எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலகம் போற்றும் வியத்தகு விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) அவர்கள் இன்று (14.3.2018) காலமானார் என்ற செய்தி அறிவியல் உலகத்திற்கும், அறிவு உலகத்தவர்களுக்கும் மிகவும் துன்பம் தரும் பெரும் செய்தியாகும்!

அவரது வாழ்வே பல விந்தைகளை உள்ளடக்கிய வாழ்க்கையாகும்!

சில மாதங்கள்கூட உயிருடன் இருக்கமாட்டார் என்று மருத்துவர்களால் கூறப்பட்ட அவரது வாழ்வு, இவ்வளவு காலம்வரை நீண்டதனால் மனித குலம், அறிவியல் ஆராய்ச்சித் துறை பெற்ற நன்மைகள் - சமூக நலன்கள் ஏராளம்! ஏராளம்!!

அத்துணை ஆபத்தான ‘விசித்திர' நோய் பாதிப் பினால் முடக்கப்பட்டு, சக்கர நாற்காலி வாழ்வினராகி, மணமுடித்து, குழந்தை பெற்ற வாழ்க்கையை வாழ்ந் தவர். அறிவியல் - மருத்துவவியலின் வியக்கத்தகுந்த வளர்ச்சியினால் கிடைத்த விழுமிய பயன் எத்த கையது என்பதை உலகுக்கு நீண்ட அவரது வாழ்வும், ஆயுளும் புகட்டின!

உலகம் என்பது படைக்கப்பட்டதல்ல என்ற அறிவியல் கருத்தின் அடிப்படையில் பரிணாம வளர்ச்சி மாற்றங்கள்மூலம் நிகழ்ந்ததன் விளைவு என்று எழுதிய அவர், முதலில் பெருவெடிப்பு (Big Bang) என்ற தத்துவத்தின் அடிப்படையில் உலகம் வளர்ந்து கிளைத்தது என்று கூறி,  பிறகு ‘கடவுள்' என்பதே கற்பனை என்பதை நான் முழுமையாக ஏற்பதோடு, கடவுள் நம்பிக்கை அறிவியலின் அடிப்படையில் ஆதாரமற்றது என்று தானும், மற்றொரு ஆய்வாளரும் இணைந்து எழுதிய ‘தி கிராண்ட் டிசைன்'  (The Grand Design)  என்ற நூலில் தெளிவாக எழுதினார்.

76 வயது வரை வாழ்ந்த அவரது வாழ்வு, எண் ணற்ற ஆய்வுகள் உலகுக்கும், எதிர்கால அறிவியல் தளத்திற்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்படக் கூடியவை; அவர் தனது பாரம்பரிய ஆய்வுச் செல் வங்களை விட்டுவிட்டு  (Legacy)  விடை பெற்றுள்ளார்.

அவருக்கு நமது வீர வணக்கம்!

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தின ருக்கும், அறிவியல் உலகக் குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

கி.வீரமணி
தலைவர் ,    திராவிடர் கழகம்.

சென்னை

14.3.2018

(Big Bang)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner