எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடலூரில் பிரபல வணிகரும், பெரியார் பற்றாளரும், பெரியார் பெருந் தொண்டருமான மறைந்த மானமிகு எஸ்.எஸ். சுப்பராயன் அவர்களின் வாழ்விணையர் பெரு மதிப்பிற்குரிய மானமிகு திருமதி. ராஜ ராஜேஸ்வரி சுப்பராயன் அவர்கள் (வயது 87) சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப் பட்டு, நேற்று (16.1.2018) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும் துயரமும் அடைந்தோம்.

அவ்விரு இணையர்களும், தீவிர சுயமரியாதை கொள்கையாளர்கள். அய்யா எஸ்.எஸ்.எஸ். அவர்களுக்கு மிகப்பெரிய துணையாகத் திகழ்ந்த அம்மையார் ராஜ ராஜேஸ்வரி அவர்கள் தமது குடும்பத்தினை சிறப்புடன் நடத்தி, நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்று நிரூபணம் செய்தவர். அவரது மறைவால் வாடும் அவரது அன்புமகள் கல்பனா ரவி (லதா), அவரது வாழ்விணையர் எஸ்.ரவி, அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக் கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எம்மிடத்தில் அவர்கள் காட்டிய அன்பும் பாசமும் என்றும் மறக்கப்பட முடியாதவை!

சென்னை                                      கி.வீரமணி

17.1.2018                      தலைவர், திராவிடர் கழகம்