எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புரட்சியாளர் டாக்டர் அம் பேத்கரை தமிழகத்தில் எவ் வளவு காலத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தி, அவரது சமூகப் புரட்சியை, தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் ஆதரித்து, துணை நின்று இரு இணை கோடு களாகச் சென்றன என்பதற்கும், அவருடைய புத் தகக் காதல் எப்படிப்பட்டது என்பதற்கும், இன்றைய இளைய தலைமுறையினர் குறிப்பாக பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டத்தினரும் தெரிந்து, புரிந்து, மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டிய ஓர் அரிய தகவல்.

நாகர்கோவில் பகுதி முன்பு திருவிதாங்கூர் சமஸ் தானத்தின் மலையாள ராஜ்ஜியப் பகுதி. நாகர் கோவில் - குமரி மாவட்டத்தில் வாழும் தமிழர்களை நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் என்றே அழைப்பர்.

அதே நாகர்கோவிலைச் சேர்ந்தவர் பிரபல வழக்குரைஞர் பி.சிதம்பரம் (பிள்ளை) வைக்கம் சத்தியாகிரகம் அதற்கடுத்து நடைபெற்ற சுசீந்தரம் (1931) சத்தியாகிரகம் (இருமுறை) நேரிற் கண்டவர். அக்கால சுயமரியாதை வீரரும், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத் தளபதிகளில் ஒருவராகவும் திகழ்ந்தவர்.

1928-1929 இல் தந்தை பெரியார் நடத்திய ஆங்கில வார இதழான ‘ரிவோல்ட்’, ‘புரட்சி’ என்ற வார இதழ்களில் தொடர்ந்து எழுதியவர். ‘குடிஅரசு’ தமிழ் வார ஏட்டிலும் தவறாது கட்டுரை தீட்டியவர் பி.சிதம்பரம் (பிள்ளை) அவர்கள். அவர் ‘தமிழன்’ என்ற ஏட்டினையும், பெரியாரின் சுயமரியாதை இயக்க ஏடாகவும் சிலகாலம் நடத்தி, தனது அரிய சிந்தனை - ‘சட்ட அறிவின்’மூலம் இயக்கக் கொள்கைகளுக்கு வலு சேர்த்தவர்.

அவர் எழுதிய இரண்டு நூல் (தொடர் கட்டுரை களின் தொகுப்பு) கோயில் பிரவேச உரிமை, திரா விடர் - ஆரியர்(Right of Temple Entry, Dravidian and Aryan) இதில் Right of Temple Entry ஆங்கில நூலுக்கு தந்தை பெரியார் மதிப்புரை எழுதியுள்ளார் (1929 இல்).

அந்நூலைப் பெற்று பம்பாயில் வழக்குரைஞராக இருந்து, சமூகநீதிப் போராட்டக் களத்தில் தீவிரமாக இறங்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் படித்துச் சுவைத்து, நூலாசிரியர் பி.சிதம்பரம் பிள்ளையவர் களுக்கே பெரிய பாராட்டுக் கடிதத்தை எழுதி உற்சாகப்படுத்தியுள்ளார்.

தமிழில் மொழியாக்கம் செய்து, இதன் ஒரு பகுதி வெளியானபோது, அத்தகவலை நூலாசிரியர் பி.சிதம்பரம் அவர்களே இவ்வாறு எழுதி, வாசகர் களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்!

1930 இல் ஈரோட்டில் தந்தை பெரியார் நடத்திய இரண்டாவது மலேசிய சுயமரியாதை மாநாட்டில் ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. சுசீந்தரம் தெருக் கள் - கோயில் முன் நிகழ்ந்த சத்தியாகிரகம்பற்றி ரிப்போர்ட் (அறிக்கை) செய்யும்படி இவர் கேட்டுக் கொள்ளப்பட்டவர். பல வழக்குகளின் தீர்ப்புகளை யும் ஆராய்ந்து இந்த ‘ஆலயப் பிரவேச உரிமை’ (Right of Temple Entry) 
ஆங்கில நூலை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நூலின் முன்னுரையில், அதன் ஆசிரியர் பி.சிதம்பரம் பிள்ளை கீழ்க்கண்டவாறு எழுது கின்றார்:

‘‘தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் பிரதிநிதியாக வட்ட மேஜை மாநாட்டிற்குச் சென்றிருந்த பம்பாய் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்நூலைக் குறித்து அடியிற்கண்ட அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்.

‘‘உங்களுடைய நூல் மிகவும் ருசிகரமாக இருக்கிறது. ஆலய வணக்கம் எவ்வாறு, எப்பொழுது ஏற்பட்டது என்பதைப்பற்றிக் குறிப்பிடும் பாகங்கள் மிகவும் போதனையளிப்பதாக இருக்கின்றன... இந்தியர்களை ஒற்றுமைப்படுத்துதல் என்ற பிரச் சினையோ, தீண்டாமையை ஒழிக்கும் பிரச்சி னையோ ஆலய நுழைவு தீர்க்கும் என்று நான் கருதவில்லை. ஆனால், மேற்குறித்த பிரச்சினை களை அது தீர்க்கும் என்று கருதுகிறவர்களுக்கு உங்களுடைய ஆராய்ச்சி மிகவும் பயன்படும் என்று நான் நம்புகிறேன்...’’

இவ்வாறு அந்நூலைப் பாராட்டியுள்ள டாக்டர் அம்பேத்கர் தனது கொள்கை நிலைப்பாடு என் பதிலும் உறுதியோடு நின்று கூறுவது எப்படிப்பட்ட இலட்சிய உணர்வு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்!

தந்தை பெரியாரும், அவர்தம் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் அம்பேத்கரும் அவர்தம் சமூ கப் புரட்சியும்  இரு இணைக்கோடுகள் என்பதை விட, ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதற்கு, 88 ஆண்டுகளுக்குமுன்பே கிடைத்த சான்றாவணம் சிதம்பரம் பிள்ளை நூலின் முன்னுரை என்பதோடு, டாக்டரின் புத்தகக் காதலில் சுயமரியாதை இயக்கமும் பங்கு பெற்றுள்ளது என்பது இதன்மூலம் புரியவில்லையா?

(வாசகர்கட்கு - இந்நூல் புதிய தமிழ்ப் பதிப்பு இப்போது திராவிடர் கழக (இயக்க) வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner