எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 6,10,000 பேர்கள் மாரடைப்பால் - இதய நோய் தாக்குதலால் உயிரிழக்கிறார்கள்!

அமெரிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை தந்துள்ள ஓர் புள்ளி விவரப்படி, ஆண் - பெண் இருபாலருக்கும் உயிர்க்கொல்லி நோயாக இந்த இதய நோய் உள்ளதாம்!

ஒவ்வொரு ஆண்டும் 7,35,000 அமெரிக்கர்கள் இதய நோயால் தாக்கப்படுகிறார்கள்!

இந்தியாவில்கூட இந்த நோயின் தாக்கம், அமெரிக்காவுக்கு சளைத்ததல்ல. பல்லாயிரக்கணக்கில் இந்த நோய் தாக்கியதால் மறைந்தவர்கள் அநேகம்; மீண்டவர்கள் எண்ணிக்கையும், மாண்டவர்களைவிட அதிகம் இருக்கலாம் என்பது ஒரு ஆறுதல் தரும் செய்தியாகும்!

இதய நோயை -  மாரடைப்பு தாக்குதலை உடனடி யாகக் கண்டறிந்து, உடனடியாக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வேனி லேயே மருத்துவர்களும், செவிலியர்களும் உடனடிச் சேவை களை, மருத்துவத்தை - கால தாமதிக்காமல் செய்து முடித்து விடுகிறார்கள்!

கடலில் குளிப்பவர்கள் அலை வரும் போது அதில் சிக்கிக் கொள்ளாமல், தலையைத் தூக்கி, அலையின் இழுப்பிலிருந்து தப்பி விட்டால் தாராளமாகத் தப்பிக்க முடியும்! அதுபோலத்தான் உடனடி சிகிச்சை, உயிர்க் காக்கும் வாய்ப்பை நிச்சயம் அது தரும் என்பது உறுதி. நானே அதற்கு சாட்சியாகும்!

மாரடைப்பு நோய்க்கு முக்கிய காரணம், நமது இருதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்ந்து - இரத்த ஓட்டம் இயல்பாக நடைபெறுவதை தடுப்பதினால் தான் ஏற்படுகிறது!

இதற்கு நோயின் முதல் நாடினால் காரணம் - நாம் உண்ணும் உணவுகளும் மற்ற காரணங்கள் கூடுதல் சதை, உடற்பயிற்சி இன்மை எனப் பல உள்ளன! கொழுப்புச் சத்துள்ள வேக உணவுகளை நமது மக்கள்  - குறிப்பாக இளைய தலைமுறையினர் ஏராளம் சாப்பிட்டு தங்களது வாழ்வை நாளும் குறைத்துக் கொள்வதில் போட்டி போடுவது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்.

உணவு முறையில் கவனம், அன்றாட வாழ்க்கை முறையில் மாற்றம் (Change in Life Style) எடுத்தால் இதய நோயினை கூடுமான வரை தடுக்கலாம்! மன அழுத்தம் - இறுக்கம் மற்றொரு முக்கிய காரணம் ஆகும்!

உணவில் கவனத்துடன் பயன்படுத்தினால் இந்த இதய நோய்த் தாக்குதலைத் தவிர்க்க முடியும் என்று மருத்துவ அறிஞர்கள் கூறியதின் வடிகட்டிய சாரத்தை நாம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.

1 )  கொழுப்பான மீன் வகையறாக்கள் நமது ஆரோக் கியத்திற்கு உகந்ததாகும். (சில மீன்களுக்கு இங்கே பெயரைக் கண்டறியுங்கள்) சால்மன் (Salmon), மெக்கிரல் (Mackerel) சார்டின் (Sardines) மீன்கள், டியூனா  (Tuna) போன்றவைகளை சாப்பிடுவது வரவேற்கத்தக்கது!

அமெரிக்க இதய நிபுணர்கள் சங்கத்தினர் இது போன்ற கெடுதியில்லா கொழுப்புள்ள (Unsaturated Fats)   ஓமேகா - 3 மீன்கள் கொழுப்பு அமிலத்தை, மற்ற சத்துக்களை தந்து நமது இதய நோய் தாக்குதலை எதிர்த்து 'தடுத்தாட் கொள்ளும்' திறன் படைத்தவை என்று கூறுகிறார்கள்!

குறிப்பாக Arrhythmia என்ற இதய இரத்த ஓட்டம் சீராக இல்லாத தடுக்கப்பட்டு தடுக்கப்பட்டு இதயத்திற்கு வருகின்ற நோய் - மாரடைப்பு (atherosclerosis) நோய்களைத் தடுக்க இவை உதவுகின்றன என்று கூறி பரிந்துரைக்கின்றனர்!

ஊட்டச்சத்து நிபுணர்கள் இத்தகைய மீன்கள் 99 கிராம்களை உண்ண (ஒரு வாரத்தில்  2-3 முறை உண்ணலாம்)  என்று அறிவுறுத்துகின்றனர்!

2) ஓட் மீல் (Oat meal - புல்லரிசிக் கூழ்) இந்த புல்லரிசிக்கூழ் - ஓட்ஸ் கஞ்சி மாதிரி நிறைய எளிதில் செரிமானம் ஆகக் கூடிய நார்ச் சத்துக்களை கொண்ட உணவாகும். கெட்ட கொழுப்புகளைக் கரைக்கும் "விரட்டும்" சக்தி இந்த 'ஓட்ஸ்'க்கு உண்டாம்!

அதுபோல குடற்புண் போன்றவை மற்றும்   Antioxidants போன்றவைகளாக வும் பயன்படும் இது ரத்த அழுத்தத்தை யும் ஒழுங்குபடுத்தும் சக்தி உடையதாகும்.

அதுபோலவே இரண்டாம் வகை சர்க்கரை நோய் (Type 2 Diabetes) த் தடுப்பும், எடை கூடாமல் இருக்கவும் இது பெரிதும் உதவுகிறது!

3) பெர்ரிஸ் - பெர்ரி பழங்கள்  மூன்று அளவு (Three Serving's) பழங்களை உண்ணுதல் ஒரு வாரத்தில் மாரடைப்பைத் தடுக்கிறது என்று ஈஸ்ட் ஆஞ்சிலியா பல்கலைக் கழகம் என்ற இங்கிலாந் தில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.

புளுபெர்ரீஸ், ஸ்டராமெர்ரீஸ் பழங்களில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆந்தோ சயாநின் (anthocyanins) உள்ள தால் 32 சத விகித மாரடைப்பு அபாயத்தை இப்பழங்கள் குறைக்க உதவுகிறாம்.

(நாளையும் வளரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner