எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அண்ணாமீது அவதூறா?

மின்சாரம்

அபாண்டம் சுமத்துவது, அழிபழி பேசுவது, அழிச்சாட்டியம் செய்வது, அக்கப் போர் கிளப்புவது என்பதெல் லாம் ஆரியக் குலத்தாருக்கு அதிரசம் சாப்பிடுவது மாதிரிதான். இவற்றைச் செய்வதற்குக் கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சம் பட மாட்டார்கள்.
அன்றைக்கு மட்டுமல்ல, தொலைக் காட்சியில் விவாதம் செய்ய ஒலி பெருக்கியுடன் உட்காரும் இன்றைய அய்யர், அய்யங்கார் பார்ப்பனர்வரை அதே பிழைப்புதான், அதே புத்திதான்!

கொள்கையை நேர்கொண்ட பார்வையோடு சந்திக்கத் திராணி யற்றவர்கள், அறிவு நாணயம் என்றால் ஆழாக்கு என்ன விலை என்று கேட் பவர்களாயிற்றே - அந்தயீனக் குணங் கள் எல்லாம் அவர்களின் ஜென்மத் தோடு பிறந்தது என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜய பாரதத்தை’ ஒரு தடவை புரட்டிப் பாருங்கள், புரட்டு வகை வகையான வண்ணத்தோடு நமட்டுச் சிரிப்பு செய்யும்.

‘‘விபூதி பூசிக்கொண்ட அண்ணா துரை’’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது ‘விஜயபாரதத் தில்’ (6.1.2017, பக்கம் 26, 27) என்றால், மேலே கூறப்பட்ட கருத்துகள் துல்லிய மான உண்மை என்று விளங்கத்தானே செய்யும்.

அண்ணா உடல்நிலை பாதிக்கப் பட்டு அடையாறு மருத்துவமனையில் இருந்த நேரம் அது. அவருடன் மருத்துவமனையில் இருந்த காவல் துறை அதிகாரி வே.ராமநாதன் தன் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார் என்கிறது விஜயபாரதம்.

அண்ணாவைக் காண்பதற்காக சுத்தானந்த பாரதியார் அங்கு வந்தாராம். இடுப்பிலிருந்து விபூதிப் பையை எடுத்தாராம் சுத்தானந்த பாரதியார்... கொஞ்சம் தயங்கினாராம். அண்ணா துரை கடவுள் மறுப்புக் கொள்கை உடையவராயிற்றே, விபூதி பூசிக் கொள்ளமாட்டாரே என்று அவர் எண்ணியிருக்கவேண்டும். ஆனால், அண்ணா, தன் தலையைத் தூக்கி நெற்றியைக் காண்பித்தாராம். தயக்கம் நீங்கி சுத்தானந்தபாரதியார் கரம் விபூதி யைப் பூசிற்று என்று கைக்கூசாமல் எழுதுகிறது ‘விஜயபாரதம்’.

அண்ணாவைப்பற்றி அறிந்தவர் களுக்கு அவர் எத்தகைய பகுத்தறிவு வாதி என்பது ஊரறிந்த ஒன்று.

அண்ணா அவர்கள் முதலமைச் சராக இருந்தநேரம்; தூத்துக்குடி துறைமுகத் திட்டம், சேது சமுத்திரத் திட்டமெல்லாம் திராவிட இயக்கத்தின் கனவுத் திட்டங்கள் ஆயிற்றே! மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அப்பொழுது தமிழ்நாட்டிற்கு வந்திருந் தார். தூத்துக்குடி துறைமுகத் திட்டப் பிரச்சினை சுமூகமாக முடிவுற்றது. அனைவருக்கும் பெருமகிழ்ச்சி!

அப்பொழுது மத்திய அமைச்சர் வி.கே.ஆர்.வி.ராவ் முதலமைச்சரிடம் கூறினார், ‘‘தூத்துக்குடி துறைமுகத் திட்டக் கோரிக்கை வெற்றியடைந்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்த காஞ்சி புரத்தில் உள்ள வரதராஜசாமி கோவி லுக்குப் போகலாமே’’ என்று கூறினார்.

தான் கோவிலுக்கு வருவதற்கு இல்லை என்றும், வேண்டுமானால், தன் குடும்பத்தில் ஒருவரை அனுப்புவ தாகவும் கூறினார் அண்ணா.  இந்தத் தகவலை சொன்னவரும் அந்த மத்திய அமைச்சர்தான் (‘விடுதலை’, 20.9.1967).

இதில் குறிப்பிடத்தக்க ஒரு செய்தி என்னவென்றால், இருவருமே காஞ்சி புரத்தில் பிறந்தவர்கள் என்பதுதான். அண்ணாவின் பொது வாழ்வில் இது போன்ற எத்தனையோ நிகழ்வுகள் உண்டு.

விஜயபாரதம் சொல்லுகிறபடி பார்த் தாலும்கூட, சுத்தானந்தபாரதியார்பற்றி குறைந்த மதிப்பீடும், அறிஞர் அண் ணாவைப்பற்றிய உயர்ந்த மதிப்பீடும், பெருந்தன்மையும்தானே மிளிர்கிறது. ஆனால், அந்த நோக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். ஏடு எழுதவில்லை என்பது தான் முக்கியம்.

தந்தை பெரியார் அவர்கள் குன்றக் குடி மடத்திற்கு அடிகளாரின்  அழைப் பின் பெயரில் சென்றபோது, மடத்தின் சம்பிரதாயப்படி அய்யாவின் நெற்றியில் திருநீறைப் பூசிவிட்டார்கள். அதற்காக தந்தை பெரியார் சிவனை ஏற்றுக் கொண்டு சைவ மதத்திற்குக் குதித்து விட்டார் என்று பொருளா? (மடத்து நிர்வாகிகளை அடிகளார் கடிந்து கொண்டார் என்பது வேறு சங்கதி).

ஆனால், தந்தை பெரியார் அவர் களின் எதிரிகளே நெகிழும் அளவிற் கான பண்பாடு அது என்பது அசாதாரணமானதே?

கல்வி நிறுவனங்களில் உரையாற்ற தந்தை பெரியார் அழைக்கப்படு வதுண்டு. அங்குக் கடவுள் வாழ்த்துப் பாடினால், இருபுறமும் உள்ள தோழர் களின் தோள்களைப்பற்றிக் கொண்டு, கடவுள் வாழ்த்துப் பாடல் முடியும்வரை நின்று கொண்டு இருப்பாரே பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார்!

அதேநேரத்தில், கழக நிகழ்வுகளுக்கு மத நம்பிக்கையுள்ள பெருமக்களை அழைக்கும் நேரத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு முன்கூட்டியே அவர் பிறப்பிக்கும் கட்டளை என்ன தெரியுமா?

வழக்கமாகக் கழக நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் சொல்லப்படும் கடவுள் மறுப்பு வாசகத்தைச் சொல்லக்கூடாது என்பதுதான் அந்தக் கட்டளை. அதற் காகத் தந்தை பெரியார் கொள்கையில் பின்னடைந்து விட்டார் என்று பொருள்படுமா?

‘விஜயபாரதம்’ குறிப்பிட்ட அதே சுத்தானந்த பாரதியாரையே எடுத்துக் காட்டி இன்னொரு தகவலையும் சொல்ல முடியும். அதுவும் ‘தினமணி கதிரி’லிருந்தே அந்த எடுத்துக் காட்டைக் கொண்டு வந்து நிறுத்த முடியுமே!

இதோ அவரே பேசுகிறார்:

பெரியார் வீட்டில்
சுத்தானந்த பாரதி செய்த பூஜை

பெரியாரைக் காண ஈரோடு சென் றேன். என்னை அன்பாக வரவேற்று தமது மனைவியாருக்கு அறிமுகம் செய்தார்.
எனது திடீர் வருகை அவருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. ‘சேலம் வந்தேன்; உங்களையும் காண விரும் பினேன்’ என்றேன்.
சிறிது நேரம் உரையாடினோம். குளியல் அறையைக் காட்டினார். பயண அலுப்புத் தீரக் குளித்தேன். குற்றால அருவிபோல் ஜலம் கொட்டியது.

பெரியார் என்னை அறிந்தவர். என்னுடைய ஆஸ்திகக் கொள்கைகள் அவருக்குப் பிடிக்காதவை. ஆயினும், அவர் இதற்காக வேற்றுமை காட்டாமல், வீட்டிற்கு வந்த அதிதியை எப்படி வரவேற்று உபசரிக்க வேண்டுமோ அப்படி வரவேற்று உபசரித்தது எனக்கு வியப்பைத் தந்தது.

அவருடைய துணைவியார் கூடத் தில் மெழுகிக் கோலமிட்ட இடத்தில், பூசை செய்வதற்கு எல்லா ஏற்பாடு களையும் செய்தார்.
அனுஷ்டானங்கள் முடித்து சூரிய நமஸ்காரம் செய்து, பூசை அறைக்குத் திரும்பினேன். வெள்ளித் தாம்பாளத்தில், பூசைக்குரிய புஷ்பங்கள், பிற பொருள் கள் கொண்டு வைத்தார் பெரியாரின் துணைவியார்.

வேத மந்திரங்கள் ஜபித்து, தீபம் காட்டி முறைப்படி பூசை முடித்தேன். இதையெல்லாம் அவர் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

தம் வீட்டில் மாறுபட்ட கொள்கை யுடன் ஒருவர் பூசை செய்கிறாரே என்று அவர் கோபமோ, ஆட்சேபணையோ கொள்ளாமல் பொறுமையாக இருந்தது அவருடைய பெருந்தன்மையை நன்கு எடுத்துக்காட்டியது.

பூசை முடிந்த பின், ‘‘மீரு போஞ் சேயண்டி’’ - நீங்கள் சாப்பிடுங்கள் என்று அன்புடன் சொல்லி விருந் துண்ணச் செய்தார்.
விருந்தோம்பலின் இலக்கணமாகப் பெரியார் திகழ்ந்தார்.

மாலையில் ஒற்றை மாட்டு வண்டி யில் என்னை வழியனுப்ப பெரியார் வந்தார் ஸ்டேஷனுக்கு.

‘‘நாயக்கரே, தங்களுடைய மனம் தங்க மனம்’’ என்று நன்றி தெரிவித் தேன். அவர் ‘‘சால சந்தோஷமண்டி’’ என்று கரங்கூப்பி விடையளித்ததை என்னால் மறக்கவே முடியவில்லை.

இவர் பெரியார் என்பதில் எள்ளள வும் சந்தேகமே இல்லை!

‘சாதனையும் சோதனையும்’
கவியோகி சுத்தானந்த பாரதி
எழுதிய நூலில்

- பா.நா.கணபதி

(‘தினமணி கதிர்’, 6.5.1990)

பெரியார்தம் பெரும் பண்புக்கு முன் எந்த பெரியவாளும்  நிற்க முடியுமா?

பெரியவாள் என்றதும் இன்னொரு நிகழ்வும் நினைவிற்கு வந்து தொலை கிறது. அந்தப் ‘பெரியவாள்’ வாழ்விலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியாரே!

காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி ‘மேனா’ (ஒரு வகைப் பல்லக்கு) வில் வைத்துத் தூக்கிச் சென்று கொண்டிருந்தனர். அங்கு தந்தை பெரியார் பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் எல்லாம் சிரமப்பட்டு தூக்கிச் செல்ல சொகுசாக உட்கார்ந்து போகிறாரே, இவரெல்லாம் துறவியா? என்ற அர்த்தம் உள்ள வினாவை எழுப்பினார் தந்தை பெரியார்.

அன்றுமுதல் சங்கராச்சாரியார் ‘மேனா’வில் செல்லுவதை விட்டுவிட்டு நடந்து செல்ல ஆரம்பித்தார். ‘சக்தி விகடன்’ பொறுப்பாசிரியர் ரவிபிரகாஷ் எழுதிய கட்டுரையிலிருந்து இந்தத் தகவல் தரப்படுகிறது. (இப்பொழுதுள்ள காஞ்சி சங்கராச்சாரியார்- மாஜி சிறைக் கைதி ஜெயேந்திர சரஸ்வதியோ விமானத்தில் ‘எக்சிகியூட்டிவ்’ வகுப்பில் அல்லவா அமர்ந்து பயணம் செய் கிறார்!).

அறிஞர் அண்ணாவை அவதூறு செய்து பழி தீர்க்கும் வேலையை ‘விஜயபாரதம்’ தான் செய்கிறது என்று நினைக்கவேண்டாம்; காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதியே அந்த வேலையைச் செய்தது உண்டே!

‘‘அண்ணா இறந்தபோது பெரிய வருக்குத் தகவல் வந்தது. உடனே ஏகாம்பரேஸ்வரர் கோவில் மண் ணெடுத்து சென்னைக்கு அனுப்பி னார்கள். இந்த ஊர் மண்ணை அவரது சமாதிக்குள் வைக்கச் சொன்னார்கள். இன்றைக்கும் அண்ணா சமாதியில் இருக்கிறது காஞ்சிபுரத்து மண். இறந்தாலும் அண்ணா இந்த ஊர் மண்ணுடன்தான் இறந்திருக்கிறார்’’ (‘குமுதம்’, 28.12.2000, பக்கம் 48)

- இப்படி அண்ணாமீது அவர் இறந்த பிறகும் சேற்றை வாரி இறைத்த கும்பலாயிற்றே!

அண்ணாமீது எவ்வளவு ஆத்திரம் இருந்தால், அவர் இறந்த பிறகும்கூட அவர்மீது அபாண்டம் சுமத்துவார்கள்.

‘‘முதலில்லா வியாபாரம் - சோக மில்லா வாழ்வு’’ என்று சங்கராச்சாரி யாரை அர்ச்சித்தவர் அண்ணாவா யிற்றே.
(‘திராவிடநாடு’,, 19.4.1942, ‘‘சங்கராச்சாரி பதவி தற்கொலை’’ என்னும் கட்டுரையில்).

அந்தக் கோபம்தான் அண்ணா இறந்த பிறகும் அவர்மீது அசிங்கத்தைத் தூக்கி எறிந்ததற்குக் காரணம்!

அந்த அபாண்டத்தைப் படித்ததும் திராவிடர் கழகம் வாளா இருக்க வில்லை. அதை வைத்துக்கொண்டு, ‘பார்த்தாயா, அண்ணாதுரையே இப்படி’ என்று எழுதுகோல் பிடிக்க அவாள் வட்டாரத்தில் ஆட்களுக்காப் பஞ்சம். வருங்கால ஆய்வாளர்கள் இதனை சிக்கெனப் பிடித்துக் கொள்வார்களே! இதுகுறித்து அண்ணாவின் மகன் டாக்டர் பரிமளம் அவர்களிடம் கேட் கப்பட்டது.

அதற்கு உடனடியாக அண்ணாவின் அருமை மகன் டாக்டர் பரிமளம் மறுப்பு எழுதினார்.

அந்தக் கடிதம் இதோ:
டாக்டர் அண்ணா பரிமளம்
மறுப்பு - கண்டனம்!

அறிஞர் அண்ணாவின் மகன் டாக்டர் சி.என்.ஏ. பரிமளம் ‘விடுதலை’ ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர் களுக்கு எழுதிய கடிதம் வருமாறு:

அன்புள்ள ஆசிரியர் அவர்கட்கு,
வணக்கம். காஞ்சி சங்கராச்சாரியார் என் தந்தை பேரறிஞர் அண்ணா அவர்கள்பற்றி கூறிய சில கருத்து களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இந்த மடலை எழுதுகிறேன்.

என் தந்தை பேரறிஞர் அவர்கள் மறைந்தபோது அவரை அடக்கம் செய்த இடத்தில் காஞ்சி சங்கராச் சாரியார் காஞ்சி கோவிலில் இருந்து எடுத்த மண்ணை அனுப்பி அதை சந்தனப் பெட்டியில் வைத்ததாக துளிகூட உண்மையில்லாத ஓர் செய் தியை ‘குமுதம்’ இதழ் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அண்ணா அவர்களின் மூத்த மகன் என்கிற முறையில் இதை நான் மறுக் கிறேன்; வன்மையாகக் கண்டிக்கிறேன். என் தந்தை அவர்கள் மறைந்து முப்பத் தோரு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு செய்தியை வெளியிடுவது என்பது ஒழுக்கமற்ற, நாணயமற்ற ஒரு செயல்.

முன்னர் ஒருமுறை என் அன்னை இராணி அம்மையார் இவரைச் சந்தித் தாக ஓர் பொய்யான செய்தியை வெளியிட்டார்; அதையும் மறுத்தேன். என் அன்னை மறைகிறவரை எந்தக் கோவிலுக்கும் செல்லாதவர். இப்படி அடிக்கடி உண்மை கலப்பற்ற பொய் செய்தியை இவர் சொல்லுகிறபோது எனக்கு என் தந்தை அண்ணா அவர்கள் ‘ஆரியம் விதைக்காது விளையும் கழனி’ என்று சொன்ன, சொற்றொடர் நினைவுக்கு வருகிறது.

இப்படி அடிக்கடி நச்சு விதைகளை அவர் விதைப்பதை இதோடு நிறுத்திக் கொள்ளட்டும் எனக் கூறி, அவர் கூறியது உண்மையல்ல, அது மட்டு மின்றி இதை நான் வன்மையாகக் கண் டிக்கிறேன் என்பதை தமிழ்ச் சமுதா யத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கள்
பரிமளம்

அபாண்டம் பேசுவது ஆரியத்தின் பிறவிக்குணம். அது திருந்துவதாக இல்லை போலும்!

தி.க. தலைவர் வீரமணியின் குடும்பத்தினர் என்னை சந்தித்ததுண்டு என்று இதே சங்கராச்சாரியார் அளித்த பேட்டியைத் தொடர்ந்து கழகத் தலை வர் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதே!
இந்தப் பார்ப்பனக் கும்பலுக்கு இதே பிழைப்பு!

ஆரியத்தைப் பற்றி அண்ணா தீட்டினாரே அரிய ஓவியமாக அதனை அப்படியே தருவது இந்த இடத்தில் பொருத்தம்!
பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேசநா இரண்டுடையாய் போற்றி!

தந்திர மூர்த்தி போற்றி!
தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வன்கண நாதா போற்றி!
கொடுமைக் குணாளா போற்றி!
கோழையே போற்றி, போற்றி!

பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படுமோசம் புரிவாய் போற்றி!
சிண்டுமுடிந் திடுவோய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!

உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம்இனம் கெடுத்தோய் போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இறைஇதோ, போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!!

(நூல்: ஆரிய மாயை)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner