வாழ்வியல் சிந்தனைகள்


சிங்கப்பூரில் தமிழ் மொழி வளர்ச்சி, தமிழர்களுக்கான தமிழ் கற்கும் வாய்ப்பு எல்லாம் எடுத்துக்காட்டானவை ஆகும்.

பெரும்பான்மை, சிறுபான்மை என்பதைப் பற்றி கணக்குப் பார்க்காமல், மொழி என்பது அந்த மக்களின் உணர்வு பூர்வமான பண்பாட்டு தளம் என்பதால் அதனை மதித்து, அங்கே நான்கு மொழிகளான (மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம்) ஆகியவற்றிற்கு சம வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அந்தந்த மக்களும் தத்தம் தாய் மொழிகளைக் கற்றுக் கொள்கின்றனர். அவர்தம் வழி வழி சந்ததியரான இளையவர்களும் தமிழ் மொழியைக் கற்கவும், பேசவும், எழுதவும், ஏடுகள், செய்தி நிறுவ னங்களும், தொலைக்காட்சி, ஊடகங்களும் மிகச் சிறப் பான வகையில், தமிழைப் பயன்படுத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில்கூட, மொழி ஒலியிலும், கருத்திலும் தமிழுக்கு இத்தனைக் கவலை பொறுப்புணர்ச்சியுடன் அதன் வளர்ச்சிக்கு வித்திடுவார்களா என்பது அய்யமாக உள்ள நிலையில், செம்மொழியான எம் மொழி தமிழுக்கு சிங்கப்பூர் நாட்டின் அரசு தரும் ஆக்கமும், ஊக்கமும் மிகுந்த பாராட்டிற்குரியவை ஆகும்.

நேற்று (28.2.2018) என்னைச் சந்தித்த, தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளர் எம். இலியாஸ் அவர்கள், அண்மையில் சிங்கப்பூரில் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில், தமிழ் மொழி பெயர்ப்புக் குழுவும், அதன் சொல்வளக் குழுவும் இணைந்து உருவாக்கிய கையேடு, அரசு அதிகாரிகள், மொழி பெயர்ப்பாளர்கள், தமிழ் ஊடகங்கள், ஆசிரியர்கள்,  மாணவர்கள் எனப் பலருக்கும் பயன்படும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தமிழ் "சொல்வளக் கையேடு" - - (Glossary of English to Tamil Terms) என்ற நூலை என்னிடம் தந்தார்.

அந்நூல் பற்றிய செய்தி வந்தவுடன், அதனைப் படிக்க வேண்டும் என்ற எனது பேரவா நிறைவேறிற்று. அது கிடைத்து படித்ததில் எனக்குத் தனி மகிழ்ச்சி ஏற்பட்டது.

ஆங்கில அகர வரிசைச் சொற்கள், அரசாங்க அமைப்புகள், சார்ந்த சொற்கள், சட்டப் பெயர் தொகுப்பு ஆகிய நான்கு பகுதிகள் இந்தக் கையேட்டில்  அடக்கமாகி உள்ளன.

மிகுந்த பயனுடன் சிறந்த சொல் லாக்கத்தை கொண்டதாக இந்நூல் உள்ளது.

படித்தேன் - சுவைத்தேன்!

ஏடு நடத்துவோர், வகுப்புகளை எடுப்போர், எழுத் தாளர்கள், சொற்பொழிவாளர்கள் எல்லோருக்குமே இந்த அரிய கருத்துக் கருவூலம் பயன்படும் என்பது உறுதி!

இந்தக் கையேட்டில் சுமார் 4000 சொற்கள் இடம் பெற்றுள்ளன.

இதனை   நண்பர் இலியாஸ் எனக்கு அளித்தவுடன் படிக்கத் துவங்கினேன். சொல்லாக்கங்கள் எப்படி எளிமையும், தமிழ் வலிமையும் பதியும் வண்ணமும் இந்நூலில் உள்ளன என்பதைப் பார்க்கையில் சிங்கப்பூர் அரசையும், வளர் தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழி பெயர்ப்புத் துறையினரையும் வெகுவாகப் பாராட்ட வேண்டும்.

ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லை இணையத்தில் தேடுவதில் உள்ள இடர்ப்பாடு இதன் மூலம் வெகுவாகக் குறையும். சிறப்பான சொல்லாட்சிகள் புழக்கத்திற்கு வரும் வாய்ப்புகளும், அதன் மூலம் தமிழ் வளர் தமிழாகவே உண்மையில் வளர்ந்து பெருகிப் பெரிய பயன் விளைவிக்கவும் கூடும்.

எடுத்துக்காட்டாக இதோ ஒரு சில மொழிபெயர்ப்பு - சொல்வளங்கள்.

Assassination  - அரசியல்வாதி படுகொலை, பிரமுகர் படுகொலை

Asteroid  - சிறுகோள் (செவ்வாய், வியாழன்ஆகிய கோள்களுக்கிடையே செல்லும் சுற்றுப்பாதையில் உள்ள சிறுகோள்).

Budget airlines- மலிவுக்கட்டணச் சேவை/ சிக்கன விமானச் சேவை

Business cartel  - வர்த்தகக் கூட்டு ஆதிக்கம்/இலாப நோக்கு வர்த்தகக் கூட்டணி

Calamity  - பேரிடர் - பெருந்துயரம்

Pre emptive strike  - முன்னெச்சரிக்கைத் தாக்குதல்/முந்து நிலைத் தாக்குதல்.

Wrestling  - மற்போர்

WWW( World Wide Web) - உலக விரிவலை

Xenophobia - வெளிநாட்டவர்மீதான கடும் வெறுப்பு

இந்த 200 பக்கங்கள் கொண்ட கையேடு போன்று ஒன்று தமிழ்நாட்டிலும் நமது தமிழ் அறிஞர்கள், ஏட்டின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள்கூடி தயாரித்து, உடனடி உதவி பயன்பாட்டுக்குச் செய்ய முன் வர வேண்டும்.

தமிழ் வாழ்க என்று ஆயிரம் முறை முழங்குவதை விட, இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வ சாதனைகள் அளவற்றப் பயன்பாட்டைத் தருவது உறுதி! சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கத்தினர், தமிழ்மொழி பெயர்ப்புத் துறையினர் இணைந்த இப்பணிகள் அனைத்திற்கும், தமிழ் கூறும் நல்லுலகத்தின் சார்பில் நெஞ்சம் வழியும் வாழ்த்துகள் உரித்தாகுக!

இத்தகைய ஆக்கங்கள் வருக! வளர்க! வாழ்க!

(சீரழிக்கப்பட்ட பெரும்பாலான குடிமக்களின் வாழ்வாதாரங்களை  மீட்டுத் தருவதற்காக நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கத் தேவையான  நடவடிக்கைகள் மோடி அரசின் 2018-2019 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தில்  காணப்படாததால், மோடியின் அரசை மக்கள் நல அரசாகக் காட்டுவதற்கான நிதியமைச்சர் அருண்ஜெட்லி மேற்கொண்ட முயற்சி படுதோல்வி அடைந்ததுடன், இந்த வரவு - செலவு திட்டமே பொய்களை விற்பனை செய்யும் செயல் திட்டமாகவே விளங்குகிறது

மத்திய அரசின் 2018-2019 ஆம் ஆண்டு நிதிநிலை வரவு - செலவு அறிக்கை,  ஆடம்பரமும் அலங்காரமும் நிறைந்த மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தை நம்பி இருக்கும் மோடியின் அரசைக்   காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சியாகவே தோன்றுகிறது. விவசாய உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்த பட்ச விலை நிர்ணயம், ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற இரு பெரும் மக்கள் நலத்திட்டங்கள் மிகுந்த ஆடம்பரத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளன.  ஆனால், அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான கொள்கை செயல்திட்டம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

மோடிஅரசின் இறுதி வரவு - செலவு திட்ட அறிக்கையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், கொள்கை செயல்பாடுகள் பற்றிய தெளிவின்மையும், அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியை ஒதுக்கி அவை உறுதிப்படுத்தப் படவில்லை என்பதும்தான்).

நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி வருமாறு:

ஏழை மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

50 கோடி மக்கள் பயன்பெறும் அளவில்10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு  5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு அளிக்கும் மாபெரும் பாது காப்பு திட்டத்தை அருண்ஜெட்லி அறிவித்துள்ளார். இத்திட்டத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்டுவதுபற்றி எந்தவித தெளிவான மதிப்பீடும் செய்யப்படவில்லை என்பது வியப்பளிப்பதாக உள் ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் காப்பீட்டு நிறுவனங்கள் இதற்காக கேட்கும் பிரிமியம் என்ன என்பது பற்றி அந்நிறுவனங்களுடன் நடந்த பேச்சு வார்த்தைகள் பற்றிய எந்த விவரமும் வரவு - செலவு திட்ட அறிக்கையில் அளிக்கப்படவில்லை. வரவு - செலவு திட்டத்தில் இந்த நோக்கத்துக்காக 2000 கோடி ரூபாய்கூட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, கேரளாவில் இது போன்ற மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு மாநில அரசு ஒரு மாநிலத்துக்கு ஒதுக்கியிருக்கும் நிதியின் அளவிலேயே மத்திய அரசு அனைத்து இந்திய அளவிலான திட்டத்திற்கும் நிதி ஒதுக்கியுள்ளது!  இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குறைந்த அளவு 50,000 கோடி ரூபாய் தேவைப்படும்.

இந்த திட்டத்திற்கு மாநில அரசுகளும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது பற்றிய பேச்சுகள் எழுந்தன.  பல மாநிலங்களில் இதுபோன்ற காப்பீடு திட்டங்கள் உள்ளன என்பதால், அதைக் கைவிட்டுவிட்டு மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் மாநிலங்கள் பங்கேற் பார்கள் என்று கருதமுடியாது. ஆனால், மாநில அரசு களுடன் இது பற்றி எந்த கலந்தாலோசனையும் மத்திய அரசால் இது பற்றி மேற்கொள்ளப்படவில்லை. இவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட பிறகு, நிதி இல்லை என்ற காரணத்தால், ஒட்டு மொத்த திட்டமே கைவிடப்பட்டுவிடவும் கூடும். எப்படியிருந்தாலும், இந்தியாவுக்கு தேவைப்படுவது எல்லாம்,  அரசு மருத்துவ மனைகளில் போதிய அளவில் சிகிச்சைக்கான மருந்துகளும், தளவாட வசதிகளும் செய்து தந்து, போதுமான மருத்துவர்களையும் மற்றும்  இதர துணைப் பணியாளர்களையும் நியமனம் செய்யவேண்டும்  என்பதுதான்.  காப்பீடு மூலம் அளிக்கப்படும்  சிகிச்சை களில்  இன்ன இன்ன சிகிச்சைகளுக்குதான் காப்பீடு அளிக்கப்படும் என்றும், இந்த இந்த மருத்துவ மனைகளில் எடுத்துக் கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகளுக்கு மட்டும்தான் காப்பீடு வசதி கிடைக்கும் என்றும் உள்ள  நிபந்தனைகளைப் பார்க்கும்போது,  அதிக கல்வி  அறிவு இல்லாத  பாமர மக்களுக்கு இந்தத் திட்டம் அதிக பயன் அளிப்பதாக இருக்காது.  என்று தெரிகிறது. மேலும், காப்பீட்டு நடைமுறையில் நிர்வாக செலவே அதிக அளவில் ஏற்படும் என்பதுடன், திட்டத்திற்கான மொத்த பணமும் தனியார் துறைக்கும், காப்பீடு நிறுவனங்களுக்குமே சென்று விடும்.

மோடி அரசின் தவறான நம்பிக்கையும், செயல்பாடுகளும்!

தேர்தலில் பொதுமக்களின் ஆதரவைத் தேடும் போது,  சில பல முழக்கங்களுடன் இணைந்த பேச்சாற் றல் மிகுந்த தங்களது பிரச்சாரம் மட்டுமே போது மானது, எந்தவித மக்கள் நல செயல்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்ற தேவை யில்லை என்ற மோடி ஆட்சியின் தொடக்க காலத்தில் கொண்டிருந்தநம்பிக்கையையேஇப்போதும் அருண்ஜெட்லி கொண்டிருப்பது பயன் தராது. பாமர மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தும் பொருளாதார நடவடிக்கைகள் எவற்றையேனும் அவர் எடுக்க நினைத்தால், பா.ஜ.கட்சிக்கு நிதியுதவி செய்துகொண்டு,  ஊடக ஆதரவு அளித்து வரும் இந்தியாவின் பெரும் முதலாளிகளின் ஆதரவை இழந்துவிடாமல் இருப்பதையும் அவர் உறுதி செய்து கொள்ள வேண்டியிருக்கும்.

பெரும் அளவிலான பொது நிறுவனங்களின் முதலீடுகளைதனியார்மயமாக்குவதுடன்,50 சதவிகிதத் திற்கும் குறைவான பங்குகள் வாங்கியிருந்த போதிலும், நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் ‘விற்பனை உத்தியும்’ நாட்டின் பொருளாதார முன்னேற் றத்திற்கு நலம் சேர்க்காது.

2018-2019 நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் தனது வேலையை செய்து முடித்த அருண் ஜெட்லிக்கு,  தனது முயற்சியில், தான் தோல்வி அடைந்தது தெளி வாகத் தெரிந்தது. வரவு - செலவு திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மீது விரிக்கப்பட்டிருந்த  மறைப்புகள் நீக் கப்பட்டபிறகு, நிதிநிலை அறிக்கையினால் பயன் பெற்ற ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டது மிகவும் குறைவானது என்றும்,  பயன்பெறாத பெரும் பாலானவர்கள் தங்களை அரசு கவனிக்கத் தவறி விட்டது என்றும்  நினைத்தனர்.

தங்களது வருவாய் உயராமல் தேங்கிக் கிடப்போர் அல்லது வருவாய் குறைந்து போனவர்களைக் கைதூக்கி விடும் எந்த ஒரு முயற்சியும் இந்த வரவு - செலவு திட்டத்தில் இல்லை.

ஜெட்லியின் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பில்,  நீண்டகால, கனமான பிரச்சினைகள்பற்றி மோடி அரசின் அணுகுமுறையை எடுத்துக் காட்டுவதால் சிறப் பானதாகக் கருதப்படும் இரு அம்சங்கள் உள்ளன. இந்த வரவு - செலவு திட்டத்தின்பல அம்சங்கள், அரசமைப்புச் சட்ட கட்டமைப்பின்படி வழங்கப்பட்டுள்ள மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடுவதாகவும், மீறு வதாகவும் உள்ளன.

இரண்டாவதாக, தான் தீர்த்து வைத்து விட்டதாக இந்த அறிக்கையில் ஜெட்லி தெரிவித்துள்ள அடிப்படையான பிரச்சினைகள் அரசின் அலட்சியத்தாலும், அக்கறை யின்மையாலும் உண்மையில் தீர்க்கப்படாமல் இருப் பதைக்  காட்டுவதாக இருக்கிறது.

நிதிநிலை அறிக்கையை ஜெட்லி படித்ததைக் கண்ட எவரும் பொதுமக்களின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக ஏதோ ஒன்றை மறைப்பது போன்று அவர் தோற்றம் அளித்ததைக் கண்டிருக்கலாம். விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிப்பது என்ற வரலாற்று சிறப்பு மிகுந்த அறிவிப்பை வெளியிடும்போது, இந்தியில் பேசிக் கொண்டிருந்த ஜெட்லி,  இதனை எவ்வாறு நடைமுறைப் படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி பேசும்போது ஆங்கிலத்தில் பேசினார். அரசு உறுதி அளித்துள்ள இந்த குறைந்தபட்ச விலை நிர்ணயத்துக்கான நடைமுறைகள் எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் என்பதைத் தான் அவர் ஆங்கிலத்தில் கூறினார். கடந்த ஆண்டு ஏற்பட்ட, முன் எப்போதும் கண்டிராத அளவில் உணவுப் பொருள்களின் விலை வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக கடுந்துயர்களுக்கு உள்ளான விவசாயப் பெருமக்களுக்கு அவர்களது விளைபொருள்களுக்கு உயர்ந்த விலை அளிப்பதாக உறுதி கூறும் அதே நேரத்தில்,  மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து நிதி ஆயோக்கினால்தான் இந்த உயர்ந்த விலையில் கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகள் முடிவு செய்யப்படும் என்று அவரால் எப்படி விவசாயிகளிடம் கூறமுடியும்? பல தடைகளை சரி செய்து இந்த கொள் கையை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் கால தாமதம் ஆகும் என்பதைக் கூறவே அவர் இந்தியில் இருந்து மாறிஆங்கிலத்தில் பேசத் தொடங்கிவிட்டார்.

மேலும்,  உணவுப் பொருள்களின் அதிக விலையும், விவசாயிகளின் வருமானமும் முற்றிலும் மாறுபட்டது என்று ஜெட்லி கூறியிருக்கிறார். அதிகபட்ச விலையில் பொருள்கள் வாங்கப்பட்டால்தான், அதிக வருவாய் கிடைக்கும் என்பதை ஒரு பள்ளி பொருளாதார மாணவன் கூட புரிந்து கொள்வான். கடந்த ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தூண்டப்பட்ட விவசாய உற்பத்திப் பொருள்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததுபோது, நாடு முழுவதிலும் பொருள் களின் சந்தை விலை, குறைந்த பட்ச ஆதரவு விலையை விடக் குறைவாகவே இருந்தது. விலைவாசி வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த அரசினால் கொள்முதல் எதுவும் செய்யப்படவில்லை.

(தொடரும்)

நன்றி: ‘ஃப்ரன்ட் லைன்’, 03-02-2018

தமிழில் த.க.பாலகிருட்டிணன்.

24.2.2018 அன்று வெளிவந்த ‘‘வாழ்வியல் சிந்தனையின்  தொடர்ச்சி வருமாறு:

4. எதை விட வேண்டுமோ அதைவிடுவதற்குப் பழகிக் கொள்ளுங்கள். பல பழக்க வழக்கங்கள் நம்மை அடிமையாக்கி வைத்திருப்பதை, உறுதியுடன் விரட்டி விடுதலை பெறுங்கள். விளைவு முதிர்ச்சி தானே வந்து உங்கள் முன் நிற்கும்!

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுங் கள்.

நாம் வாழ்வில் எப்போது ஏமாற்றத்திற்கு ஆளா கிறோம் தெரியுமா? அதிகமான பேராசை, எதிர் பார்ப்புகள்! இயல்புக்கு முரணான பகற்கனவுகளில் உந்தப்பட்டு, கணக்குப் போட்டு பிறரிடம் பழகி, அவரே உங்களைப் புரிந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டு விலகும் நிலையெல்லாம் ஏற்படும் முன்னரே, எதிர்பார்ப்புகளை ஏராளம் பெருக்கிக் கொண்டு ஏமாற்றத்திற்கு ஆளாகாமல், உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள். நம் முதிர்ச்சிக்கு இதுதான் சரியான அடையாளமாகும்!

6. செய்வதை மன அமைதியுடன் செய்யுங்கள். பதற்றமின்றி, பரபரப்புக்கு இடம் தராமல் அமைதியுடன் செயல்படப் பழகுங்கள்!

ஒரு தீ விபத்தோ அல்லது மற்ற விபத்தோ ஏற்படும்போது ‘ஆம்புலன்சை' அழைப்பது, மருத்துவமனையில் சேர்ப்பது, குறிக்கவேண்டியன வற்றை குறித்துத் தகவல் கொடுப்பது போன்ற வையை மன அமைதி குலையாமல் செய்தால் முழுப் பயனை அடைய, அறுவடை செய்ய முடியுமே!

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுங்கள்.

இது தன்முனைப்பின் புது உருவாக்கம். ‘நானே அறிவாளி' என்ற கர்வத்தின் வாந்தியாகும்! இந்த வாந்தியை எடுப்பதை விட்டு விடுங்கள். வள்ளுவர் சொன்னார் ‘‘அரிதொரும் அறியாமை'' என்று! அறிந்ததை மறைத்து, அப்பாவி போல அவர் அளத்தலைக் கேட்டுப் பழகுங்கள் - ஏன் பொறுத்துப் பழகி அலட்சியம் காட்டுங்கள் - உங்களை முதன்மைப்படுத்தும் வியாதியை விட்டொழியுங்கள்!

8. நம் செயல்களை மற்றவர்கள் ஏற்கவேண்டும் - ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் என்ற திணிப்பு மனப்பான்மையை நம் மனதிலிருந்து விரட்டி யடியுங்கள். அவர் அதைக் கொள்ளவோ, தள்ளவோ முழு உரிமை பெற்றவர் என்று எண்ணுங்கள். உங்களிடம் அவர் என்ன அடிமை முறிச்சீட்டா எழுதிக் கொடுத்துள்ளார்? உங்களுக்கு அப்படி என்னென்ன உரிமை உள்ளது என்று சிந்தித்துப் பாருங்கள்; பிறகு, தானே உங்களின் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள முயலுவீர்கள்.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் காட்டிப் பேசுவது முதிர்ச்சியாகாது! அடக்கத்தோடு நம்மை நாம் பெரிதாக நினைக்காமல், எளிமை, இனிமை என்ற போர்வையை மனதுக்குப் போர்த்தி விடுங்கள்!

10. எதற்குமே கலங்காது, மனதை அமைதியாக வைத்துக்கொள்ளப் பழகுங்கள். ஒரே நாளில் அது வந்துவிடாது. மனப் பயிற்சி, ‘திடசித்தம்'மூலம் உறுதியாக வரும் அது!

எதற்கெடுத்தாலும் கவலை, கவலை, கவலை என்று மனதை நோயாளியாக்கி விடாதீர்கள். பிரச்சினைகளை வரவேற்று தீர்வுகளைக் காண நம்மால் முடியும் என்ற துணிவுடனும், தெளிவுடனும் வாழப் பழகுங்கள்!

11. நமது அடிப்படை தேவை (கீணீஸீts) என்ப தையும், நாம் விரும்புவன (கீவீsலீமீs) ஆசைகளையும், இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

அடிப்படைத் தேவை உணவு, உடை, கல்வி போன்றவை - அதை அடையலாம்.

தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் பொருள் கள் எல்லாம் தேவையா? ஏன் கடன் வாங்கித் தவணையில் வட்டிக் கட்டவேண்டும்? நாட்டில் வணிகமும், விளம்பரமும் நாளும் பெருகிக் கொண்டேதான் இருக்கும். அதையெல்லாம் உடனே வாங்கிவிடவேண்டும் என்று நினைக்கக் கூடாது.

அட்சய திரிதியில் பவுன் வாங்கினால், பெருகும் என்று நம்பி, கடன் வாங்கி, தேவையின்றி பவுன் வாங்கலாமா? உதாரணத்திற்கு இதைக் கூறுகிறோம். இப்படி வடிகட்ட வேண்டிய வாடிக்கை வழமைகள் பல உள்ளனவே!

மகிழ்ச்சி என்பது பொருள் - பணம், செல்வக் குவிப்பு, ஆடம்பரம்  இவைகளால் ஏற்படுவது  அல்ல; அவைகளை செய்ய குறுக்கு வழிகள், தவறான முறைகளில் ஈடுபட்டு வாழ்நாள் முழுவதும் வருந்தும் நிலை - இன்று வாடிடும் பலரைக் கண்டு நாம் பாடம் பெறவேண்டாமா?

நம் தேவைக்கேற்ப எளிமை, அடக்கம், சிக்கனம், துணிவு, தெளிவு எல்லாம் நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியுமே!

அவைகளின் மீதுதான் நாம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்.

பசித்தவுடன் சாப்பிடுவதே நலம்!

பசியில்லாமல் பகட்டுக்காகவும் அல்லது ஆசைக்காகவும் சாப்பிட்டு, செரிமானக் கோளாறால் நாம் அவதியுறலாமா?

‘எதுவும் நம் கைகளில்தான்' என்பதை மறவாதீர்!

‘எதுவும் நம் முடிவில்தான்' என்று உறுதியுடன் முதிர்ச்சி வழியும் வாழ்க்கையை அமைத்துக் கொள் ளுங்கள்!

வாழ்வில் வெற்றி பெறுங்கள்!!

 

முதுமை என்பது நம்மால் தவிர்க்க முடியாதது. எதைத் தவிர்க்க முடியாதோ, அதை ஏற்கப் பழகவேண்டும் - இன்முகத்துடன்!

உலகின் அழகுப் போட்டியில் முதற்பரிசு பெற்று உலகம் முழுவதும் விளம்பர வெளிச்சம் - ஏராளமான பண வரவு, அடுத்து பணக்கார வாழ்க்கைத் துணையேற்றல் எல்லாம் கிடைக்கும்; கிடைத்திருக்கிறது. ஆனால், அந்தப் பெண்ணும், அதைப் பெரிதும் மதித்துப் போற்றிப் பெருமிதத்தால் விம்மிய ஆணும்கூட, வயது ஏற ஏற முதுமையைத் தானே ஏற்கவேண்டும்.

முதுமையை தள்ளிப் போ(ட)க எவ்வளவு ‘லஞ்சம்' கொடுத்தாலும், கொடுக்கப் பேரம் பேசினா லும்கூட, அது போகுமா? போடவும் முடியாதே!

எனவே, காலம் நமக்கு அளித்துள்ள பரிணாம வளர்ச்சியில் முதுமையும், மரணமும் (இன்று வரையில் - நாளை அறிவியல் இதை மாற்றும் வாய்ப்பு இருக்கலாம்) தவிர்க்க இயலாதவை அல்லவா! எனவே, கவலைப்படாமல் ஏற்று, அந்த முதுமையைப் பயன் உள்ளதாக்க, அதையே மகிழ்ச்சியுடன் அனுபவிக்க, மனித குலத்தவராகிய நாம் ஆயத்தமாகிடுவதே அறிவுடைமை - இல்லையா?

முதுமை நாம் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அது இயற்கை நம்மீது திணிக்கும் கட்டாயக் காதல்தானே! வேறு வழி இல்லையே!

ஆனால், முதிர்ச்சி என்பது அப்படி அல்ல. அது முதுமையடைந்தாலே தானே கதவைத் திறந்துகொண்டு வருவதல்ல. முதிர்ச்சி என்பது, நமது பண்புகள், பழக்கங்கள்மூலம் செதுக்கிப் பொலிவும், வலிவும் பெறவேண்டிய ஒரு அருங் குணம்! முதிர்ச்சி உடையோர் என்றும் இகழ்ச்சிக்கு ஆளாகார்!

அம்முதிர்ச்சி என்பது எப்படி வரும் - எது முதிர்ச்சியின் அடையாளம் என்று கேட்கிறீர்களா?

கீழ்வரும் 11 குணங்களை குறளில் உள்ள குறட் பாக்களைப் போல் படித்து, செரித்து, நடைமுறைப் படுத்துங்கள். மகிழ்ச்சியின் உச்சத்திற்கே உலகம் உங்களைக் கொண்டு சென்று நிறுத்தும்.

1. மற்றவர்களைத் திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே முதலில் திருத்திக் கொள்வது. மற்றவருக்கு அறிவுரை வழங்காதீர்; உங்களுக்கு நீங்களே அறிவுரை, அறவுரை வழங்கி, நடைமுறை யில் செயலுருவில் மாற்றத்திற்கு ஆளாகுங்கள்.

2. எவரிடமும் முழுமையான குணாதிசியங்களை (பூரணத்துவம் - Perfection அய்) எதிர்பார்க்காதீர்கள். குறைகளுடன் அவர்களை ஏற்றுக்கொள்வது அவசியம். ஊனமுற்ற நம் குழந்தைகளை நாம் நேசிக்கவில்லையா? கொன்றா போட்டு விடுகி றோம்? இல்லையே! இன்னுங்கேட்டால் அவர் களிடம்தானே அதிகப் பரிவும், பாசமும் காட்டு கிறோம்.

3. மற்றவர்களின் கருத்துகளை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ள முயலுங்கள். நீங்கள் உங்கள் கண்ணோட்டத்தில் பார்க்கும் பார்வைக்கும், அவர்களது பார்வைக்கும், நடத் தைக்கும் மிகப்பெரிய வேறுபாடுகளும், காரண காரியங்களும் இருக்கும்; அந்த மறுபக்கத்தை ஆழமாக அலசி - மனிதநேயத்துடன் இதைப் பார்த்தால், நமது நோக்கும் - போக்கும் அவர்பற்றிய (அவசர) முடிவும் தவறு என்று தெரியும்.

ஜப்பானில் ஒரு ஏழைப் பெண் குழந்தை தவ றாமல் வகுப்புக்கு வந்தவர்; திடீரென காலதாமதமாக சில நாள் தொடர்ந்து வந்தார்; பிறகு விடுமுறை போட்டு, பள்ளிக்கு விட்டு விட்டு வந்து அபராதம் - தண்டனை பெற்றார்.

பிறகு ஒரு நாள் திடீரென பள்ளிக்கு வழமை போல் முன்கூட்டியே நேரத்திற்கு வந்தார். ஆசிரி யர்கள் மீண்டும் இவரைச் சேர்த்துக் கொள்ள மறுத்தனர்.

அப்போது அவர் சொன்னார்,

‘‘எனது ஊனமுற்ற தாயும், பாட்டியும் இருந்து என்னை பள்ளிக்கு அனுப்பினர். பிறகு தாய் நோயினால் இறந்துவிட்டார். பாட்டியைக் கவனிக்க மருந்து, உணவு தர எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு வருவதற்குத் தாமதமாகியது. பிறகு பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரை மருத்துவமனையில் சேர்த்து, நானும் உடனிருந்தேன். பாட்டி இறந்ததால், ஈமச்சடங்குகள் நேற்றுதான் முடிந்தன. இப்போது பள்ளிக்கு வந்துள்ளேன். நான் கவனிக்க, உதவிட யாரும் இனி எனக்கு இல்லை. எனவே, காலந்தவறமாட்டேன்'' என்று கண்ணீர் மல்க சொன்னார் அந்த மாணவி. ஆசிரியர்கள் அழுதார்கள்; பள்ளியில் அவரைச் சேர்த்துப் படிக்க வைத்தார்கள்.

இதுபோல நாம் நமது கோணத்தில் மட்டுமே பார்த்தால் உண்மை புரியாது. அவர்கள் நிலையில் இருந்து பாருங்கள். ‘‘ஒத்தறிவு'' (Empathy) என்பது மிகவும் தேவை. அது வந்தால் முதிர்ச்சி வந்துவிட்டது என்று பொருள்.

(தொடரும்)

நாம் இறக்கும்போது நமது பணம் வங்கியில் இருக்கும்!

என்றாலும் நம்மில் பலருக்கு உயிருடன் உள்ளபோது செலவழிக்கப் போதிய பணமோ, மனமோ இருக் காது!

நாம் மறைந்த பிறகு செலவழிக்கப் படாத பணம் மிகுதியாக வங்கியில் இருக்கும்; இருக்கவே செய்யும் உண்மையில்!

சீனாவில் ஒரு பெருந்தொழிலதிபர் இறந்துவிட்டார். அவரது மனைவி யான அந்த விதவைக்கு அவர் விட்டுச் சென்றது 1900 கோடி யு.எஸ். டாலர்கள்!

அந்த விதவை, அந்தத் தொழில திபரின் காரோட்டியை மறுமணம் செய்துகொண்டார்!

அந்தக் காரோட்டி சொன்னார்:

‘‘இதுவரை நான் எனது முதலா ளிக்குத்தான் (Boss) வேலை செய் தேன் என்று நினைத்துக் கொண்டி ருந்தேன். இப்போதுதான் எனக்குப் புரிந்தது எல்லா வேளைகளிலும் எனக்காகத்தான் எனது முதலாளி உழைத்துக் கொண்டே இருந்தார் என்பது!''

இதிலிருந்து ஒரு கசப்பான உண் மையை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

அதிகமான செல்வம், சொத்து சேர்ப்பதில் கவனமாக, குறியாக இருப்பதைவிட மிக முக்கிய நல்ல ஆயுளை திடகாத்திரமாக இருக் கும்படி பார்த்துக் கொள்ள உழைப் பதே முக்கியம் என்பதாகும்!

எனவே, நாம் அனைவரும் நல்ல ஆரோக்கியம், பலம் வாய்ந்த உடல்கட்டினையே நிலை நிறுத்துவது மிக அவசியம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

யார் யாருக்கு உழைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; எதற்காக உழைக்கிறோம் - எதை நோக்கி நம் வாழ்க்கை அமைகிறது என்பதே முக்கியம் ஆகும்!

மிக விலை உயர்ந்த நவீன அதிக தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக் கிய கைப்பேசியை (செல்போனை) வாங்கிப் பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் நமது நண்பர்களில் பல ருக்கும் புரிய வேண்டிய முக்கிய செய்தி:

அதில் உள்ள 70 சதவிகித நவீன வசதியான தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்துவதில்லை - நமக்கு அது வெறும் ‘வேஸ்ட்' தான்!

அதேபோல அதிக விலை உயர்ந்த நவீன மாடல் காரினை பல புதிய பணக்காரர்கள் -  தொழிலதிபர்கள் - அரசியல்வாதிகள் - திரைப்பட நடிகர் நடிகைகள் வாங்கி மகிழ்கின்ற னர். அவர்கள் தங்களைத் தாங்களே  கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி. அதில் உள்ள 70 சதவிகித வேக மற்றும் நுட்ப மின் கருவிகள் (Gadgets) நமக்குத் தேவையா? அவற்றை நாம் பயன்படுத்துகிறோமா? இல்லை என்பதுதானே உண்மையான பதில்!

அதேபோல, ஆடம்பரமான மாட மாளிகை வீடுகள் - அம்பானியின் வீடும், மைக்ரோ சாஃப்ட் முதலாளி பில்கேட்ஸ் வீடும்  நவீன வசதியான பங்களாவில் உள்ள அத்தனை வசதிகளையும் அவரோ, அவரது துணைவியாரோ அன்றாடம் முழுமையாக அனுபவிக்கின்றனரா? அனுபவிக்க முடிகிறதா? இடங்கள் காலி தானே! 70 சதவிகிதம் வெட்டியாகத் தானே இருக்கின்றது?

அதேபோல், வசதி படைத்தவர் வீட்டில் உள்ள அலமாரிகளில் எத்தனைத் துணி மணிகள், உடைகள்! விதவிதமான நகைகள், செருப்பு கள்கூட எத்தனை எத்தனை விதங்கள் - இத்தியாதி! இத்தியாதி!!

இவற்றில் 70 சதவிகிதம் பயன்பாட்டில் அன்றாடம் உள்ளதா? பரிதாபகரமான பதில், ‘இல்லை; இல்லவே இல்லை' என்பதுதானே!

சேமித்து வைப்பவர்களில் பலரும் மற்றவர்களுக்காகவே 70 சவிகிதத்தைச் சேமித்து வைத்து விட்டுச் செல்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை!

எனவே, இதிலிருந்து அறிந்து, புரிந்துகொள்ள வேண்டிய உண்மைகளும், அதற்கு மேற்கொண்ட வாழ்வியல் கவனங்களும் எவை என்பதை எண் ணிப் பாருங்கள்!

அந்த 30 விழுக்காட்டை முழுமை யாகப் பயன்படுத்தி, நலவாழ்வு வாழுங்கள்!

எளிதான இளமையில் நாம் கற்ற பாடம் - மறந்துவிட்ட பாடம் - நினைவிற்கு வருகிறதா?

‘‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!''

எப்படி அதைச் செய்வது என்று கேட்கிறீர்களா?

1. நீங்கள் நலமுடன் உள்ளபோதும், நோய் வராத போதும் முறையாகக் குறிப்பிட்ட காலந்தோறும் உடற்பரி சோதனை மருத்துவரிடம் சென்று செய்துகொள்ளுங்கள்.

(Go for medical checkup even if not sick)..

2. நிறைய தண்ணீர் குடியுங்கள் - தாகம் இல்லாதபோதும் கூட!

3. மனதை வாட்டும் பிரச்சினைகள் வரும்போதுகூட அதைக் கண்டு பதற்றம் அடையாமல், அதன்படி நடக்கும்போது எப்படித் தீர்வு காணவேண்டும் என்பதற்கு அதையே ஒரு வாய்ப்பாகக் கொள்ளுங்கள்!

4. விட்டுக் கொடுத்துப் பழகுங்கள். உங்களது வாதம் சரியானது என்றாலும், மற்றவருக்கு மகிழ்ச்சித்தர உங்களை, நீங்கள் தோற்றதுபோல காட்டிடும் பெருந்தன்மை பேணுங்கள்!

5. எப்போதும் எளிமையாக இருங்கள். உங்களுக்கு நிறைய பணம் இருந்தாலும், அதிகாரம் இருந்தாலும்கூட! (இவ்வகையில் ராமச்சந்திரா மருத் துவப் பல்கலைக் கழக நிறுவனர் - மதிப்பிற்குரிய நினைவில் வாழும் ராமசாமி உடையாரின் எளிமை, அடக்கம் என்னை வியக்க வைத்தது!)

6. உடலுக்கும், உள்ளத்திற்கும், மனதிற்கும், மூளைக்கும் அன்றாடம் - நீங்கள் அதிக வேலைப் பளுவைச் சுமப்பவராக இருப்பினும், உடற்பயிற்சி தரத் தவறாதீர்கள்!

Exercise both for body & mind

7. நீங்கள் மதிக்கும் நண்பர்கள், பெரியவர்கள், அறிஞர்களுக்கு என உங்கள் நேரத்தில் கொஞ்சம் ஒதுக்கி அவர்களிடம் உரையாடி மகிழுங்கள்.

இவை அனைத்தும் உங்கள் வாழ்வில் ‘வசந்தங்களாகும்!'

70 சதவிகிதத்தைப் புறந்தள்ளி, 30 சதவிகிதத்திற்கே மிகுந்த முக்கியத் துவம் தாருங்கள்!

Banner
Banner