எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெய்ஜிங், மார்ச் 19 வட கொரியாவால் பிராந்திய அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள அமெரிக்காவும், சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

இதுகுறித்து சீனா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன், தலைநகர் பெய்ஜிங்கில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயுடன் நேற்று (18.3.2017) நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

வட கொரியாவின் சட்டவிரோத அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சியைத் தடுப்பதற்காக கடந்த 20 ஆண்டுகளாக நாம் மேற்கொண்டு வரும் முயற்சி தோல்வியையே கண்டு வருகிறது. வட கொரியாவை வழிக்குக் கொண்டுவர எங்களிடமுள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

வட கொரியாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் தொடர்ந்து எங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட சீனா ஒப்புக்கொண்டுள்ளது என்றார் அவர்.

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கூறுகையில், “வட கொரியா அணு ஆயுதம் தயாரிக்கும் தனது முயற்சியைக் கைவிடச் செய்வதற்கான வழிமுறையைக் காண்பதில் அமெரிக்காவும், சீனாவும் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட சுட்டுரை (டுவிட்டர்) பதிவில், “அமெரிக்காவிடம் வட கொரியா தொடர்ந்து வாலாட்டி வருகிறது.ஆனால், அதைத் தடுக்க சீனா குறிப்பிடும்படி எதுவும் செய்வதில்லை” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner