ஆசிரியர் அறிக்கை

கடலூரில் பிரபல வணிகரும், பெரியார் பற்றாளரும், பெரியார் பெருந் தொண்டருமான மறைந்த மானமிகு எஸ்.எஸ். சுப்பராயன் அவர்களின் வாழ்விணையர் பெரு மதிப்பிற்குரிய மானமிகு திருமதி. ராஜ ராஜேஸ்வரி சுப்பராயன் அவர்கள் (வயது 87) சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப் பட்டு, நேற்று (16.1.2018) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும் துயரமும் அடைந்தோம்.

அவ்விரு இணையர்களும், தீவிர சுயமரியாதை கொள்கையாளர்கள். அய்யா எஸ்.எஸ்.எஸ். அவர்களுக்கு மிகப்பெரிய துணையாகத் திகழ்ந்த அம்மையார் ராஜ ராஜேஸ்வரி அவர்கள் தமது குடும்பத்தினை சிறப்புடன் நடத்தி, நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்று நிரூபணம் செய்தவர். அவரது மறைவால் வாடும் அவரது அன்புமகள் கல்பனா ரவி (லதா), அவரது வாழ்விணையர் எஸ்.ரவி, அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக் கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எம்மிடத்தில் அவர்கள் காட்டிய அன்பும் பாசமும் என்றும் மறக்கப்பட முடியாதவை!

சென்னை                                      கி.வீரமணி

17.1.2018                      தலைவர், திராவிடர் கழகம்

திருவாரூர் பெரியார் பற்றாளர்

அய்யா ஏ.கே.எம்.காசிநாதன் அவர்களுக்கு நமது வீரவணக்கம்!

வேதாரண்யம் பகுதியில் பிறந்து, தனது உழைப்பால் சிங்கப்பூர் தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்து, தனது சகோதரர்களை யெல்லாம் பிள்ளைகளைப் போல் ஆளாக்கி, திராவிடர் இயக் கத்திற்கும் பெரும் புரவலராகவும் திகழ்ந்து திருவாரூரில் தற்போது வாழ்ந்த மானமிகு அய்யா ஏ.கே.எம்.காசிநாதன் அவர்கள் நேற்று (16.1.2018) மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவரது மறைவு அவரது குடும்பத் திற்கு மட்டுமல்லாது திராவிடர் இயக்கத்திற்கும், ஊர் பொதுநல வாழ்விற்கும் கூட பெரும் இழப்பாகும்.

உடல்நலம்குன்றி திருச்சி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்ற போது சென்று நலம் விசாரித்து வந்தோம் நானும், எனது வாழ்விணையரும்.

அவரது சகோதரர்கள் அனைவரும் திராவிடர் இயக்க உணர்வாளர்கள்; ஈடுபாடு கொண்ட பகுத் தறிவாளர்கள்.

குறிப்பாக மா.மீனாட்சி சுந்தரம் அவர்களும், அவ ரது மூத்த சகோதரர்களும், மறைந்த ஜெகதீசன், சிங்கப் பூர் கவிஞர் மா.அன்பழகன் ஆகியோரும் நமது நெருங்கிய நண்பர்கள்.

அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

சென்னை                                      கி.வீரமணி

17.1.2018                    தலைவர், திராவிடர் கழகம்

 

அனைவருக்கும் அனைத்தும் கிட்டும்  பொங்கல் புத்தாண்டாக அமையட்டும்!

பொங்கல் - புத்தாண்டு வாழ்த்துகள்!

 

பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு மலரும் இந்நாளில் தேவையற்ற பழைமைகள் விடைபெறவும், வரவேண்டிய புதுமைகள் பொங்கவும், உழவர் மற்றும் அனைத்து மக்களும் ஜாதி, சமய, சச்சரவுகளின்றி, மனிதநேயம் பேண, சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கும் ஆண்டாக அமையட்டும்!

அனைவருக்கும் அனைத்தும் கிட்டும் பொங்கல் புத்தாண்டாக அமையட்டும்!

எல்லோருக்கும் இனிய நல்வாழ்த்துகள்!

கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.


சென்னை
13.1.2018

Banner
Banner