எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அருமைச்  சகோதரர் வைகோ அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக அவர் வாகன சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், குளத்தூரில் நேற்று (ஏப்.17) அவர் பேசிக் கொண்டிருந்த போது, அவரை நோக்கி சோடாபாட்டில்கள் வீசப்பட்டுள்ளன. சில நாள்களுக்கு முன் பும், தமிழ்த் தேசியவாதிகள்னி என்று தங் களைச் சொல்லிக் கொள்பவர்கள் மதுரை யருகே அவரைத் தாக்க முயன்றுள்ளனர்.

தொடர்ந்து அவர்மீது குறி வைப்ப வர்கள் யார்? இதன் பின்னணி என்ன? தமிழ்நாடு காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? இவற்றுக்கு யார் காரணமானாலும், இந்தக் கோழைத்தன மான வன்முறையைக் கண்டிக்கிறோம்.

கழகக் கூட்டத்தில் வன்முறை

கடந்த 15 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா காவல்துறை அனுமதி பெற்று திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றபோது, 20 ஆர்.எஸ்.எஸ். காலிகள் கூட்டத்தில் புகுந்து, நாற்காலிகளை உடைத்துக் கூட் டத்தை நடத்தவிடாமல் தடுத்துள்ளனர். காவல்துறையினர் மவுன சாட்சியாக இருந்திருக்கின்றனர்.

அனுமதி கொடுத்த காவல்துறையினருக்குக் கூட்டத்திற்குப் பாதுகாப்புக் கொடுக்கும் கடமை கிடையாதா?

செய்தியைக் கேள்விப்பட்டு, அந்தப் பகுதிக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்களும், பொதுமக்களும் காலித்தனத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யவேண்டும் என்று குரல் கொடுத் துள்ளனர். இதில் என்ன கொடுமை என்றால், காலித்தனத்தில் ஈடுபட்ட இரு வரையும், தட்டிக் கேட்ட விடுதலை சிறுத்தைகள் தோழர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியின் - காவல்துறை யின் இலட்சணம் இதுதானா?

காவல்துறையை நம்பிப் பயன் இல்லை என்ற எண்ணம் ஏற்படுவது நாட்டுக்கு நல்லதல்ல!

 

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.