எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், ஆக.9 சிகரெட் புகைத்த பிறகு பஞ் சுடன் கூடிய கழிவுத் துண்டுகளை கீழே வீசி விடுகின்றனர். அவை கண்ட இடங்களில் குப்பைகளாக குவிந்து கிடக்கின்றன. அவ்வாறு தூக்கி எறியப்படும் கழிவு குப்பையை சாலை போட பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சாலை போடுவதற்கு கடுமையான கலவைப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. அது ஒட்டிக் கொள்ளும் தன்மையுடையது. எளிதில் தீப்பிடிக்க கூடியது.

அதனுடன், பாராபின் வேக்ஸ் எனப்படும் மெழுகு போன்ற ஒரு பொருள் மற்றும் ரசாயன பொருளுடன் சிகரெட் கழிவு துண்டுகளும் சேர்த்து கலவை தயாரிக்கப்படுகிறது. இந்த சிகரெட் கழிவுத் துண்டு சாலை போட தயாரிக் கும் கலவையை கசிவதில் இருந்து தடுத்து காக்கிறது.

இதனால் போடப்படும் சாலை பலம் வாய்ந்ததாக இருக் கும். பொதுவாக நகர்ப்புறங்களில் சாலைகளில் இருந்து தகதகவென கடுமையான வெப்பம் வெளியாகும். ஆனால் சிகரெட் கழிவுத் துண்டு பயன்படுத்து வதன்மூலம் அத்த கைய வெப்பம் வெளியேறாமல் தடுக் கப்படும்.

இந்தத் தகவலை அறிவியல் இதழில் விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர். சிகரெட் கழிவுத் துண்டுகள்மூலம் உருவாக்கப்படும் இக்கலவை மூலம் மிக குறைந்த எடையிலான பொருள்கள் தயாரிக்க முடியும் என்றும் ஆலோ சனை வழங்கியுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner