எழுத்துரு அளவு Larger Font Smaller Font

4). மாரடைப்பு, இதய நோய் தடுக்க கறுப்பு சாக்லேட்டுகள்

இந்த கறுப்பு சாக்லேட்டுகள் இதயத்தின் ரத்தக் குழாய்களை (Arteries)  இலகுவாக்கிடுகிறது (Flexible). ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் இரத்தக் குழாய்களின் சுவர்களில் ஒட்டிக் கொள்ளாமல் தடுக்கவும் உதவுகிறது. எனவே அளவோடு இந்த கறுப்பு சாக்கலேட்டுகளை சாப்பிடுவது, நமது இரத்தக் குழாய்களில் கெட்டிக் கறைகள் (Plaque) ஏற்படாமல் தடுக்கவும் உதவி செய்கிறது.

மூத்த மருத்துவப் பேராசிரியர் நமது டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் அவர்கள் இதனை நம்மிடம் தெரிவித்ததோடு, இதில் "கோகோ" (Coca)  இருப்பதால் அது இதயத்திற்கு நல்லது; பால் சாக்லேட்டை (Milk Chocolate) தவிர்ப்பது அவசியம்.

இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்டு, நாளும் ஓரிருமுறை கறுப்பு சாக்லேட்டை அளவுடன் சாப்பிட்டு வாருங்கள்.

5). கொட்டைகள் (Nuts)

அமெரிக்காவில் உள்ள இதய நோய் தடுப்புக்கான அமெரிக்கக் கல்லூரி ஒன்றின் ஆராய்ச்சி இதழில் (Journal) கொட்டைகளை நீங்கள் எவ்வளவுக் கெவ்வளவு நாளும் உண்ணுகிறீர்களோ, (அளவு வைத்துக் கொள்ள மறந்து விடாதீர்கள்) அது உங்கள் இருதயத்தை பலம் பெறச் செய்கிறது! பாதாம் பருப்பு  (Almonds) வால்நட்டுகள் (Wal Nuts) போன்றவை கொழுப்புச் சத்தில்லாத நல்ல அமிலங்களை உடல் நலத் திற்கேற்ப உற்பத்தி செய்வதில் பெரிதும் உதவுகின்றன.

பிற்பகலிலோ, மாலையிலோ உங்கள் சிறுதீனி  (Snacks) தேவைப்பட்டால் இவைகளை உண்ணலாமே!

6). எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில்

சுகாதாரத்துறை நிபுணர்களால் பரிந்துரைக்கப் படுவது இந்த எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில் என்ற ஆலிவ் ஸ்பெஷல் எண்ணெய். இதனை சமையலுக்குப் பயன்படுத்தினால் அதில் உள்ள "ஒமேகா - 3" மற்ற (Almonds) பாதுகாப்பு  சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், ஏதாவது குடற்புண் போன்றவை ஏற்படாமல், ரத்தம் கட்டி - உறைந்து விடாமல் (Prevents Blood Clotting) ஆகியவை களுக்கு உதவுகிறது.

7). சிவப்பு ஒயின் (Red Wine) - ரெட் ஒயின்

ரெட் ஒயினில் உள்ள ரிசர்வோட்டிரால் (Resveratrol) ரத்தக் குழாய்கள் பழுதடை யாமல் பாதுகாக்கிறது. அத்துடன் ரத்தம் உறை யாமல் தடுக்கவும் செய்கிறதாம்! இதனை ஒரு நாளுக்கு ஒரு கிளாஸ் (சிறிய அளவு - நிதானமான அளவு) பாவித்து வந்தால் இருதயம் இதய நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தியின் இருப்பிடமாக வளர உதவுகிறது.

(இது எல்லோருக்கும் பொருந்தாது; மேலை நாட்டவர் போன்றவர் - மதுப் பழக்கம் இல்லாவிட்டாலும் மருந்தென கருதி குடிப்பவர்களுக்கு ஏற்கக் கூடிய தாகலாம்).

8). கிரீன் டீ

 

இதை நான் 'பச்சைத் தேநீர்' என்று மொழியாக்கம் செய்வதை பலரும் விரும்ப மாட்டார்கள். அச்சொல்லை அப்படியே வைத்தால் அனைவருக்கும் புரிந்த ஒன்றுதானே என்றுதான் கூறுவார்கள்.

அய்ரோப்பிய ஆய்வு இதழ் ஒன்றில்  (A research Journal, European Journal of Cardiovascular Prevention and Rehabilitation) கூறப்பட்டுள்ள கருத்து, இந்த கிரீன் டீ ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதுடன், குடித்த 30 நிமிடங்களில் அதை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் இதனிடம் உள்ளதாம்! இப்படி அது உடனடியாகச் செயல்படுவதற்கான வேகத்திற்கு மூல காரணம் அதனிடம் உள்ள Endothelial செல் செயல்படாமல் இருப்பதுதான் இதயக் குழாயில் ரத்த ஓட்டம்  - ரத்தம் உறைந்து தடுக்கும் நிலையை ஏற்படுத் தும் (This instant and fast result is because green tea targets the endothelial cell dysfunction which is responsible in the development  of clogged arteries) என்று அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

9). பச்சைக் கீரைகள்

ஊட்டச் சத்துபற்றி ஆய்வு நடத்தும் ஆராய்ச்சி இதழில் வெளி வந்துள்ள ஓர் கட்டுரையில் பச்சைக் கீரைகளான காலி, பார்சிலி, பிராக்லி, ஸ்பிரைச் (நம்மூரில் ஏராளமான கீரைகள் பட்டியலே உண்டு - இவை மேலை நாட்டுக் கீரைகள் பட்டியல் - அதனால் சிறு கீரை, முளைக் கீரை, பொன்னாங்கன்னி கீரை போன்றவைகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாமே) இவைகளில் வைட்டமின் K என்பது ஏராளம் உள்ள தால், இதயத்திற்கு ரத்த ஓட்டம் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்புகளால் அது சேதமடையாமலும், கொலஸ்ட் ரால் அளவினைக் கூடாமல் தடுக்கவும், ரத்த அழுத்தம் கூடாமலும் பாதுகாக்கும் பணியை இவைகள் செய்யும் திறன் படைத்தவைகளாகும்!

10). அவோகேடா Avocado

இது ஓர் வகை பழம். நம்மூர் வெள் ளரிப் பழம் போன்றது.  monounsatu rated and polyunsaturated fats என்ற ஒருவகை உதவிடக் கூடிய நல்ல கொழுப்புச் சத்துகள் இதில் உள்ள படியால் கெட்ட கொலஸ்ட்ரால் உரு வாக இதய இரத்தக் குழாய்களை அடைத்து விடாத தடுப்புகளை போடும் பணி செய்வதாக இது அமைகிறது.

(நாளையும் வரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner