எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெரியார் பன்னாட்டு அமைப்பின் நிறுவன இயக்குநர்களில் ஒருவரான மானமிகு டாக்டர் இலக்குவன் தமிழ் அவர்களின் அன்னையார் திருமதி சரஸ்வதி (வயது 77) அவர்கள் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயருறுகிறோம். (13.4.2018 அன்று மறைந்தார்).

அம்மையார் அவர்களுக்கு ஆறு பிள்ளைகள்; (மூன்று ஆண்கள், மூன்று பெண்கள்) டாக்டர் இலக்குவன் அவர்கள் மூத்தவர். எல்லோரும் நன்றாக வளர்க்கப் பட்டு, கல்வி அறிவும் கொடுக்கப்பட்டு, நல்ல நிலையில் இன்று உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பணிபுரிகின்றனர் என்றால் அதற்கு முழு முதற் காரணம் இந்த தாயின் பாசமிகு தொண்டும், கண்காணிப்பும்தான்.

அவர்கள் சில காலம் உடல் நலிவுற்ற நிலையில்கூட தோழர் இலக்குவன் தமிழ் உட்பட மற்ற அனைவரும் அவரை நன்கு கவனித்து வந்தது நல்ல செய்தியாகும்.

அவரது மறைவால் துன்பப்படும் அவரது பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் நமது இயக்கத்தின் சார்பில் ஆறுதலைக் கூறுவதோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவகங்கை மண்டலத் தலைவர் தோழர் காரைக்குடி சாமி. திராவிடமணியும், கழகப் பொறுப்பாளர்களும் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வர்.

செய்தி அறிந்தவுடனே அமெரிக்காவிலிருந்த டாக்டர் இலக்குவன் தமிழ் அவர்களுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இயக்கம், குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டார் கழகத் தலைவர்.

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.4.2018