எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களைப் பயன்படுத்தி கேம்பிரிட்ஜ் அனாலிடிக்கா (cambridge analytica) என்னும் நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தலில் பல அமெரிக்க வாக்காளர்களை ட்ரம்புக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களைத் திட்டமிட்டு ஏமாற்றியிருக்கிறது.

"ஃபேஸ்புக் தகவல்களின் உதவியுடன் பல வாக்காளர்களை ட்ரம்புக்கு ஆதரவாக ஓட்டுப்போட அவர்கள் முடிவெடுக்க தாக்கம் செலுத்தினோம், அவர்களைக் குழப்பினோம், தூண்டினோம்" என ஒருவர் சாட்சியம் அளித்திருந்தார். ஆங்கிலத்தில் அவரை "விசில் ப்ளோவர்" (Whistle blower) என்று அழைப்பார்கள். ஆபத்து வரும் முன் காவலர் விசி லடித்து எச்சரிக்கை செய்வார் அல்லவா! அதைப்போல அரசு, அல்லது தனியார் நிறுவனங்கள் செய்யும் தகிடுத் தனங்களை மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக வெளிப் படுத்துபவர்களை விசில் ப்ளோவர் என்று அழைப் பார்கள். அப்படிப்பட்ட விசில் ப்ளோவர்தான் கிறிஸ் டோபர் வையலி. அவர் "கேம்பிரிட்ஜ் அனா லிடிகா" (Cambridge Analytica) நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.

சில மணி நேரத்தில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் உலகம் முழுவதிலும் நடக்கும் பல தேர்தல் களில் சமூக, வலைதளங்கள் மற்றும் இதர டிஜிட்டல் தகவல்களின் உதவியுடன் இத்தகைய "வாக்காளர்களை வசியப்படுத்தும்" (Persuading Voters)  வேலைகளைச் செய்திருப்பது அம்பலமானது. குறிப்பாக இந்தியத் தேர்தல்களிலும். இந்தச் செய்திகள் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க செனட்கள் கொண்ட குழு மார்க் ஜுக்கர்பெர்கை விசாரணைக்கு அழைத்தது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் முதன்மை மேலாளர் ராஜினாமா செய்தார். தேர்தல்களில் சமூக வலைதளங்கள் வக்காளர்களை வசியப்படுத்தவும், அவர்களை திசைத்திருப்பவும், குழப்பவும் பயன்படும் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. அனைவரின் மத்தியிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்தியாவின் தகவல்தொடர்புத் துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் அனைத்துச் சமூக வலைதள நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார். இந்திய தேர்தல்களில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்த நிறுவனங்களும், வலை தளங்களும் தடை செய்யப்படும் என எச்சரித்தார். ஆனால் பீதி விட்டபாடில்லை. தேர்தல் நடக்கும் போதெல்லாம் சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டியுள்ளது.

குழப்பமாக இருக்கிறதா? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் தெரிகிறதா?

ஃபேஸ்புக் பயன்படுத்தும் ஒருவரை எப்படி ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க முடியும்? தேர் தலுக்கும் ஃபேஸ்புக்குக்கும் என்ன சம்மந்தம்? அட... தேர்தலுக்கும் இணையத்திற்கும்தான் என்ன சம்மந்தம்? நான் வரிசையில் நின்று வாக்களிப்பதை அவர்களால் எப்படி மாற்ற முடியும்? முதலில் இது சாத்தியமா? என்று பல கேள்விகள் உங்களுக்கு எழலாம்.

முதலில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விடுகிறேன்.

ஆம், இதெல்லாம் முடியும்தான். விடை இதோடு முடிவதல்ல. ஃபேஸ்புக் பயன்படுத்தும் உங்களைத் தங்களுக்கு ஏற்றாற்போல் பல நிறுவனங்கள் வளைத்துப் போட முடியும். உங்களைக் குறிப்பிட்ட பொருட்களை வாங்க வைக்கமுடியும். உங்களுக்குத் தேவையே இல்லை என்றால் கூட, தேவையைச் செயற்கையாக உருவாக்க முடியும். உங்களைத் தங்களுக்கு ஆதரவாக வசியப்படுத்த முடியும். அதுவும் தொழில்நுட்ப ரீதியாக, அறிவியல் பூர்வமாக... உங்கள் மனநிலையை மாற்ற முடியும்.

நீங்கள் இணையத்தைப் பயன்படுத்துபவரா? எதற் கெல்லாம் பயன்படுத்துவீர்கள்? (கணினி அல்லது ஸ்மார்ட் ஃபோனில் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்)

பொருட்கள் வாங்க, சாப்பாடு ஆர்டர் செய்ய, நண் பர்களுடன் தொடர்பில் இருக்க, பொழுதுபோக்கிற்காக, சினிமா பார்க்க, பில் கட்ட, பயணச் சீட்டு வாங்க என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். போதும்... நீங்கள் பல நிறுவனங்களின் அடிமை; உண்மையைச் சொன்னால் நீங்கள் ஒரு சோதனை எலி; அதே நேரம் யாரோ ஒருவர் கோடி கோடியாக லாபம் குவிக்க உதவும் ஓர் அப்பாவி அடிமை.

என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?

உங்கள் பழைய நண்பர்களுடன் தொடர்பில் இருக்க  நீங்கள் சமூகவலைதளங்களைப் பயன்படுத்த லாம். உங்களின் முன்னால் காதலியைப் பற்றித் தெரிந்து கொள்ளக்கூடப் பயன்படுத்தலாம், மீம்கள் பார்த்து ரசித்திருக்கலாம், இணையப் போராளியாக இருக்கலாம், நீங்கள் இதில் எந்தக் காரணத்தைச் சொல்லி சமூக வலைதளங்களைப் பயன்படுத்தினாலும் சரி, நீங்கள் அவர்களுக்கு ஒரு எலிதான்.

நீங்கள் இந்தச் சமூகவலைதளங்களைப் பயன்படுத் துவதால் பெறும் நன்மைகளை விட உங்களைப் பயன்படுத்தி அவர்கள் பெறும் நன்மைகள் அதிகம். ஆனால், மறுபக்கம் இந்தச் சமூகவலைதளங்களால் உங்களுக்கு வரும் பிரச்சனைகளும் அதிகம்.

நீ ங் க ள் ஃபேஸ் புக்கைப் பயன்படுத்துகிறீர்கள். நிச்சயம் அய்ந்து பைசா அதற்காகச் செலவு செய்திருக்க மாட்டீர்கள். ஃபேஸ்புக்கின் பயனாளராக இலவசமாகத் தான் சேர்ந்திருப்பீர்கள். உங்களைப் போன்று பல லட்சம் பேருக்குச் சேவை தர ஃபேஸ்புக் தொழில்நுட்ப ரீதியாகப் பலமான கட்டமைப்பைப் பெற்றிருக்க வேண்டுமல்லவா? ஒரு சின்ன உதாரணம் பாருங்கள். பல கோடிப் பயனாளரின் வருகை, பகிர்வுகளின் படங்கள், வீடியோக்கள் என சகலத்தையும் ஃபேஸ்புக் சேமித்து வைத்திருக்கிறது. இவையெல்லாம் பல  Terabyte டேட்டாக்கள். அப்படியென்றால் அவ்வளவு தகவல்களைச் சேமிக்க எவ்வளவு பணம் செலவாகும் என்று யோசித்துப் பாருங்கள்? நாம் ஃபோனுக்குப் போட்டிருக்கும் 4 ஜிபி டேட்டா கார்டின் விலை சுமார் 500 ரூபாய். அப்படியென்றால் ஃபேஸ்புக் பயனாளர் களின் பல லட்சம் ஜிபி டேட்டாவைச் சேர்த்துவைக்கப் பணம் வேண்டாமா? இப்படியாக ஃபேஸ்புக் இயங்க பற்பலத் தொழில்நுட்ப உதவிகள் தேவை. அவை யனைத்தும் செலவுகள் பிடிப்பவைதான். அதுவும் கோடிக்கணக்கில் செலவுகள் செய்ய வேண்டும்.

அப்படியிருக்க ஃபேஸ்புக் சமூக சேவை செய் கிறதா? இல்லை சமூக சேவை செய்யத்தான் அவர்கள் பிறந்திருக்கிறார்களா?

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணக்குப் படி அந்நிறுவனத்தின் சர்வர்களைப் பராமரிக்க ஒரு மாதத்திற்குச் சுமார் 30 மில்லியன் டாலர்களைச் செலவு செய்கிறார்கள் (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 1800). கோடி மாதத்திற்கு 1800 கோடி ரூபாயைச் செலவுசெய்து இலவசமாக நம்மை பயன் படுத்த விடும் ஃபேஸ்புக் எப்படித் தன் செலவுகளைச் சமாளிக்கிறது? அது மட்டுமா அந்நிறுவனம் லாபத்தில் இயங்குவதாகச் சொல்கிறது.

லாபக் கணக்கு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்த படியேதான் இருக்கிறது?

இது எப்படிச் சாத்தியம்?

ஃபேஸ்புக் செலவு செய்வதைவிடப் பல கோடி டாலர்களுக்கு மேல் லாபம் சம்பாதிக்கிறார்கள். அந்த வருமானத்திற்குக் காரணம் எல்லாம் நம் மூலமாகத்தான். அதாவது பயனாளர்கள் மூலமாகத்தான்.

நீங்கள் எப்படியெல்லாம் இந்நிறுவனங்களுக்குச் சோதனை எலியாக இருக்கிறீர்கள்? அவர்களின் வருமா னத்திற்கு எப்படி உரமாக இருக்கிறீர்கள்? அவர்கள் உங்களை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள் கிறார்கள்? இதனால் ஏற்படும் சமூகப் பிரச்சனைகள், அறம் சார்ந்த பிரச்சனைகள் என அனைத்தையும் பற்றி அறிந்துகொள்வோம். விவாதிப்போம்.

இது ஒரு வெறும் தொடக்கம்தான்..."

உள்ளே பாடம் எடுப்பதைப் போல அருமையாக பல்வேறு செய்திகளை எளிதில் புரியும்படி விளக்கி எழுதியுள்ளார்.

நம் கையில் உள்ள வாக்குச் சீட்டை 'மயக்க பிஸ்கட்டுகள்' கொடுத்து ஏமாற்றிப் பறிப்பதுபோன்ற ஒரு வித்தை, இப்போது நடைபெறும், இனிவரும் - தேர்தல்களில் உண்டு என்பது அதிர்ச்சிக்குரியதாகும்.