எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், மார்ச் 20- அமெரிக்க அதிபர் தேர் தலில் வெற்றிபெற்று பொறுப்பேற்று கொண்ட டொனால்ட் டிரம்ப்பை பல நாட்டு தலைவர்கள் வரிசையாக சந்தித்து வருகின்றனர். அவ்வகை யில், வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி எகிப்து அதிபர் ஃபட்டா அல் சிசி - டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை உறுதிபடுத்தியுள்ளது.

எகிப்து நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் முஹம்மது முர்சி கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். அதன் பின்னர் எகிப்து அதிபராக பொறுப்பேற்று கொண்ட ஃபட்டா அல் சிசிக்கும் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமாவுக்கும் இடையில் சமீபகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.

இந்நிலையில், ஒபாமாவின் கொள்கைகளுக்கு மாற்றான பாதையில் அமெரிக்க அரசை வழிநடத்திவரும் டொனால்ட் டிரம்ப் - ஃபட்டா அல் சிசி இடையே அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner