எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திராவிடர் கழக கோவை மாவட்ட  முன்னாள் செயலாளர், ப.க.முன்னாள் மாவட்ட பொருளாளர், பெரியார் பெருந் தொண்டர் தென்மொழி ஞானபண்டிதன் உடல் நலக்குறைவால்  12-4-2018 அன்று  பெங்களூருவில் உள்ள தனது மகள் இல்லத்தில், 88ஆம் வயதில்  காலமானார்.  அன்னாருக்கு அக்ரி சுப்பிரமணியம், இனியன் ஞானபண்டிதன் ஆகிய இரு மகன்களும்,  ஒரு மகளும் உள்ளனர். இவருடைய வாழ்விணையர் ராசாமணி கழகப் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். கோவை அனுப்பர் பாளையம், செல்வபுரம் ஆகிய பகுதிகளில் அரசுப் பள்ளிகளில்  தலைமையாசிரியராக பணியாற்றிய போது  ஏராளமான மாணவ, மாணவியர்களை, பெரியாரின் கொள்கையின் பக்கம் கொண்டு வந்த பெருமை ஞானபண்டிதன் அவர்களுக்கு உண்டு. தமிழறிஞர் மறைமலை அடிகளின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு அவருடைய மகன் மறை. திருஞாவுக்கரசு அவர்களின் வேண்டுதல்படி,  தன் பெயரை தென்மொழி ஞானபண்டிதன்  என மாற்றிக் கொண்டவர்.தமது இறுதிக் காலம் வரையில் பெரியார் கொள்கையின் பற்றாளராகவும், பரப்புரையாளராகவும், எழுச்சி மிக்க கவிஞராகவும் பணியாற்றியவர்.  அவர்களின் இழப்பு திராவிடர்  கழகத்திற்கு பேரிழப்பாகும். இறுதி நிகழ்ச்சி நேற்று மாலை பெங்களூருவில்  நடைபெற்றது.

தமிழர் தலைவர் இரங்கல்

தென்மொழி ஞானபண்டிதன் அவர்கள் தலைசிறந்த பெரியாரியலாளர், சிறந்த கவிஞர், கோவை பகுதியில் நமக்குக் கிடைத்த செல்வம். அவரின் மறைவால் வருந்தும் குடும்பத் தினருக்கும், கழகத்தினருக்கும், அன்பர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை

13.4.2018

Comments  

 
#1 S.Prince Ennares Periyar 2018-04-13 23:56
வீரவணக்கம்! வீரவணக்கம்!!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner