எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டோக்கியோ, ஆக.7 ஜப்பான் நாட்டின் தென் மேற்குப் பகுதியை நொரு புயல் நெருங்கியுள்ளது. இந்த புயல் காரணமாக அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக நிலச்சரிவு, வெள்ளம், பலத்த மழை, உயரமான அலைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஜப்பான் வானிலை ஆராய்ச்சி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று (6.8.2017) இந்தப் புயல், குயுசு தீவுக்கு எதிரே மய்யம் கொண் டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. யகுஷிமா நகரத்தில் நேற்று முன்தினம் 60 வயது கடந்த முதியவர் ஒருவர், கடுமையான சூறாவளி காற்றால் கீழே தள்ளப்பட்டு, தலையில் அடிபட்டு உயிரிழந்தார் என தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பு கூறியது.

தானேகாஷிமா தீவில் 80 வயதான ஒருவர், கடலோரம் நிறுத்தி யிருந்த தனது படகை பார்க்கச் சென்றிருந்தபோது, அலைகளால் தண் ணீருக்குள் அடித்துச் செல்லப்பட்டு விட்டார். அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இதை அதிகாரிகள் தெரி வித்தனர். இந்தப் புயல் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து வட கிழக்கு பகுதிக்கு நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்தப் புயல், இன்று (திங்கட்கிழமை) ஷிகோகு தீவுக்கு பலத்த மழையைக் கொண்டு வரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.