எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கென்யாவில் கலவரம்: காவல்துறையினர் துப்பாக்கி சூடு

நைரோபி, ஆக.11 கென்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் கென் யாட்டா வெற்றி பெறுவது உறுதி யாகிவிட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கென்யா அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. துவக்கத்தில் இருந்தே அதிபர் கென்யாட்டா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றதால், அவர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இதனால் ஒடிங்காவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒடிங்காவின் கோட்டையாக கருதப்படும் கிசுமு நகரில் ஏராளமானோர் திரண்டு முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒடிங்கா இல்லையென்றால் அமைதி இல்லை என்று முழக்கம் எழுப்பினர். அவர்களை காவல்துறையினர் கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டக் காரர்கள் கலைந்து செல்லாமல் கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். எனவே, அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கு கலவரம் வெடித்தது. இதேபோல் நைரோபி குடிசைப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

 


 

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி விலகல்

கொழும்பு, ஆக.11 இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ரவி கருணநாயக வியாழக்கிழமை தனது பதவியிலிருந்து விலகினார்.

அரசு கடன் பத்திரம் விற்பனை முறைகேட்டில் குற்றச்சாட்டுக்கு உள்ளான தொழிலதிபருடன் ரவி கருணநாய கவை தொடர்புபடுத்திச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார். பதவி விலகும் அறிவிப்பை இலங்கை நாடாளுமன்றத்தில் வெளியிட்டு அவர் கூறியதாவது:

ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புபடுத்திய குற்ற உணர்வின் பேரில் நான் பதவி விலகவில்லை. என் மீதான பொய்யான குற்றச்சாட்டினால் அரசுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தால் விலகுகிறேன். குற்றச்சாட்டுகளைப் பொய் என்று நான் நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். எனது முடிவு எனக்குப் பெருமையளிக்கிறது என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner