கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிரிப்பு வாழ்க்கையின் மிகமிக முக்கியமான தேவைகளில் ஒன்று. நகைச் சுவை அரசர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் மனிதனுக்கு மட்டுமே உரிய தனி அம்சம் இந்தச் சிரிப்பு என்று கூறி, ஒரு பாட்டில் சிரிப்பில் எத்தனை வகைச் சிரிப்புகள் - சங்கீதச் சிரிப்பிலிருந்து ஆணவச் சிரிப்பு வரை அடுக்கி அடுக்கிக் காட்டி நம்மைச் சிரித்து, சிந்திக்க வைப்பார்! பொங்கல் புத்தாண்டு தொடக்கத்தை நமது பெரியார் திடலில் கோலாகலமாகக் கொண்டாடியபோது, இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் (17.1.2012) சிரிக்க வைக்கும் ஆற்றல் படைத்த அருங்கலைஞர்கள் திருவாளர்கள் திண்டுக்கல் சரவணன், ஏரல்ராமன் ரோபோ சங்கர், தஞ்சை சுட்டி அரவிந்த் ஆகியோர் ஆவர்.

தந்த நகைச் சுவைகளைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தது அரங்கமே!  எனது அருகில் அமர்ந் திருந்த நிதித்துறை   அறிஞர் ராஜரத் தினம், பிரபல தொழிலதிபர் அபிராமி ராமநாதன், மற்றும் சிறு குழந்தைகள் முதல் மகளிர் வரை நாங்கள் அனைவருமே விடாமல் சுமார் 1 மணி நேரம் சிரிப்புக் கடலில் நீந்தி நீந்தி மகிழ்ந்து கரை யேறினோம்!  அடிக்கடி இப்படி வாய்ப்புக்  கிடைத்தால் மருத்துவர்களிடம்  போக வேண்டிய அவசியமே நமக்கு வராது! வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது வெறும் வாய்மொழி மாத்திரம் அல்ல; அனுபவங்களின் முத் திரையாகும்! யோகக் கலையில் கூட, இந்த நகைச் சுவை - சிரிப்புக்கு இடம் உண்டு. ஏதோ தியானம், மூச்சுப் பயிற்சி,  ஆசனங்கள் தான் யோகம் என்று நினைத்துக் கொண்டிராதீர்கள்! சிரிப்பு - ரத்த ஓட்டத்தை பலமாக்கி சீராக்குகிறது. அதனால் செரிமானம் ஒழுங்குற அமையவும் அது வாய்ப்பை ஏற்படுத்துகிறது!  நுரையீரல் (Lungs) நோய்கள் ஏற்படா வண்ணம் கரியமில வாயுவை வெளியேற்றப் பெரிதும் உதவு கிறது! குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர், இந்த வாயுத் தொல்லை மிகப் பெரிய தொல்லையாகும்! களைப்பு, சலித்துப் போய் சங்கடத் துடன் உள்ள நிலை, தனிமை, உடல்வலி, இவற்றை சிரிப்புப் போக்கி மனிதர்களை உற்சாகப்படுத்தும் ஊக்க மாத்திரை யாகவும் ஆகிறது சிரிப்பு!

ஒரு பர்ஷிய டாக்டர் தனது நோயாளி களை சிரிக்க வைத்தே குணப்படுத்தும் முறையை பெரிதும் கையாளுகிறார். திருமதி டவுட் பையர்  (Mrs. Dought Fire)  என்ற ஆங்கிலத் திரைப்பட நடிகர் ஒரு ஆங்கில டாக்டராகி இதன்படியே சிரித்து மகிழ வைத்து நோயாளிகளைக் குணப் படுத்தும் திரைப்படமும் எடுக்கப்பட் டுள்ளது. (தமிழில் அதனைத் தழுவி  கலைஞானி கமலஹாசன் அவர்கள் கூட ஒரு திரைப்படம் எடுத்துள்ளார்.)

அந்த பர்ஷிய டாக்டர் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தனது நோயாளிகளை ஒரு இடத்தில் கூட்டி வைத்து, நகைச்சுவை துணுக்குகளைக் கேட்கச் செய்து,  அவர்களைக் குணப் படுத்த சிரிப்பு வைத்தியம் செய்கிறாராம்! அறிவியல் அறிஞர்கள் கூட சிரிப்பு இன்றி உலக வாழ்க்கையின் உன்னத உச்சி வேறு ஏதும் இல்லை என்று கூறுகிறார்கள்! நோயாளி சிரிக்காமலேயே இருந்தால் அவர் ஒரு நிரந்தர நோயாளி ஆகி விடுகிறாராம்!  சிரிக்காத மனிதர்கள் நோயாளிகளாக ஆகிவிடும் ஆபத்தும் உண்டு! கலகலப்பான சிரிப்பு, உடலின் பல்வேறு தசைகள், ஹார்மோன்கள், எண்டாக்ஃபின்ஸ் இவை குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பதனால் அவைகளின் ஆற்றலைப் பெருக்கி நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்குள் செலுத்தும் அருமை யான ஊசி மருந்தாகிறது சிரிப்பு! என்ன கலகலப்பாக சிரிப்பீர்களா?



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh