலகினார்.

8. மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்முறை செய்த பாஜக தலைவர் ரவீந்தர பவந் தாதே-யின் காணொலி வெளியாகி, கைது செய்யப்பட்டார்.

9. ஜார்க்கண்ட் பாஜக பெண் தலைவர் கீதா சிங் என்பவரின் ஆபாசக் காணொலி வெளியாகி, பெரும் பரபரப்பு கிளம்பியது.

10. பாஜகவின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவராக இருந்த முத்து என்கின்ற மாரிமுத்து கள்ளக் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

11. இந்து முன்னணியின் செந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண் டன், நந்தினி என்ற தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்து, கொடூரமாகக் கொலை செய்தார்.

12. ஆர்.எஸ்.எஸ். தலைவரும், மேகாலயா ஆளுநருமான சண்முக நாதன் (பாஜக நியமனம்), பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி, ஆளுநர் பொறுப் பிலிருந்து விலகினார்.

13. உத்தரப் பிரதேசம், உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கும், அவரின் சகோதரரும் 17 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வெளியே சொன்ன குற்றத்திற்காக அவரின் தந்தையைக் காவல் நிலையத்தில் வைத்து கொலை செய்துவிட்டார்கள்.

14. இப்போது சிறுமி ஆசிஃபா வழக்கிலும் இந்துத்துவா கும்பல் கைது செய்யப்பட்டிருக்கிறது. கைதானவர்க ளுக்கு ஆதரவாக பாஜக கூட்டணி அமைச்சர்கள் போராட்டம் நடத்து கிறார்கள். கத்துவா, உன்னாவ் பிரச்சினை நாடு முழுவதும் பெரிதாக வெடித்துக் கொண்டு இருக்கும் போது உ.பி. முதல் வர் சாமியார் ஆதித்யநாத், பாலியல் குற் றவாளியான முன்னாள் அமைச்சரும் பாஜக பிரமுகருமான சாமியார் சின்ம யானந்த் என்பவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

பா.ஜ.க. பதவியாளர்களும் பச்சைக்கொடி!

வட இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சிறுமிகளை பாலியல் ரீதியில் சீரழித்து கொலை செய்யும் நிகழ்வுகள் தொடர்கின்றன. இந்த  நிலையில் பொதுமக்களே சமூக வலைதளங்களில்  பாஜகவினரின் நட்பை முறிக்கும் வகையில்  #அன்ஃப் ரெண்ட்பிஜேபி (#UNFRIEND_BJP) என்ற ஹேஷ்டேக்கை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர்.  காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்,   உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் ஒரு மைனர் பெண்ணை பாலியல் வன்முறை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.    அதை ஒட்டி முகநூலில் உள்ள பலரும் பாஜக உறுப்பினர்களையும் ஆதரவாளர் களையும் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி வருகின்றனர்.

இதற்காக #அன்ஃப்ரெண்ட் பிஜேபி என்னும் ஹேஷ்டாக் உப யோகம் பரவலாகி வருகிறது. இதன் மூலம் கத்துவா மற்றும் உன்னாவ் பாலியல் வன்முறை விவகாரத்தில் ஆதரவு தெரி விக்கும் பாஜகவினரை நண்பர்கள் பட் டியலில் இருந்து பலர் நீக்கி வருகின் றனர்.   மேலும் தங்கள் நண்பர்களையும் பாஜகவினரை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.   பெரும்பாலானோர்,   பாஜகவினரே உங்கள் கரங்களில் ரத்தக் கறை படிந்துள்ளது. எனவே உங்கள் நட்பு தேவை இல்லை எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

கடந்த 13ஆம் தேதி அன்று பிரதமர் மோடி இது குறித்து தனது மவுனத்தை கலைத்தார்.  அவர் இந்த சம்பவங்கள் வெட்கப்படத் தக்கவை எனக் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.   ஆனால் அதே நாளில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேகி எனபவர், ஆசிஃபாவை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு பாஜக அமைச் சர்கள் ஆதரவு தெரிவித்து பேரணியில் கலந்து கொண்டதை ஆதரித்து கருத்து தெரிவித்தார்.

மதவாதம் கண்களை மறைக்கிறது


ஜம்முவில் உள்ள கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் மற்றும் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலையை எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் டிவிட்டரில் கண்டனப் பதிவு செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாடல் அழகு ஸ்வரா பாஸ்கர் என்பவர் கரீனா கபூரின் பதிவிற்கு மறுபதில் இட்டுள்ளார். அதில் "நீ இந்துவாக இருந்துகொண்டு இசுலாமியரை திருமணம் செய்ததால் இந்துவிற்கும் இந்தியாவிற்கு துரோகம் செய்துவிட்டாய் என்று பதி லிட்டுள்ளார். கரீனா கபூர் பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூர் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு குவாலியர் நவாப் வம்சத்தைச் சேர்ந்த பிரபல இந்தி நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்து கொண் டார். இதனால் இவரை இந்துக்களுக்கு எதிரானவர் என்று இந்துத்துவ மத வாதிகள் பிரச்சாரம் செய்து வருகின் றனர். 2017-ஆம் ஆண்டு ஜெய்பூரில் நடந்த இந்துமத மாநாட்டில் இவரது படத்தை அட்டையில் போட்டு இவர் லவ்ஜிகாத்திற்கு பலியானவர் (இசுலாமி யர்கள் இந்துப் பெண்களை திருமணம் செய்வதை இந்துத்துவாதிகள் லவ்ஜி காத் என்று கூறுவார்கள்) என்று கூறி ஒரு சிறிய நூலை வெளியிட்டிருந்தனர். இவருக்கு சைப் அலிகானுக்கும் பிறந்த குழந்தைக்கு தைமூர் அலிகான் என்று பெயரிட்டிருந்தார்.

உடனே மதவாதிகள் தைமூர் என்ற பெயரை வைக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினர். தற்போது இந்துத்துவ வாதி கள் 8 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்து கொலைசெய்ததை கண்டித்த கரீனா கபூரை மீண்டும் இந்து மதத்திற்கும் இந்தியாவிற்கும் துரோகி என்று கூறியுள்ளனர். உண்மையில் பாஜக என்ற மதவாத கட்சி மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடு முழுவதும் மதவாதிகளின் கொடூரப் பிடியில் ஆட்கொண்டு சீரழிந்து வருகிறது. ஒரு தவற்றை சுட்டிக்காட்டிய கரீனா கபூரை ஒரு பிர பல மாடல் அழகியே இந்துத் துரோகி என்று எழுதியிருப்பதில் இருந்து நாடு எந்த அளவு மதவாதப் பிடியில் சீரழிந் துள்ளது என்று கண்டுகொள்ளலாம்.

Swara Bhasker  @ReallySwara You should be ashamed you exist. That God gave you a brain which you chose to fill with hate and a mouth you chose to spew filth from. You are a shame on India and Hindus. That shits like you feel emboldened to talk this crap publicly is this govt.’s legacy  8:18 PM - Apr 14, 2018.

பாசிச பா.ஜ.க. அதிகாரி

கேரள மாநிலம் கொச்சி நகரில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றி வந்த விஷ்ணு நந்தகுமார் காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாகச் சமீபத்தில் அவரின் முகநூலில் சர்ச்சைக் குரிய கருத்தைப் பதிவிட்டார். அதில் நல்லவேளை அந்தச் சிறுமி இந்தச் சின்ன வயதிலேயே கொல்லப் பட்டுவிட்டார். இல்லாவிட்டால், வளர்ந்த பின் என்றாவது ஒருநாள் மனித வெடி குண்டாக மாறி இந்தியாவுக்கு எதிராக மாறிவிடுவார் என்று பதிவிட்டு இருந்தார். இந்தக் கருத்துக்கு அனைத்துத் தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந் தன.

முகநூலில் பலரும் விஷ்ணுவைக் கண்டித்து வாசகங்கள் எழுப்பினர். பலர் உடனடியாக விஷ்ணுவை வேலையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலி யுறுத்தினார்கள். இதற்காக ட்விட்டரில் டிஸ்மிஸ் யுவர் மேனேஜர் என்று பிரத் தியேகமாக ஹேஷ்டேக் உருவாக்கப் பட்டு வைரலானது. இந்த ஹேஷ் டேக்கை பயன்படுத்தி அந்தத் தனியார் வங்கியில் வாடிக்கையாளர்களாக இருக்கும் ஏராளமானோர் கடும் கண்டனத்தை யும், விஷ்ணுவை டிஸ்மிஸ் செய்யவும் வலியுறுத்தினார்கள். மனிதநேயமற்ற வகையில் உங்கள் வங்கியில் ஊழியர் முகநூலில் கருத்து தெரிவித்து குற்ற வாளியைவிட மோசமாக நடந்து கொள் கிறார் என்று ஒருவரும், எப்படி இப்படிப் பட்ட மோசமான மனநிலையைக் கொண் டவரை வேலைக்கு வைத்திருக்கிறீர்கள். உங்கள் வங்கியின் பெயரை காப்பாற் றிக் கொள்ளுங்கள் என்று சிலரும், விஷ்ணுவை உடனடியாக பதவியிலி ருந்து தூக்குங்கள் என்று பலரும் ட்வீட் செய்ததால், வங்கி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.

இதையடுத்து, வங்கி நிர்வாகத்தின் சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் வங்கியின் துணை மேலாளர் விஷ்ணு வேலையில் இருந்து கடந்த 11ஆம் தேதி நீக்கப்பட்டு விட்டார். வேலையில் மோசமாகச் செயல்பட்டதால் அவர் பணி நீக்கம் செய்யபட்டார். அவரின் சர்ச்சைக்குரிய கருத்துகள் அனைவரின் மனதையும் புண்படுத்தி விட்டது. இதை வங்கி நிர்வாகமும் கண்டிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது. பதிவு செய்த விஷ்ணு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச்சேர்ந்த பிரமுகர் என்பதும் அவரது குடும்பத்தினரும் இந்துத்துவ அமைப்பினர் என்றும் தெரியவந்தது, ஆசிஃபா கொலை தொடர்பாக ஆர். எஸ்.எஸ் பிரமுகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப் பிடத்தக்கது.


மின்சாரம்

'தினமணி' 18.4.2018 பக்.5

தமிழகத்துக்குத் தேவை ஆன்மிக அரசியலாம் - சொல்லுவது யார்? 'சோ' மறைவிற்குப் பிறகு 'துக்ளக்'கை அபகரித்த திருவாளர் குருமூர்த்தி அய்யர்தான் இவ்வாறு கூறியிருக்கிறார்.
தந்தை பெரியார் சொல்லுவாரே நினைவிருக்கிறதா, "பூனைக்குட்டி வெளியில் வந்தது" என்பாரே அது தான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

தமிழ்நாட்டில் "ஆன்மிக அரசியலை" நடத்தப் போகிறேன் என்று கிளம்பியிருக்கிறாரே - கருநாடகத்தைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த் - இவரின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது இப்பொழுது விளங்கி இருக்குமே.

மேலே உள்ள படத்தைக் கவனித்தீர்களா? எல்லோர் மார்பிலும் தொங்குவது வெறும் உருத்திராட்சம் மட்டுமல்ல  - பூணூலும்தான். அதில்கூட தந்திரத்தைக் கவனியுங்கள்.
தன் மார்பில் தொங்கும் பூணூலை மறைப்பதற்காகவே மேல் துண்டு.

இதில்கூட குருமூர்த்தியாருக்கு அறிவு நாணயம் இல்லையே, எதிலும் ஏமாற்றுத்தனம் தானா?

ஆன்மிகம் பேசும் குருமூர்த்தி ஏன் பூணூலை மறைக்க வேண்டும்?

இங்குதான் தந்தை பெரியார் வருகிறார் - தமிழர் தலைவர் ஆசிரியர் வருகிறார் - திராவிடர் கழகம் வரு கிறது - இனமானம் வருகிறது - தன்மானம் பொங்குகிறது.

இவர்கள் கூறும் இந்த ஆன்மிகம் என்பது பூணூல் தன்மையானது - பார்ப்பன ஆதிபத்தியத்தின் துள்ள லானது - மனுதர்மத்தை உள்ளடக்கமாகக் கொண்டது. ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டு வந்தாரே அந்தக் குலக் கல்வித் திட்டத்தின் குள்ளமனப்பான்மையானது  - இடஒதுக்கீட்டின் இடுப்பை உடைக்கக் கூடியது.

தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் அது எடுபடாதே! 1971 பொதுத் தேர்தலில் மொத்தடிப்பட்டதே!

பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ஆச்சாரியார் சொன்னதுண்டு - ஆனால் அந்தப் பூணூல் தனத்தின்  நரிவாலை ஒட்ட நறுக்கிக் காட்டினார் அறிஞர் அண்ணா.
நாம் நேரிடையாக வந்தால்தானே இந்தப் பிரச்சினை? நமது பூணூலைக் காட்டினால் தானே இந்தக் கூட்டம் நமக்குத் தண்ணீர்க் காட்டுகிறது - இது அவர்களின் அச்சம்! நமக்கா அவாளின் நயவஞ்சகம் தெரியாது?

மோடியைக் காட்டி பார்ப்பன ஜனதா (பா.ஜக..) மோடி வித்தைகளைக் காட்டிக் கொண்டிருக்கவில்லையா! (மோடி பார்ப்பனர் அல்ல).

தமிழ்நாட்டில் ரஜினியை வைத்து ஓர் ஆட்டம் போட்டுப் பார்க்கலாமே! அதற்கு ஆன்மிக அரசியல் என்ற முகமூடியைப் போட்டுக் கொள்ளச் செய்யலாமே!

ரஜினி சூத்திரவாளாக இருந்தாலும் "கிச்சன் கேபினட்" எல்லாம் நம்மளவாள் தானே! ஒரு சான்ஸ் பார்ப்போமே என்ற மனப்பால்!  வெளியில் ஆடுவது ரஜினி பொம்மை என்றாலும் - பின் திரையில் நம் கைகள்தானே ஆட்டுவிக்கப் போகிறது என்ற நினைப்பு!

இது ஏதோ இப்பொழுதுதான் ஏற்பட்டது என்று எண்ண வேண்டாம் -இவாளின் ஜெகத் குருவான "அனுராதா ரமணன் புகழ்"  "சங்கரராமன் கொலைப் புகழ்" "ஜெயேந்திர சரஸ்வதியே இதற்கான "பிள்ளையார் சுழியை" (அவாள் பாஷையில் சொல்கிறோம்!") போட்டார்.

ஆதாரம் வேண்டுமா? 18.1.2001 நாளிட்ட"குமுதம்" பேட்டியைப் புரட்டிப் பார்த்தால் இந்தப் பூதேவர்களின் புள்ளி எப்பொழுது தொடங்குகிறது என்பது புலனாகும்.

ஜெகத் குருவோடு அப்போது சம்பாஷித்தவர் நடிகர் விஜயகாந்த் - அப்பொழுதுதான் சங்கரமடத்து ஆசாரியார் அந்தத் தூபத்தைப் போட்டார்.

"ரஜினியுடன் சேர்ந்து நீங்கள் ஓர் அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாமே!" என்பதுதான் அந்தத் தூபம்.

ரஜினிகாந்த் அந்தக் கால கட்டத்தில் ஒத்து வராததால் விஜயகாந்தே கட்சி ஒன்றை பிறகு ஆரம்பித்து விட்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று ஏழுமலையான் காலடியில் கட்சிக் கொடியை வைத்து ஆசி பெற்று வந்தவராயிற்றே விஜயகாந்த் - ஒரு வகையில் இவரும் "ஆன்மிக அரசியல்" வாதிதான்.
தாங்கள் நினைக்கும் வட்டத்துக்குள் விஜயகாந்த் சரிபட்டு வரவில்லை என்றதும், இப்பொழுது ரஜினி காந்தைக் களத்தில் இறக்கிவிட்டு  "ஆடுடா ராமா!" என்று கையில் கொம்பை வைத்துக் கொண்டு வித்தைச் செய்து பார்க்கிறது ஆரியம்.

இதில்கூட புத்திசாலித்தனம் இல்லையே, அவசரப்பட்டு விட்டீர்களே குருமூர்த்தி அய்யர் அவர்களே!

"ஆன்மிக அரசியல்" என்று ரஜினிகாந்த் சொன்ன தோடு நிறுத்தியிருந்தால்கூட கொஞ்ச காலத்திற்கு வண்டி ஓடும்.

அவசரப்பட்டு ஓட்டைவாயைத் திறந்து விட்டீர்களே - "நாட்டுக்குத் தேவை ஆன்மிக அரசியல்"  என்று உங்கள் வாயாலேயே  கூறி விட்டீர்களே!

அதுவும் எந்த இடத்தில்? காஞ்சிபுரத்தில்; காமாட் சியம்மன் கோயிலில் - ஹோமத்தை நடத்திக் கொண்டு! யார் யாரை எல்லாம் வைத்துக் கொண்டு? பார்ப்பனத் திருமேனிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு;  கிழிந்தது உங்கள் முகத்திரை! அந்தோ பாவம் ரஜினிகாந்த் - இந்த மண் குதிரைகளை நம்பியா (அழகர்) ஆற்றில் இறங்க வேண்டும்?

கேள்வி: சமீபத்தில் ஈரோட்டில் நடந்த திமுக மாநாடு பற்றி தங்கள் கருத்து என்ன?

பதில்: சடங்கு போல் நடந்திருக்கிறது என்று தோன்றுகிறது. பெரிய உற்சாகமோ, புத்துணர்வோ, புதிய சிந்தனையோ, புதிய உத்தியோ இருந்தது போல் தெரியவில்லை. திமுக - முன்னே செல்வதற்கு பதில், பலகாலம் பின்னே சென்று தி.க.வின் நிலையைத் தழுவுவதுபோல் தோன்றியது.

(துக்ளக், 11.4.2018, பக்கம் 17)

சடங்கிலேயே விழித்து சடங்கிலேயே நடந்து, சடங்கிலேயே இரவுப்படுக்கச் செல்லும் கூட்டத்திற்கு, சடங்குகளை சாடும் கம்பீரமான மக்கள் திரளைக் கண்டால் குலை நடுங்கத்தானே செய்யும்!

பெரியார் மண் என்ற தலைப்பிலே பேசினாலே அந்த ஈரோட்டுப் பூகம்பத்தின் அதிர்வு அக்ரகாரத்தை அலற வைக்கத் தானே செய்யும். சமூகநீதியைப் பற்றி சண்டமாருதம் செய்தால் சனாதனக் கும்பலின் சதை எல்லாம் நடுநடுங்கத் தானே செய்யும்!

மாநில சுயாட்சியைப் பற்றி மகத்தான குரல் கொடுத்தால் நாடற்ற கூட்டத்தின் நாடிநரம்பெல்லாம் நடுங்கத்தானே செய்யும்! வரலாற்றை மாற்றிய வைர நிகழ்வு களை வரிசைப்படுத்தினால் தங்களின் கைபர் கணவாய்களின் குட்டு உடைந்து விடுமே என்று குமுறத்தானே செய்யும்.

பண்பாட்டுப் படையெடுப்பை பற்றி எல்லாம் வரிசைப் படுத்திக்காட்டினால் பார்ப்பனப் பதர்களின் காதுகளில் எல்லாம் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போலத் தானே இருக்கும்.

தி.க.வின் நிலையைத் தழுவுவது போல் தோன்றுகிறதாம் - சபாஷ்! இதைவிட சரியான சான்றிதழை வேறு எங்கே போய்த்தான் தேடமுடியும்.

தி.க.வும் - திமுகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி -  சொன்னவர் அறிஞர் அண்ணா என்பது குடுமி குருமூர்த்தி களுக்குத் தெரியும். தி.க.வின் நிலையைத் தழுவுவது என்பது பின்னோக்கி நகர்வதல்ல - முன்னோக்கி முற்போக்கு திசையை நோக்கி பாய்வதுதான். பழைமைகளை வெட்டிச் சாய்ப்பதுதான் - நால் வருணத்தின் நச்சு வேர்களைச் சுட்டுப் பொசுக்குவது தான் - பிறப்பில் பேதம் பேசும் வேதங்களையும், மனுஸ்மிருதிகளையும், இதிகாசங்களையும் புராணங்களையும் ஒட்டு மொத்தமாக ஒழித்திடச் சூளுரை எடுப்பது என்று தான் பொருள்.

பெண்ணுரிமைக்குப் பேரிகை கொட்டுவது - மூடநம்பிக்கைக்கு கொள்ளி வைப்பது - சமூகநீதிக்கு சரித்திரம் படைப்பது - இந்திக்கும், சமஸ்கிருதத் திற்கும் சமாதி கட்டுவது - சுயமரியாதைக்கு மகுடம் சூட்டுவது - பகுத்தறிவுக்குப் பாதை அமைப்பது - சமத்துவத்துக்கும் சமதர்மத்துக்கும் ராஜபாட்டை அமைப்பது - ஒடுக்கு முறைகளுக்கு ஒரு முடிவை ஏற்படுத்துவது - ஆதிக்க சக்திகளை அடியோடு வீழ்த்துவது - மனிதநேயத்துக்கு மகுடம் சூட்டுவது - சகமனிதனை தீண்டாதே என்னும் சங்கர மடங்களின் சங்கதிகளையெல்லாம் சந்தி சிரிக்க வைப்பது - ஜெகத்குரு என்ற போர்வையில் சல்லாபம் ஆடும் கூட்டத்தின் முகத் திரையை கிழித்து முச்சந்தியில் நிறுத்துவது - சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்பது - மானமும் அறிவும் மனிதர்க்கழகு என்று கூறி மன்பதையை மேலே உயர்த்துவது - கடவுளை மற, மனிதனை நினை என்ற மாண்பினை கற்பிப்பது - பக்தி தனி சொத்து, ஒழுக்கம் பொதுச்சொத்து என்ற உயர் கொள்கையை பரப்பி ஒழுகச் செய்வது - கடமையை செய்து உரிமைக்காக உயிரை யும் கொடுக்கும் உன்னத உணர்வை ஊட்டக்கூடியது - இந்த தத்துவங்களுக்குப் பெயர்தான் துக்ளக் சொல்லும் அந்தத் தி.க.! அந்த தி.க.வை நோக்கி திமுக செல் கிறது என்று துக்ளக் எழுதுகிறது - குரு மூர்த்தி அய்யர்வாள் திமிர் முறித்து எழுது கிறார் என்றால் - இந்த ஆபத்தின் ஆழ மும் வீரியமும் என்ன என்பது அவர்க ளுக்கு நன்றாக தெரிகிறது என்று பொருள்.

உங்களைப்பற்றி ஒருவரியில் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு மானமிகு சுயமரியாதைக்காரன்! என்று சொன்னவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆயிற்றே!  அவர் கலந்து கொள்ளாத ஒரேயொரு திமுக மாநாடு - ஈரோட்டில் நடந்தது தான் - அவர் இல்லாமலேயே திமுக தி.க.வை நோக்கி செல்லுகிறது என்பதை எதிரிகளின் வாயாலேயே கேட்கும்பொழுது உள்ளம் குளிர்கிறது, உடலெல்லாம் புல்லரிக்கிறது.

அவர்களுக்கு தெரியும் - ஆம், நன்றாகவே தெரியும் இந்தியாவில் இந்து ராஜ்ஜியம், இராம ராஜ்ஜியம் என்ற எண்ணத்திற்கு இடியாக இறங்குவது இந்த ஈரோட்டுக்காரரின் தத்துவம் தான்!

இது தமிழ்நாட்டிலிருந்து இந்தியா பூராவும் பரவி, இந்துத்துவாவின் மூலநரம்பு களையெல்லாம் துழாவித் துழாவி, திசுக் களை யெல்லாம் விடுபடாமல் தொட்டுப் பார்த்துப் பார்த்து, ஒரே மூச்சில் சுட்டெரிக் கக்கூடியது என்பது அவாளுக்கு நன்றாகவே தெரியும்.

இப்பொழுதே நீட்டை எதிர்த்து, டில்லி வீதிகளில் முழக்கம் போட்டுச் செல்லும் மாணவர்கள் ஏந்திச் செல்லும் பதாகைகளில் ஒருபக்கத்தில் தந்தை பெரியாரும் இன்னொரு பக்கத்தில் அண்ணல் அம்பேத்கர் படங்கள் தான்.

ஜிந்தாபாத் - ஜிந்தாபாத்! பெரியார் ஜி ஜிந்தாபாத்! என்ற முழக்கம் இந்தியாவின் தலைநகரிலேயே வெடித்துக் கிளம்பி விட்டது. காசி பல்கலைக்கழக மாணவர் கள் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

இது காலத்தின் அறிகுறி - காகபட்டர் பரம்பரையே துள்ளாதே! நாடாளுமன்றத் தில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார் ஜூன் கார்கே (காங்கிரசு) கைபர் கணவாய் கூட்டமே எச்சரிக்கை என்று கர்ஜிக்கிறார். ஆம், அது கார்கேயின் குரல் அல்ல - அது கருஞ்சட்டையின் அரிமாக் குரல் - தந்தை பெரியாரின் தன்மானக்குரல். சும்மா சொல்லக்கூடாது - ஈரோட்டில் நடைபெற்ற திமுக மாநாடு ஆரியக்கூட்டத்தின் அஸ்தி யில் ஜூரத்தை உண்டுபண்ணி விட்டது.

ஈரோட்டில் திமுக மாநாட்டை நடத்திய அத்துணை தோழர்களுக்கும் பாராட்டு! பாராட்டு!!

தொடரட்டும் இத்திசையில் திமுகவின் பகுத்தறிவு இனமானப் பணிகள்!

 

==========================

குருமூர்த்தி வாளுக்குத் தெரியுமா? - உண்மை நாஸ்திகன் யார்?

 

நாத்திக அரசியல், தமிழ்ப்பிரிவினைவாதம் போன்ற தனது பழைய பாணியிலிருந்து திமுக மாறினால் அதற்கு ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருக்கும். தமிழகம் மாற்றத்தை விரும்புகிறது என்பது வெளிப்படை.

- துக்ளக் 14.3.2018, பக்கம் 15) எஸ்.குருமூர்த்தி

எங்கே சுற்றிவந்தாலும் பார்ப்பனர்களுக்கு திமுகவின் அந்த நாத்திகக் கொள்கை பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. நாத்திகம் என்ற அந்தச் சொல்லில் ஏதோ கடவுள் மறுப்பு என்று மேம்போக்காகப் பொருள் கொள்ளக்கூடாது.

இந்துமதத்தை பொருத்தவரை கடவுள் மறுப்பு என்பது நாத்திகம் அல்லவே! வேத மறுப்புதான் நாத்திகம் என்பது.

இதனை நாம் சொல்லவில்லை; மறைந்த சூப்பர் சீனியர் சங்க ராச்சாரியார் சந்திரசேகேந்திர சரஸ்வதியே அருமொழியாக அருள் பாலித்திருக்கிறார் இதோ அது.

நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வர வாதம் என்றுதானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக்கொண்டே கூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும்.

அப்படிப்பட்ட பலபேர் இருக்கிறார்கள் இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகர் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம்.

வைதீக வாழ்க்கையை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞானசம்பந்தரின் கொள்கையாகவும் இருந்திருக்கிறது. தீவிர பக்தி இல்லாமலிருந்தால் கூட அல்ல என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகேந்திரர் எடுத்து வழங் கினாரே (தெய்வத்தின் குரல் 2ஆம் தொகுதி, பக்கம் 407-408)

பார்ப்பனர்களின் மனுஸ்மிருதியும் அதையேதான் அழுத்தமாகக் கூறுகிறது.

வேதம் (சுருதி) தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண்டை யும் தர்க்க யுத்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாகின்றான்

(மனுதர்மம் அத்தியாயம் 2 சுலோகம் 11)

 

இதனைப் புரிந்துகொண்டால் வருணாஸ்ரமத்தை, ஜாதியை எதிர்க்கும் எவரும் இந்து மதத்தின்படி நாஸ்திகர்களே.

திமுக இத்தகைய பணியில் ஈடுபடுவது என்பதை வரவேற்க வேண்டுமே தவிர - குறை கூறுவதற்கு என்ன இருக்கிறது?

திமுக பழைய பாதையிலிருந்து விடுபட வேண்டும் என்ப தற்குப் பதிலாக பார்ப்பனர்கள் பூணூல் தரிப்பது உட்பட தங் களின் பழைய பாணியிலிருந்து விடுபட்டால் தப்பிப் பிழைக்க முடியும், மீண்டும் பூணூல் தனத்தில் ஈடுபட்டால் இளைஞர்கள் எதிர் வினையைத்தான் செய்வார்கள் - எச்சரிக்கை!

Banner
Banner