எழுத்துரு அளவு Larger Font Smaller Font

11. விஞ்ஞானம் மட்டுமே மக்களுக்கு முழுத் தீர்வு கொடுத்து விடாது! என்கிறார்  டாக்டர் இனோஹாரா

நமது பார்வையும் பலவற்றை நோக்கி - பல்வேறு கலைகளை அனுபவித்து, இன்பு றுவது நம்மை ஆரோக் கியமாக வைத்துக் கொள் வதற்கு உதவக் கூடும். (ஓவியம், கவிபுனைதல், இலக்கிய  ரசனைகள் (Liberal Arts) போன்ற பலவற்றிலும்கூட ஈடு பட்டு முதுமையில் நாம் காலம் கழித்தால் அது மகிழ்ச்சியைத் தரும் என்ற பொருளை உள்ளடக்கமாகக் கொண்டே இந்த டாக்டர் இப்படி கூறுவதாகவே நமது விளக்கம் அமைதல் நல்லது. விஞ்ஞான விரோதக் கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை).

12. பணமே வாழ்க்கையின் எல்லாமும் என்று ஆகிவிடாது - எப்போதும்!

பணம் சேர்ப்பதென்றே வாழும் பலருக்கு பணமே எல்லா முமாக இருப்பது மிகவும் கேடான மனப் பான்மையாகும்!

இந்த புத்திசாலி டாக்டர் கேட்கிறார் 'நான் என்ன எனது கல்லறைக்கு பணத்தையா என்னுடன் கொண்டு போகப் போகிறேன்' என்று. எனவே, எதற்கு வாழ்க்கையில் முன்னுரிமை தர வேண்டுமோ அதற்கு முன்னுரிமை தரும் வாழ்வே முழு வாழ்வாகும். எந்த நேரமும் பணத்தையே நினைத்து வாழும் மனிதர்கள் மகிழ்ச்சியுடன் வாழவே முடியாது!

(எப்போதும் பணம் நமது "வேலைக்காரனாக" இருப்பது முக்கியம்; அதை நம்மீது ஆதிக்கம் செலுத்தும் "எஜமானனாக்க" அனுமதியாதீர்; அனுமதித்தால் நாம் பண நோயாளிகளாகி, பிறகு மன நோயாளி  யாகி மரித்து விடும் நிலைதான் ஏற்படக் கூடும்)

13. வாழ்க்கை என்பதே  விசித்திரமான புதிராகவும், வலியைப் போல எப்போது, எப்படி வரும் என்று கூற முடியாதவாறு அமைவதே உண்மை என்கிறார் டாக்டர் இனோஹாரா அவர்கள்!

இந்த அனுபவக் களஞ்சியமான டாக்டர் கூறுகிறார்; "வலி என்பது வாழ்க்கையின் விசித்திர புதிர்களில் ஒன்று! மிகப் பெரிய எதிர்பாராத ஒன்று. அது எப்போது நமக்கு எப்படி ஏற்படும் என்பதை முன்கூட்டியே கூறிட முடியாது; எதிர்பார்க்கவும் முடியாது.

இந்த வலி, மனவலி, உடல் வலி போன்ற வலிகளை நாம் சிகிச்சைக்கு உட்படுத்தி குணப்படுத்தவும் முடியும்!

வலியுடன் அவதியுறுவோர் பக்கத்தில் அமர்ந்து இதமாகப் பேசுவது, யார்மீது அவர்கள் மிகுந்த அன்பும், நம்பிக்கையும் வைத்துள்ளார்களோ, பாசம் காட்டிடும் அவர்கள் கூறும் ஆறுதல் பாதிக்கப்பட்டவர்களின் வலியை நிச்சயம் போக்கும்; அல்லது குறைக்கும்; தனது செல்லப் பிராணிகளுடன் கொஞ்சுதல்; அது போலவே இசையைக் கேட்டு மகிழ்தல் இவைகளும் கூட வலியைப் போக்கும் மாமருந்துகளாகும்!"

14. எப்போதும் உற்சாகத்துடன் இருக்கப் பழகுங்கள்!

நமது இதயத்தின் நெருப்பின் கனல்வீச்சு எப்போதும் குறையாமல் இருக்க, நாம் உற்சாகமான உளப் போக்குடன் இருப்புது மிகவும் அவசியமாகும்! உள்ளு வதெல்லாம் உயர்வுள்ளல்; திட்டமிடுதல்; நல்ல கவிதை களைப் படித்துச் சுவைத்து மகிழ்தல்; மற்றவர்களின் கனிந்த அனுபவங்களை அவர்கள் சொல்ல, எழுத நாம் கேட்டும் - படித்தும் பயன் பெறுதல் நமது ஊக்கத்தையும் பெருக்கும்.

பழைய பழமொழி ஒன்று உண்டு. 'எதையும் முயற்சிப்பதில் தவறேதும் இல்லை' என்பதே அது!

எனவே, மேலே கூறிய 14 அம்சங்களை முயற்சி செய்து பாருங்கள் எனது முதிய நண்பர்களே என்கிறார் டாக்டர் இனோஹாரா. இதுபற்றிய எண்ணங்களையும், விமர்சனங் களையும் எனக்கே எழுதி அனுப்புங்கள் என்று திறந்த மனதோடு எழுதுகிறார் டாக்டர்.

எனவே, முதுமையை இரு கரங்கள் கூப்பி வரவேற்று அனுபவிக்கத் தயராவீர் முதியவர்களே! சலிப்பு, சங்கடம், விரக்தி வேதனை இவைகளுக்கு விடை கொடுத்து வாழ்க்கையை நாளும் இன்ப ஊற்றாக்கி மகிழுங்கள், நண்பர்களே!

(நிறைவு)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner