
புதுமையான எண்ணங்கள், புதிய வழித் தடங்களுக்கு, புதிய கண்டுபிடிப்பு களுக்கு, புதிய சிந்தனைகளை அடிப் படையாகக் கொண்ட புத்தாக்க செயலாக் கங்களுக்கு நாம் என்றுமே தயாராக இருக்க வேண்டும்.
பழையன கழிதல் - புதியன புகுதல் என்று படித்தால், பாட்டுக்குப் பதவுரை, கருத்துரை சொன்னால் மட்டும் போதுமா? அதைவிட ஒரு படி மேலே செல்ல வேண் டும்.
பழையன கழிதலுக்காக, புதிய புகுதலுக்காக காத்திருக்காமல், அதை சற்று மாற்றி யோசிக்க வேண்டும்; பழையன கழியட்டும்; புதியன புகட்டும் என்று யோசித்துக் கொண்டிருக்காமல், பழையன கழித்தல் புதியன புகுத்தல் என்பதை கடைப்பிடித்தால்தான் முன் னேற்றம், உண்மையான வளர்ச்சி என்பது ஏற்படும்.
சில நாள் முன்பு வாழ்வியல் கட்டு ரையில் குறிப்பிட்டபடி, ஸ்வீடன் நாட்டு அறிஞர் பிரடெரிக் ஹரேன் எழுதிய வளரும் நாடுகள் என்ற புத்தகத்தில் இந்தக் கருத்தினை மிக மிக அருமையாக விளக்கி, பொருத்தமான எடுத்துக்காட்டு களையும் நம் முன் வைத்துள்ளார். வளர்ந்த நாடுகள் - பெருமிதம் கொண்ட தால் ஒரு தேக்கத்தை அடைந்து விடு கிறார்கள்! இதற்குமேல் போக என்ன விருக்கிறது? என்ற ஒரு கேள்வியை எழுப்பி எல்லையை முடித்து விடு கிறார்கள்!
ஆனால், வளர்ந்து கொண்டுள்ள நாடுகள் (Developing Countries) அந்தப் படி இல்லாமல், வளர வேண்டும் என்ற உந்துதல் காரணமாக, புதிய புதிய முயற்சிகளில், புத்தாக்கத்தை நோக்கிப் பயணம் செய்து, புதுப்புது வழி முறை களைக் காணத் துடித்த வண்ணம் உள்ளனர்!
2008-இல் சீனாவில் உலக விளை யாட்டுப் போட்டி - ஒலிம்பிக் கேம்ஸ் நடத்தினார்கள். அதற்கு அவர்கள் அமைத்த விளையாட்டுத் திடல்கள், உணவு விடுதிகள், அரங்குகள், நீச்சல் குளங்கள், ஸ்டேடியங்கள் ஆகியவை களை (கடந்த அக்டோபரில்) நேரில் சென்று பார்க்கும்போது பிரமித்துப் போனோம் நாங்கள்.
அதுபற்றி சுவையான தகவல்கள் இரண்டு - கட்டடங்கள், அமைப்புக் கட்டு மானங்கள் - இவை ஒருபுறமிருந்தாலும், புத்தாக்க சிந்தனை சிறு விஷயங் களில்கூட அவர்களிடையே உருவாகி, கலந்து கொண்ட போட்டியாளர்களி டையே அது மிகப் பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது என்றே கூற வேண்டும்.
மின்சாரம் சார்ஜ் செய்து கொள்ளுவ தற்குரிய Socket என்ற மின் கருவிகள் பொதுவாக, அமெரிக்க, அய்ரோப்பிய, ஆசிய நாடுகளிடையே அளவீட்டில் வேறுபாடு ஏற்பட்டு, அதற்கேற்ப நாம் மின் கருவிகளை வாங்கி கையில் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது!
உதாரணமாக, அமெரிக்காவில் மின் பயன் பொருள்கள் வாங்கினால், மின் சாரம் 110 வோல்டேஜ் (Voltage அளவு உள்ளதால், அதற்கென ஒரு மின்மாற்றி (Cowerfer) தேடிப் பிடித்து வைத்துத்தான் பயன்படுத்த முடியும்.
ஒலிம்பிக் போட்டியில், பல்வேறு நாட்டினர் கலந்து கொள்ளும்போது, இந்த மின்வசதி அவர்தம் அன்றாடத் தேவைகளுக்கு - கணினியை இயக்கு வது முதல் பல்வேறு அம்சங்களுக்கு இது முக்கியத் தேவை அல்லவா?
இதில் தக்க கவனம் செலுத்தி - சுவரில் அமெரிக்க, ஆசிய பிளக்குகள் (Plugs) மற்ற சீன சாக்கெட்டுகளுடன் (Sockets) பொருந்துமாறு ஒரு புதிய மின்பொருள் வசதியை உருவாக்கி, வந்தவர்களுக்கு மிகப் பெரிய வசதி வாய்ப்பை ஏற்பாடும் செய்தனர்!
சிறிய விஷயம் - பெரிய மகிழ்ச்சியைத் தருவது அல்லவா?
அது போலவே மற்றொன்று, இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் அளிக்கப்பட்டு வந்த மெடல்கள், பழைய முறையிலே அமைக்கப்படுவதற்குப் பதிலாக பழைய முறையில், கூயனந என்ற ஒளியூட்டும் (சீனாவில் இது மிகவும் பிரபலமான கைத் தொழிலும்கூட) வகையை இணைத்து அதிக பிரகாசமான தோற்றத்தை அளிக் கும்படி புதுமையை இணைத்து விட்டார்கள்!
இதன்படி தங்க, வெள்ளை ஜேட் மெடல்கள் வெற்றியாளருக்கு, வெள்ளி, மஞ்சள் ஜேட் இரண்டாம் இடத்தவர் களுக்கு வெண்கலம், பச்சை ஜேட் மூன்றாம் இடத்தவர்களுக்கு என்று மாற்றத்தைப் புகுத்தி, அழகுக்கு அணி செய்தனர்!
வெற்றி ஒளி வீசியது!
இப்படி புதியன புகுத்தல், அனைத்து மக்களுக்கும் இளைய தலைமுறையிலும் செய்யப்பட வேண்டியது மிகவும் தேவை! எண்ணுக! இறங்குக செயலில்!!