எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒகடுகுவ், ஆக.15  ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் உள்ள உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு பயங்கர வாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதல் நிகழ்த்திய இரு பயங்கர வாதிகள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தலைநகர் ஒகடுகுவில் வெளிநாட்டவர் உணவருந்த வரும் பிரபல 'இஸ்தான்புல்' உணவகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இது தொடர்பாக அந்த நாட்டு செய்தித் துறை அமைச்சர் ரெமீஸ் தண்ட்ஜினு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஞாயிற்றுக்கிழமை இரவு வெளிநாட் டவர் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் வருகையால் உணவகம் நிரம்பி வழிந்தது. இரவு சுமார் 9 மணி அளவில் (உள்ளூர் நேரம்) அந்த உணவகத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு பயங்கரவாதிகள் உணவருந்திக் கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். அதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சப்தம் கேட் டதும் அப்பகுதியில் காவலுக்கு இருந்த காவல்துறையினரால் அந்த இடத் துக்கு விரைந்தனர். இதையடுத்து, பயங்கர வாதிகள் தங்கள் ஆயுதங்களைக் காட்டி உணவகத்திலிருந்தவர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர். அவர்களில் சிலரைப் பின்னர் விடுவித்தனர்.

அந்த உணவகம் அமைந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பயங்கரவாதிகள் வெளியே தப்பிச் செல்ல முடியாதபடி காவல்துறையினர் உணவகத்தைச் சூழ்ந்தனர்.

இந்நிலையில், அதிகாலையில் உண வகத்துக்குள் புகுந்த காவல்துறையினர் அதிரடித் தாக்குதல் நிகழ்த்தி இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். அவர்களிடமிருந்த தானியங்கித் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இது பயங்கரவாதத் தாக்குதல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் கள் எந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இதுவரை எந்த வொரு அமைப்பும் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை என்றார் அவர்.

பலியான 18 பேர் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். துருக்கியைச் சேர்ந்த ஒரு நபர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அரசு தெரிவித்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner