கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

-கலி.பூங்குன்றன்

தினமணி  செவ்வாய்க்கிழமை, 9 ஏப்ரல், 2002

கேள்வி: ஒரு காலத்தில் ஊழல் அற்ற நிருவாகம் என்று சொல்லித்தான் பா.ஜ.க.வை முன்னிறுத்தினீர்கள். ஆனால் இன்றைக்கு நாட்டிலேயே மோசமான முன்னுதாரணமாக கர் நாடகத்தை மாற்றி விட்டது. பா.ஜக.. இனியும் எப்படி பா.ஜ.க.,வைத் தாங்கிப் பிடிப்பீர்கள்?

பதில்: பா.ஜ.க.வை இப்படி ஓரிருவர் மீதுதான் குற்றம் சாட்ட முடியும். இந்த நாட்டிலேயே சிறந்த நிருவாகத்தை வழங்கும் குஜராத்தை ஆள்வதும் பா.ஜ.க. தானே? சட்டீஸ்கரில் அவர்கள் மீது புகார்கள் உண்டா? பா.ஜ.க.வின் பெரும்பான்மைத் தலைவர்கள் எந்த ஊழல் புகாரிலும் சிக்காதவர்கள். ஆனால் காங்கிரசில் அப்படிச் சொல்ல முடியாது.

- ஆனந்த விடகன் பேட்டியில் (1.2.2012) திருவாளர் சோ ராமசாமி இப்படிப் பதில் சொல்லியிருக்கிறார்.

சாமர்த்தியமாகப் பதில் சொல்லு வதாக நினைப்பு, நினைப்புதானே பிழைப்பைக் கெடுக்கும்.

கருநாடக மாநிலம் என்பது பா.ஜ.க.வின் ஒட்டு மொத்தமான ஊழல் கூடாரம் அல்லவா! ரெட்டி சகோ தரர்கள் ஏன் சிறைக்குள் கிடக்கிறார் கள்? முதல் அமைச்சர் பி.எஸ். எடியூரப்பா ஏன் சிறைக்குச் சென்றார்?

பி.ஜே.பி. ஆட்சியில் கேவலம் சவப் பெட்டியில்கூட ஊழல் மூக்கைத் துளைக்கவில்லையா? பங்காரு லட்சு மணன் வாங்கிய பணத்தை தெகல்கா படம் பிடித்துக் காட்டவில்லையா?

13 நாள் வாஜ்பேயி ஆட்சியில் என்ரான் ஊழலின் கதை என்ன?

முதலாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்காக நாடாளு மன்றத்தில் கேள்விகள் கேட்டதில்கூட பி.ஜே.பி. உறுப்பினர்களுக்கு தானே  முதலிடம்?

குஜராத் மாநிலம் ஊழலுக்கு அப்பாற்பட்டதாம். பத்தரை மாற்றுத் தங்கமாம்!

இதற்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டாம். அவாளுக்கு மிகவும் வேண்டிய இந்து குடும்பம் நடத்தும் ஃப்ரண்ட்லைன் இதழே (20.5.2011) பட்டியல் போட்டுக் கூறிவிட்டதே!

2002ஆம் ஆண்டில் முசுலிம்கள் படுகொலை --_ பாதிப்புகள் நடந்திருந்தா லும் இன்றும் முசுலிம்களில் அகதி களாக முடங்கிக் கிடப்பவர்கள் 23 ஆயிரம் பேர்.

சாலைகள், மின் இணைப்புகள், குடிநீர் வசதிகள் ஒரு பக்கம் செய்யப் பட்டுள்ளன எனினும் பொதுவான சமூக மேம்பாடு வளர்ச்சி மிகவும் குறைவே _ இதற்கும் காரணம் ஊழல் கள் அதிகரித்ததுதான்.

மோடி ஆட்சியில் முப்பெரும் ஊழல்கள்!

மோடி ஆட்சியில் முப்பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. ரூ. 17 ஆயிரம் கோடி செலவில் சுறாலம் சஃபாலம் என்னும் திட்டம் தீட்டப்பட்டது. குளங்களை வெட்டும் _ சீரமைக்கும் திட்டம் இது. தொழிலாளர்களுக்கு உள்நாட்டில் கோதுமை விலையைக் கணக்கில் கொண்டு கூலி வழங்கப்பட வேண்டும்.

ஒப்பந்தக்காரர்களுக்கு முன்கூட்டியே தொகை வழங்கப்பட்டுவிட்டது.

ஆனால், தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்கப்படவில்லை. குளங்கள் வெட்டப்பட்டதாக ஏட்டில் காட்டப்பட்டதே தவிர நடைமுறையில் வெட்டப்படவில்லை. (குளத்தைக் காணோம் - யாரோ திருடிவிட்டார்கள்  என்ற வடிவேலுவின் காமெடி நினைவுக்கு வருமே!).

தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவ தற்கான அரிசி மகாராஷ்டிர மாநிலத் திற்குக் கடத்தப்பட்டது.

மத்திய அரசின் திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 260 கோடியும் சுளை யாக விழுங்கப்பட்டது. வேலைகளும் நடைபெறவில்லை _ மக்களும் வேலை வாய்ப்புகளைப் பெற்றிடவில்லை.

மீன் வளர்ப்புத் திட்டத்தில்கூட 600 கோடி ரூபாய் நட்டமாகும் அளவிற்குப் பெரும் ஊழல்.

பன்னாட்டு நிறுவனங்கள் குவிந்தது உண்மைதான். விவசாய நிலங்கள் பழங்குடியினருக்கான நிலப்பகுதிகள் தாராளமாக பன்னாட்டு நிறுவனங் களுக்குத் தாரை வார்க்கப்பட்டன.

கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரண மாக நீதிமன்ற உத்தரவின்பேரில் பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப் பட்டன.

பெரும் தொழிற்சாலைகள் வந்தன; ஆனால், மக்களின் அடிப்படை வளர்ச்சித் திட்டங்கள் குன்றின.

வேலைவாய்ப்புப் பெருகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பொய்த்துவிட்டது.
குஜராத் மகுவா பகுதி நிலக் காரர்களின் போராட்டம் மிக முக்கிய மானது.

அணை ஒன்றைக் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை பூமிக்கு அடி யில் உள்ள சுண்ணாம்புக் கற்களைத் தோண்டி வெளியில் எடுத்து சோப்புத் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க உத்தரவிட்டார் நரேந்திர மோடி.

மோடியின் இந்த அடாத செயலை எதிர்த்து உள்ளூர் பி.ஜே.பி.காரர் களும்கூட விவசாயிகளுடன் சேர்ந்து கொண்டு போராட்டத்தில் குதித்தனர். 30 ஆயிரம் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதிகளை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். சவுராட்டிரா வாங்கனர் மாவட் டத்தில் 40 ஹெக்டேர் நிலம் ஒரு சதுர மீட்டர் 40 ரூபாய் என்று அடிமாட்டு விலைக்குத் தனியார் தொழிற்சாலைக்கு விற்கப்பட்டது. உள்ளூர் மக்கள் நீதிமன்றம் வரை சென்று தடை ஆணை பெற்றனர்.

மோடி ஆட்சியில் தாழ்த்தப்பட் டோர் நிலை படுபாதாளத்தில்! தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் பிற ஜாதிகளைச் சேர்ந்தவர்களையும் சரிசமமாக அமர வைத்ததற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியை வேறு ஊருக்குத் தூக்கி அடிக்கப்பட்டார்.

உத்தமர் என்று சோ கூட்டம் கோரஸ்பாடுகிறதே -_ அந்த நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் லோக் அயுக்தா செயல்பட தயங்குவது ஏன்? நீதிபதியை நியமிப்பதில் அச்சப்படுவது ஏன்?

பி.ஜே.பி. ஆளும் உத்தரகாண்டின் உண்மை நிலை என்ன? அதன் முதல் அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஏன் பதவியிலிருந்து இறங்க நேர்ந்தது? கும்பமேளாவுக்காக ஒதுக்கப்பட்ட பெரு நிதியை ஏப்பமிட்டாரே. ஒவ்வொரு பொருள் கொள் முதலிலும் அவரின் கை விளையாடியிருக்கிறதே!

புனல் மின் திட்டத்தில் அவர் கையூட்டுப் பெற்றார் என்பதற்காக அம்மாநிலத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்த 56 திட்டங்களும் ரத்து செய்யப்பட்டதற்கு என்ன பதில்?

பார்ப்பான் மந்திரம் சொன்னால் மாட்டு மூத்திரமும், சாணமும்கூட பஞ்சகவ்யத்தில் முக்கியப் பொருளாகிக் காணிக்கையும் கிடைக்கச் செய்கிறதே!

அந்த நினைப்பில் சூ மந்திர காளி போடப் பார்க்கிறார் பார்ப்பனர் சோ அவர் லஞ்சம் என்று சொன்னால்தான் லஞ்சம்; அவர் உத்தமர் என்று சொல்லி விட்டால் அக்மார்க் முத்திரை அப்படி ஒரு நினைப்பில்தான் துள்ளுகிறார்.

குஜராத் இனப் படுகொலை தொடர் பான ஆவணங்களை அழித்து விட்டதாக குஜராத் மாநில அரசு வழக்கறிஞர் வக்கீல் தெரிவிக்கவில்லையா?

குஜராத் இனப் படுகொலை சம்பந் தப்பட்ட ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நானாவதி அகஷ்ய் மேத்தா விசாரணை ஆணையம் தெரிவித்திருந்த நிலையிலும் அவற்றை அழித்து விட்டதாக வெளிவரும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அன்றைய மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி சொன்னாரே! காந்தி யார் படுகொலை வழக்கிலும் இப்படி தான் ஆவணங்கள் காணாமற் போன தாகக்  கூறினார்கள் என்பதை நினைவு கூர்ந்தால் பார்ப்பன நிருவாகத்து நிர்வாணக் கூத்தின் ஆபாசம் தெரியும்.

இதுபோன்ற ஏராள தகவல்களை ஃப்ரண்ட் லைன் பட்டியல் போட் டுள்ளதே. இதற்கு என்ன பதில்?

ஜெயலலிதாபற்றி கிண்டல்

கெட்டிக்காரன் புளுகே எட்டு நாள் என்றால் சோ தன் புளுகை எத்தனை நிமிடம் மறைக்க முடியும்? ஆனந்த விகடனின் அடுத்த கேள்வி.

சரி, ஜெயலலிதாவை எந்த அடிப் படையில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத் துகிறீர்கள்?

சோவின் பதில்: இந்தியாவில் ஒருவர் பிரதமராக என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ.. எனக்குத் தெரியாது. ஆனால் ஜெயலலிதாவிடம் தேசியச் சிந்தனை இருக்கிறது.

ஒருமைப்பாட்டின்மீது அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. பல மொழிகளை அறிந்தவர் அவர். அறிவாளிகளே மெச்சும் சிறந்த நிருவாகி, உள்நாட்டுப் பாதுகாப்பிலும், வெளியுறவு விவகாரங் களிலும் அவருக்குத் தீர்க்கமான பார்வை இருக்கிறது -_ நினைத்ததைச் சொல்லும், செய்யும் ஆற்றல் இருக்கிறது - மக்களை ஈர்க்கும் ஆளுமை அவரிடம் இருக்கிறது. இப்போது உள்ள பிரத மரிடம் இவற்றில் எத்தனை தகுதிகள்  இருக்கின்றன என்பதை நீங்கள் ஒப் பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அடுக்கியுள்ளார் திருவாளர் சோ. ராமசாமி.

ஆமாம். ஜெயலலிதாபற்றி இவை யெல்லாம் நேற்றோ, நேற்று முதல்  நாளோதான் தெரிந்ததா இந்தப் பிராமணோத்தமருக்கு! இதோ இவரின் இன்னொரு நிலையையும் படியுங்கள்.

கேள்வி: ராஜாஜி, அண்ணா, பெரியார், புரட்சித் தலைவர் ஆகியோ ருடைய அறிவு, ஆற்றல் ஒருங்கிணைந்த பெட்டகம்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று நிதி அமைச்சர் பொன்னையன் பேசியிருப்பதுபற்றி...

பதில்: ராஜாஜியின் ஆற்றல் எதிர்காலத்திற்கு ஏற்ற செயல் திட் டங்களை வகுப்பதில். அண்ணாதுரை யின் ஆற்றல் எதிர்வாதங்களை முன் வைப்பதில்; பெரியாரின் ஆற்றல் துவே ஷத்தைப் பரப்புவதில், எம்.ஜி.ஆரின் ஆற்றல் போட்டுக் குழப்புவதில்; இவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒருவரிடம் இருந்தால் என்ன கதி ஆவது! பொன்னையன் ஜெயலலிதாவை கிண்டல் செய்திருக்கிறார்.

துக்ளக் 15.1.2003 பக்கம் 8

இதுதான் ஜெயலலிதா பற்றி சோவின் கணிப்பு 2003_களில்; (அவர் பெரியார் பற்றி அப்படித்தான் கூறுவார்; இதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?) இப் போது என்ன திடீர் ஞானோதயம்? 1954 காமராசர் முதல் 68 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் ஆட்சியில் பெரும்பாலும் பார்ப்பனீயத்துக்கு அடி விழுந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள்  தலை எடுத்து விட்ட நிலையில், நம் சமூகத்தில் பிறந்த அம்மையாரைப் பயன்படுத்திக் கொண்டு இதனைத் தடுத்து நிறுத்தலாம் என்ற நப்பாசைதான்.

சோவே கணித்தபடி திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லாத அந்தத் திராவிட  இயக்கத்திலேயே கிடைத் திருக்கிறார்; புத்த மார்க்கத்தில் ஊடு ருவி ஆரியம் அழித்ததுபோல, இந்தச் சந்தர்ப்பத்தை ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது?

சோவின் பூணூல் இந்தத் திசையில் சிந்தித்ததன் அறுவடைதான் இந்தப் போக்கு.
அம்மையாரின் நிருவாகத்தைப்பற்றி ஓகோ என்று தூக்கி நிறுத்துகிறாரே, எட்டு மாத ஆட்சியில் எத்தனை முறை அமைச்சர்கள் மாற்றம்!

எத்தனை அய்.ஏ.எஸ். அதிகாரிகள் எத்தனை எத்தனை முறை தூக்கி அடிக்கப்பட்டுள்ளனர்? இந்தக் கால கட்டத்தைப் போல நிருவாகக் குழப்பத்தில் உச்சக் கட்ட ஆட்டம் எந்தக் கால கட்டத்தில் நாடு கண்டது?

எந்த அமைச்சருக்கு என்ன துறை? எந்த அதிகாரி எந்தத் துறைக்குச் செயலாளர் என்பதை முதல் அமைச்சர் ஜெயலலிதாவைச் சொல்லச் சொல் லுங்கள் பார்ப்போம்! ஏன் இந்த சோ தான் சொல்லட்டுமே!

கச்சத் தீவை மீட்போம் என்றாரே ஜெயலலிதா; இது சோ வின் பார்வை யில் தேசியச் சிந்தனை அட்டவணைக் குள் வருகிறதா என்று தெரியவில்லை.

அதி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வைப்பற்றி சோ சொல்லுவதைக் கொஞ்சம் கேட்போம்!

விலைவாசி உயர்வுக்காக இன்றல்ல; என்றைக்குமே மாநில அரசுகளை நான் விமர்சித்தது இல்லை - கலைஞர் ஆட்சி உட்பட.. ஏனென்றால் விலை வாசியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் மத்திய அரசிடம் இருக் கின்றனவே தவிர, மாநில அரசுகளிடம் அல்ல _ என்று இப்போது சொல்லு கிறாரே -_ இது உண்மையா? கலைஞர் ஆட்சி உட்பட விலைவாசியை இவர் விமர்சித்தது இல்லையா? கேலி செய்தது கிடையாதா?

இதோ அந்தச் சோ உங்கள் கண் முன்:

கேள்வி: அரிசி, பருப்பு, பூண்டு, சமையல் எண்ணெய் என்று எல்லா சமையல் பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறி விட்டதே! கீழ்த்தட்டு மக்களின் நிலை என்னவாகும்?

பதில்: அதனால் என்ன? வயிறாரச் சாப்பிட முடியாததால் சிலர் பாதிக்கப்பட்டால் இருக்கவே இருக்கிறது. தமிழக அரசின் உடல் நலம் பாதுகாப்பு இன்ஷ்யூரன்ஸ் திட்டம், அதன் கீழ் சிகிச்சை பெற்று, பிறகு புதிய தெம்புடன் மீண்டும் பட்டினி கிடக்கலாமே!

(துக்ளக் 12.8.2009 பக்கம் 27)

விலைவாசி உயர்வுக்கு மாநில அரசை விமர்சிக்காமல், மத்திய அரசை விமர்சிக்கும் இலட்சணமா இது?

கலைஞர் அரசின் உடல் நலம் பாது காக்கும் இன்ஷ்யூரன்ஸ் திட்டத்தைக் கூட மனிதநேயம் இல்லாமல், ஈவு இரக்கம் இல்லாமல் கேலி செய்துள் ளாரே _ இப்பொழுது பெயரை மாற்றி செல்வி ஜெயலலிதா மருத்துவத் திட்டத்தை அறிவித்துள்ளாரே -_ இதிலும் சோவின் கருத்து அதுதானா?

கலைஞர் காலத்தில் விலைவாசி உயர்வு என்றால் அதற்கொரு அளவு கோல்; ஜெயலலிதா ஆட்சியில் விலை வாசி உயர்வு என்றால் அதற்கு இன் னொரு மட்டப் பலகை அளவுகோலா? இதற்குப் பெயர்தானே பூணூல் அபிமானம் என்பது!

தனியீழத்தை ஜெயலலிதா ஆதரிக்கவில்லையா?

ஆனந்தவிகடனின் அடுத்த வினா:

ஜெயலலிதா எப்போதுமே தமிழ்த் தேசியவாதிகள், ஈழத் தமிழ்ப் போராளிகள் ஆகியோருக்கு எதிராகவே இருந்திருக் கிறார் -_ ஆனால் அவருடைய சமீபகால நடவடிக்கைகள் அப்படி இல்லை. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சோவின் பதில்: தனித்தமிழ்நாடு வேண்டும் என்றோ, இலங்கை பிரிய வேண்டும் என்றோ, விடுதலைப்புலிகள் சரி என்றோ, வன்முறை தீர்வு என்றோ அவர் கூறிடவில்லை. தமிழர்கள் நலன் முக்கியம் என்று பேசுகிறார் அவ்வளவு தானே? இதில் என்ன நிலைப்பாடு மாற்றம்? என்று கேள்வியாலேயே பதில் சொல்ல முயற்சிக்கிறார் சோ.

அதற்கும் நமது பதிலடி இருக்கிறது _ இதோ அந்தச் சாட்டை!

நான் சொல்வதைக் கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி,  அங்கே தனியீழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச் சாரத்தில் பேசியிருக்கிறார் என்று எழுதவில்லையா -_  நினைத்தேன் எழுதுகிறேன் என்று தலைப்பிட்டு இதே சோ ராமசாமி.  தேர்தல் பிரச்சார வேகத்தில் ஈழம், தனி நாடு, படை யெடுப்பு என்றெல்லாம் பேசுவது நல்லதல்ல.

(துக்ளக் 13.5.2009 பக்கம் 17)

தனியீழம் பற்றி ஜெயலலிதா பேசி யுள்ளார் என்று துக்ளக்கில் எழுதி யுள்ள இவரே _ ஜெயலலிதா இலங்கை பிரிய வேண்டும் என்று பேசியதில்லை என்று சொல்லுகிறார் என்றால் இதன் பொருள் என்ன? பேச நா இரண்டுடையாய்ப் போற்றி என்று ஆரியர்பற்றி அண்ணா எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது.

திருவாளர் சோ ராமசாமி அய்யருக்கு என்ன அசட்டுத் துணிச்சல் என்றால், இவற்றை எல்லாம்  யார் நினைவில் வைத்திருக்கப் போகிறார்கள் என்பதுதான்.

ஆச்சாரியார் முதல் அவாளின் ஜெகத்குரு வரையான சர்வமுகூர்த்த ஜாதகம் - பஞ்சாங்கம் கருஞ்சட்டையிடம் உண்டு என்பதை மறைக்க வேண்டாம் தொப்புள்கொடி அறுத்த கத்தியும்கூட பத்திரமாகவே இருக்கிறது - எகிற வேண்டாம்!

(மேலும் சந்திப்போம்)



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments 

 
#5 tamilvanan 2012-02-28 20:20
கன்னடக்காரர்கள் ஜெயலலிதா தான் தமிழச்சி என்று கூறியதை எதிர்த்து தான் அவர் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்பது தெரியாதா? அல்லது பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறீர்களா.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#4 tamilvanan 2012-02-28 20:17
முதலில் கலைஞர் இவாறு ஒருவரிடம் (தன் குடும்பத்தை விடுத்து) தி. மு. க. தலைமை பொறுப்பையும் முதல்வர் பதவியையும் விட்டு தரட்டும். சோ இதற்கு உடன் படுவார்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#3 tamilvanan 2012-02-28 08:51
அன்பன் அவர்களே
சோவின் ஒப்புதல் பெற்றுதான் ஒருவர் பிரதமர் ஆக முடியும் என்பது மகத்தான கண்டுபிடிப்பு. மற்றும் குஜராத் மோடி பார்பனர் அல்லர். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். அவரை குறை கூறும் சாக்கில் பார்பனர்களை ஏன் சாட வேண்டும்?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#2 அன்பன் 2012-02-27 00:21
பல மொழிகள் தெரிந்தவர் என்பது பிரதமர் தகுதி என்று சோ.ராமசாமி வாதிடுகிறார்.அப்படியென்றால் சென்னை சென்றல் ரயில் நிலையத்தின் முன்னால் நிற்கும் ஆட்டோ ஒட்டுனர்களுக்கு ம், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்க ும் பல மொழிகள் தெரியும். அவர்களில் யாராவ்து ஒருவரைப் பிரதமராக்க என்போன்றோர் உளமாரச் சம்மதிக்கிறோம். சாதி சம்பிரதாயம், பூணூல் மகிமை, அந்தஸ்த்து, பார்க்கும் இந்த சோ.ராமசாமி ஒத்துக் கொள்வாரா?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#1 அன்பன் 2012-02-27 00:01
ஜெயாவிற்கு தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை அதிகமாம். இந்திய தேசியம் என்பதே வெளியில் இருந்து வந்த நாடோடிகள், தங்களுடைய நன்மைக்காக, இந்திய தேசிய இனங்கள் மீது திணிக்கப் பட்ட ஒன்றுதானே. இந்த தேசியவாதி ஜெயலலிதா, கன்னடர்கள் எனக்கு எதிரானவர்கள், ஆகவே நான் பெங்கலூரு நீதி மன்றத்துக்கு நேரடியாக விசாரணைக்கு வர முடியாது என்றவர்தானே? கன்னடர்களும் இந்தியர்கள் தானே.தமிழகச் சட்ட மன்றத்தில், அன்னிய ஆங்கிலத்தில் பேசுவதுதான் இந்திய தேசியமா? நான் பார்ப்பனத்தி என்று தன்னுடைய இன அடையாளத்தை சட்ட சபையில் உலகறியப் பரை சார்றியவர்தான் தேசிய வாதியா? ஒருவேளை சோ.ராமசாமி கூட்டத்தினருக்க ு பார்ப்பனியத்துக ்கும் இந்திய தேசியத்துக்கும் வேறுபாடு தெறியாதா? இல்லை பார்ப்பனியம்தான ் இந்திய தேசியம் என்ற உண்மையை உளரிவிட்டாரா? சொல்லுகிறவன் சொன்னானாம் கேள்வரகில் நெய் வடிகிறது என்று. கேட்பவனுக்கு மதி எங்கே போயிற்று.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh