எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவாரூர் பெரியார் பற்றாளர்

அய்யா ஏ.கே.எம்.காசிநாதன் அவர்களுக்கு நமது வீரவணக்கம்!

வேதாரண்யம் பகுதியில் பிறந்து, தனது உழைப்பால் சிங்கப்பூர் தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்து, தனது சகோதரர்களை யெல்லாம் பிள்ளைகளைப் போல் ஆளாக்கி, திராவிடர் இயக் கத்திற்கும் பெரும் புரவலராகவும் திகழ்ந்து திருவாரூரில் தற்போது வாழ்ந்த மானமிகு அய்யா ஏ.கே.எம்.காசிநாதன் அவர்கள் நேற்று (16.1.2018) மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவரது மறைவு அவரது குடும்பத் திற்கு மட்டுமல்லாது திராவிடர் இயக்கத்திற்கும், ஊர் பொதுநல வாழ்விற்கும் கூட பெரும் இழப்பாகும்.

உடல்நலம்குன்றி திருச்சி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்ற போது சென்று நலம் விசாரித்து வந்தோம் நானும், எனது வாழ்விணையரும்.

அவரது சகோதரர்கள் அனைவரும் திராவிடர் இயக்க உணர்வாளர்கள்; ஈடுபாடு கொண்ட பகுத் தறிவாளர்கள்.

குறிப்பாக மா.மீனாட்சி சுந்தரம் அவர்களும், அவ ரது மூத்த சகோதரர்களும், மறைந்த ஜெகதீசன், சிங்கப் பூர் கவிஞர் மா.அன்பழகன் ஆகியோரும் நமது நெருங்கிய நண்பர்கள்.

அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

சென்னை                                      கி.வீரமணி

17.1.2018                    தலைவர், திராவிடர் கழகம்

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner