எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'எங்கள் கடவுள் கிருஷ்ணன் செய்ததைத்தான் நானும் செய்கிறேன்!" - சாமியார் ஆசாராம்

எங்களது கடவுள் கிருஷ்ணன் பல பெண்களு டன் ஒரே நேரத்தில் கூடியிருந்தார், அதை இந்துக்கள் தெய்வச்செயலாக பார்க்கிறோம். அதே போல் தான் நாங்களும் -- பிரம்மசொரூபமான சாதுக்களாகிய நாங்கள் பெண்களுடன் சேருவது தெய்வீகச் செயலுக்கு ஒப்பானதாகும். மக்கள் என்னை தெய்வமாக பார்க்கின்றனர். நான் மக் களுக்கான பல நல்லசெயல்களைச் செய்துள்ளேன், எனது இந்த செயலுக்கு என்னுடைய ஒவ்வொரு கூட்டத்திலும் கூடும் லட்சக்கணக்கான மக்களே சாட்சிகளாக இருக்கின்றனர். என்மீது பாலியல் கொடுமை குற்றச்சாட்டு என்பது உண்மையோ அல்லது புனையப்பட்டதோ என்பது குறித்து எனக்குக் கவலையில்லை, நாங்கள் தெய்வீக சக்திபெற்றவர்கள். எங்கள் மீது குற்றம் சுமத்துவதே அவசியமற்றது, மதநூல்களின் படி என்னைப்போன்ற சாதுக்கள் மீது விசாரணை நடத்துவதும், சிறையில் வைப்பதும் இந்துமதத் தின் மீது நடத்தப்படும் தாக்குதலே ஆகும், இதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அதற்கு நீதிபதி இங்கு மதம் தொடர்பான சொற்பொழிவுகள் கேட்க யாரும் வரவில்லை, அரசமைப்புச்சட்டத்தின் படி விசாரணை நடந்து வருகிறது, குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் அரசமைப்பு சட்டத்தின் முன்பு சமமே! ஆகவே இது போன்ற கருத்துக்களைக் கூறி நீதிமன்ற நேரத்தை வீனடிக்கவேண்டாம் என்று கூறினார். இந்த சாமியார் ஆசாராம் செய்த குற்றமென்ன? சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தார் என்பது தான். இவரைக் கைது செய்ய காவல்துறை வந்தபோது அவர்கள் மீது இவரும் இவரின் சீடர்களும் தாக்குதல் நடத்தினர். 780 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த குற்றமும் உண்டு. ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் உள்ள னர் ஆசாராமும் - அவரது மகனும். குருமூர்த்திகளே - இந்தக் கும்பல் யாரைப் பார்த்துக் கெட்டுப்போனது? உங்கள் இந்து கடவுளைப் பார்த்துதானே!

 

பொள்ளாச்சியில் பொல்லாத மனித மிருகங்கள் நடந்து கொண்ட கேவலத்தைப் பற்றிப் பேச துக்ளக் கூட்டத்துக்குத் துப்பு இல்லை.

உடனே கலாச்சார சீரழிவுக்கான காரணங்கள் என்று  தந்தை பெரியாரையும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களையும் இழுத்துக் குளிர் காய்கிறது.

தப்பு செய்ததாகக் கூறப்படும் பையன்கள் அந்தோ பாவம்!

அவர்கள் மீது குறை சொல்லாதீர்கள். அவர்களைக் கெடுத்தது பெண்கள்தான் என்று ஒரு கூட்டம் சொல்லு கிறது என்றால், இந்தக் கூட்டம் அந்தக் கொடியவர்களின் பாதுகாவலர்கள் என்றுதான் அர்த்தம்.

எப்பொழுதுமே துக்ளக்கின் பார்வை என்பது பெண்கள் மீது சேற்றை வாரி இறைப்பதும், குற்றப் பத்திரிகைப் படிப்பதும்தானே! கிராமத்திலே ஒரு பழமொழி சொல்லுவார்கள் - எங்கள் பையன் பொல்லா தவன், உங்கள் பெண்களைக் கொஞ்சம் அடக்கி வையுங்கள் என்று.

இந்த ஒரு தலைநியாயத்தைத்தான் எப்பொழுதுமே துக்ளக் தன் கையில் வைத்திருக்கிறது.

இந்தப் பொள்ளாச்சி அவலத்தில்கூட குருமூர்த்தி கூட்டம் யார்மீது சீறிப் பாய்கிறது?

குற்றவாளிகள் பெண்கள் தங்கள் வலையில் விழத் தயாராக, இருந்தார்கள் என்பது உண்மை. 'தற்காத்து என்று துவங்கும் பெண்மை பற்றிய குறளில், தற்காப்பு ஒரு பெண்ணின் முதல் கடமை என்று விளக்குகிறார் திருவள்ளுவர். தன்னைக் காத்துக் கொள்ளும் முதல் கடமையை மறந்த பெண்களை யாராலும், எந்தப் போலீஸாலும், சட்டத்தாலும், ஏன் காப்பாற்றவோ கூட முடியாது. தங்களை உயர்வாக நினைக்காமல், தங்களையே மரியாதைக் குறைவுக்கு ஆட்படுத்திக் கொள்ளும் பெண்களைக் கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது.

உயர்ந்த பொருளுக்கான தங்கத்துக்குத்தான் பாதுகாப்பு தேவை - இரும்புக்கு அல்ல. தெரிந்தால், முன்பின் தெரியாத ஆண்களுடன் தனியாகப் போகத் துணிந்த பெண்கள், வருவதை மறந்து, தங்களது தற்காப்பைத் துறந்தவர்கள் என்றுதான் அர்த்தம். அதன் விளைவுகளை அவர்களும், அவர்கள் குடும்பங்களும் பொள்ளாச்சியில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியாக திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் ஆய்வுரை, அறிவுரை, அடக்கவுரை எல்லாம் எல்லாம் பெண்களுக்கே! பெண்களுக்கே!!

அவன் ஆம்பிளை அப்படித்தான், நீ பொட்டைக் கழுதை நீயல்லவா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? என்று சொல்லும் ஆண் எஜமானத்துவ ஆணவம் கலந்த மூர்க்கத்தனமானது இதில் துருத்திக் கொண்டு எழுகிறது என்பது புரியவில்லையா?

அவன் முரடன், நீ அடங்கிப் போ!, அவன் பெரும் பணக்காரன் - நீ ஓட்டையாண்டி ஒதுங்கிப் போ!, அவன் மிட்டாமிராசு - நீ அவனை அண்டிப் பிழைக்க வேண்டியவன் உனக்கு என்ன வேண்டிக் கிடக்குது உரிமை?

ஜான் பிள்ளையானாலும் அவன் ஆண் பிள்ளை, நீ கேவலம் பொட்டச்சிக் கழுதை! என்று கூறும் பெண்கள் மீதான ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கவாதிகளின் கொடும் பாம்பின் விஷம் துக்ளக்கின் வரிகளில் ததும்புகிறேத!

குருமூர்த்தியின் குருநாதரான திருவாளர் சோ ராமசாமி காலத்திலும் சரி, பெண்கள் என்றால் ஒரு வகை இளக்காரம் கேலி, கிண்டல், மட்டந்தட்டும் மமதை இவைதான், மின்னித் தெறிக்கும்! பல நேரங்களில் விடுதலை அவற்றையெல்லாம் எடுத்துக் காட்டி துக்ளக்கின் துர்ப்புத்தியை அம்பலப்படுத்தியதுண்டு. இதோ சில எடுத்துக்காட்டுகள்:

கேள்வி: பெண்களைப் பற்றி உங்களின் உண்மையான அபிப்பிராயம் தான் என்ன?

பதில்: உயர்ந்தவர்கள். அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள். (18.3.2009)

கேள்வி: பெண்களுக்கு சமஉரிமை என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?

பதில்: யார் இப்படியெல்லாம் என்னைப் பற்றி புரளி கிளப்பி விடுகிறார்களோ, தெரியவில்லையே! பெண்களுக்குச் சம உரிமை தேவைதான். மாமியார், மருமகள் ஆகியோருக்குச் சம உரிமை வந்தால், அது வரவேற்கத் தக்கதுதான். (22.4.2009)

கேள்வி: பெண்களிடம் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும்?

பதில்: என்ன தவறு செய்தாலும், அந்தத் தவறை தான் செய்யாதது போலவும், மற்றவர்கள்தான் அதற்குக் காரணம் என்பது போலவும் நடந்து கொள்கிற திறமை, அதைக் கற்றுக் கொண்டால் ஆண்களும் கூட நிம்மதியாக இருக்கலாமே? (20.5.2009)

கேள்வி: மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சராக தமிழகத்திலிருந்து ஒருவர் கூட நியமிக்கப்படவில்லையே?

பதில்: தப்பித் தவறி ஏதாவது நல்லது நடக்கிற மாதிரி தெரிந்தால் போதும் - உங்களைப் போல் பலருக்கு ஆட்சேபம் வந்துவிடுகிறது. யார் கண்டது? உங்கள் குறை தீராது என்று சொல்லிவிட முடியுமா என்ன? குடும்பத்தில் சமநீதி காண்பதற்கு வழி பிறந்தால், உங்கள் குறை நீங்கிவிடலாமே! (17.6.2009)

கேள்வி: மக்களவையில் மகளிருக்காக இட ஒதுக் கீடு மசோதா நூறு நாள்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் கூறியுள்ளாரே?

பதில்: சில தண்டனைகள் சொன்னபடி நடப்ப தில்லை. அஃப்ஸல் தூக்குத் தண்டனை அப்படியே பெண்டிங் ஆக இருக்கிறதே? அந்த மாதிரி இதுவும் தொங்கலில் விடப்பட்டால்தான் உண்டு. (24.6.2009)

கேள்வி: மக்களவை சபாநாயகர் பெண் என்றால் இனி அமளியின்றி சபை நடைபெறுமா?

பதில்: ஒரு வீட்டில் பெண்கள் அதிகாரம் ஓங்கி இருந்தால், அந்த வீட்டில் அமளி, துமளி இல்லாமல் போய்விடுமா? அந்த மாதிரிதான் இதுவும். (1.7.2009)

கேள்வி: கருநாடகாவில், ஷோபாவின் அமைச்சர் பதவி தியாகத்தாலும், பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் செய்து வைத்த சமரசத்தாலும் கருநாடக பா.ஜ.க. அமைச்சரவையின் சிக்கல் தீர்ந்துள்ளதே? பெண்களின் பெருமை இப்போதாவது தங்களுக்குப் புரிந்திருக்குமே?

பதில்: புரிகிறதே! ஒரு பெண்மணி தன் பதவியை விட்டு விலகுவதாலும், மற்றொரு பெண்மணி தனக்கு எந்தப் பதவியையும் நாடாமல் சமரசம் தேடியதாலும் பிரச்சினை தீர்ந்திருக்கிறது. அதாவது பெண்களில் பதவியை நாடாமல் இருக்கிற வரை பிரச்சினைகள் தீர வழியுண்டு. இதைத்தானே நீங்கள் சுட்டிக் காட்டுகிறீர்கள். புரிகிறது. (21.2.2009)

துக்ளக்கில் வெளிவந்த இந்தக் கேள்வி பதில் களுக்கு விளக்கமும் வேண்டுமோ! கைப் புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?

ஃ பெண்கள் யார்? உயர்ந்தவர்களாக இருக்க விரும்பாதவர்கள்.

ஃ பெண்களுக்கு சம உரிமை என்றால் என்ன?

மாமியார் மருமகளிடத்தில் எங்காவது சம உரிமை இருக்குமா?

ஃ பெண்கள் எத்தகையவர்கள்?

என்ன தவறு செய்தாலும் அந்தத் தவறை தான் செய்யாதது போல மற்றவர்கள்தான் காரணம் என்று சொல்லக் கூடியவர்கள்.

ஃ மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தள்ளிப் போகிறதே?

சில தண்டனைகள் சொன்னபடி நடப்பதில்லை.

ஃ மக்களவையில் சபாநாயகர் பெண் என்றால் இனி அமளி துமளி நடைபெறாது அல்லவா?

ஒரு வீட்டில் பெண்கள் அதிகாரம் ஓங்கி இருந்தால், அந்த வீட்டில் அமளி துமளி இல்லாமல் போய்விடுமா?

பெண்களைப் பற்றி இப்படி அடிமட்டமான சிந்தனைச் சீழ்பிடித்த கூட்டம்தான் கலாச்சாரச் சீரழி வுக்குக் காரணம் என்று தந்தை பெரியாரையும், ஆசிரியர் வீரமணி பற்றியும் பழி தூற்றுகிறது!

இந்த இந்துத்துவா சிந்தனைக் கேடர்கள் இந்து மதத்தில் இருக்கும் பெண் கடவுள்களையும் இப்படித்தான் தரம் தாழ்த்தி கூட்டிப் பெருக்கிக் குப்பை மேட்டில் தள்ளுவார்களோ!

இவர்களின் முழு முதற்கடவுளான டான்ஸ் மாஸ் டர் நடராஜன் பார்வதியுடன் நடனத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு ஆடி, வெற்றி கிட்டாத நிலையில், ஒரு காலைத் தூக்கிக் காட்டினானே - அதன் பொருள் என்ன? பெண்ணான பார்வதியால் அவ்வாறு காலைத் தூக்கிக் காட்ட முடியாது என்ற ஆபாச கெட்ட புத்தியால்தானே!

இவர்கள் நம்பும், மதிக்கும் கடவுளுக்கே இந்த துர்ப்புத்தியும், ஆபாச சாக்கடைத்தனமான வக்கிரப் புத்தியும் இருக்கும்போது இவர்களின் காமக்கோடி சங்கராச்சாரியிலிருந்து குருமூர்த்திகள் வரை இந்தத் தரத்தில் இருப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாதுதான்.

படுக்கை, ஆசனம், அலங்காரம், கோபம், பொய், துரோகசிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (மனுதர்மம், அத்தியாம் 9, சுலோகம் 17).

இந்த மனுதர்மத்தை சட்டப் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என்று கூறும் ஆர்.எஸ்.எஸின் தத்து புத்திரர்களான குருமூர்த்திகள் பொள்ளாச்சியில் பெண்கள் வேட்டையாடப்பட்டது பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படுவார்களா?

பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நில்லாமல் அவர் கள் அடக்க ஒடுக்கமாக நடந்திருந்தால், இப்படி யெல்லாம் நடந்திருக்குமா என்று அந்த இடத்திலும் மனுதர்மப் புத்தியோடு பெண்கள் மீதே சேற்றை வாரி இறைக்கிறார்கள் என்றால், பெண்கள் இந்தக் கூட் டத்தை எந்த இடத்தில் வைப்பது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா?.

பதினாறாயிரம் கோபிகா ஸ்திரிகளுடன் கும்மாளம் அடித்தவன் என்னும் கிருஷ்ணன்தானே அவர்க ளுக்கு பரமாத்துமா?

இவாள் ஆத்து திருஞானசம்பந்தன் பதினாறு வயதிலேயே செத்துப் போனான் - இவ்வளவுக்கும் பார்வதி தேவியிடம் ஞானப்பால் குடித்தவன்!.

அந்த வயதிலேயே கூட புத்தர், சமணர் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழிக்க மதுரை வாழ் சிவனி டத்திலே அருள் புரிய வேண்டும் என்று விண்ணப்பம் போட்டவன் தானே.

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்

திண்ணகத் திரு ஆலவாயருள்

பெண் அகத்து எழில் சாக்கியப்பேய், அமண்-

பெண்ணர் கற்பு அழிக்கத் திரு உள்ளமே!

கற்பழிப்பதற்கே கடவுளிடம் வரம் கேட்ட கும் பலை எங்காவது கேட்டதுண்டா? அதுவும் பதினாறு வயதுக்கு முன்னதாகவே!

குருமூர்த்திக் கும்பலுக்கு மாடல் புருஷனே இத்தகு திருஞானசம்பந்தன் போன்றவர்கள்தானே!

அப்படி இருக்கும்போது பொள்ளாச்சிப் புல்லர் களைக் கண்டித்திட எப்படி மனம் வரும் இந்தக் கும்பலுக்கு?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner