எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உறுப்பினர்கள் பதவி விலகல் எதிரொலி:

தொழில் ஆலோசனைக் குழுக்களைக் கலைத்தார் டிரம்ப்

வாஷிங்டன், ஆக.18 அமெரிக்காவில் நடைபெற்ற இனவாதத் தாக்குதலை அதிபர் டிரம்ப் போதிய அளவு கண்டிக்கவில்லை என்று கூறி அவரது தொழில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சிலர் பதவி விலகியதையடுத்து, அந்தக் குழுக்களை கலைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப் பதாவது:

அமெரிக்காவில் வெள்ளை இனத்த வர்களின் உரிமையை வலியுறுத்தி, வர் ஜீனியா மாகாணம், சார்லட்ஸ்வில் நகரில் கடந்த வாரம் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தின.

வர்ஜீனியா மாகாண அரசு விதித்த தடையையும் மீறி நடத்தப்பட்ட இந்த ஊர்வலங்களுக்கு எதிராக, நடு நிலைவாதிகளும் போட்டி ஊர்வலங்களை நடத்தினர்.

இந்தச் சூழலில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் கும்பல் மீது இனவாதி ஒருவர் கடந்த 12-ஆம் தேதி காரை வேகமாக ஓட்டி வந்து மோதச் செய்ததில் ஒரு பெண் உயிரி ழந்தார்; பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிடுகையில் இனவாதிகள், நடுநிலைவாதிகள் ஆகிய இரு தரப்பினருமே வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினார்.

இவ்வாறு கூறுவதன்மூலம் இன வாதிகளுக்கு டிரம்ப் ஆதரவு அளிப்பதாகக் கூறி, அவரது தொழில் ஆலோசனைக் குழுக்களைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலர் பதவி விலகினர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெப்சி நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி இந்திரா நூயி, ஜெனரல் மோட்டார்ஸ், ஜேபிமோர்கன், வால்மார்ட் போன்ற முக்கிய நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகள் உள்ளிட்ட பலர், ஆலோசனைக் குழுவிலிருந்து விலகினர்.

இதையடுத்து, இரு ஆலோசனைக் குழுக்களை கலைப்பதாக சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் டிரம்ப் அறிவித்துள்ளார்.

''ஆலோசனைக் குழுக்களில் நீடிக்கும்படி தொழிலதிபர்களை வலியுறுத்துவதைவிட, அந்தக் குழுக்களையே கலைத்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளேன்'' என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

  

ஹாங்காங்: ஜனநாயக இயக்கத் தலைவருக்கு சிறை

ஹாங்காய், ஆக.18 ஹாங் காங்கில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனநாயக ஆதரவுப் போராட்டங்கள் தொடர் பாக, அந்த போராட்ட இயக்கத்தின் தலைவர் ஜோஷுவா வாங்குக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

'குடை இயக்கம்' என்றழைக்கப்பட்ட அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய நதான் லா, அலெக்ஸ் சோ ஆகியோருக்கும் முறையே எட்டு மாதங்கள் மற்றும் 7 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தன்னாட்சிப் பகுதியான ஹாங்காங்கில் சீனா தனது பிடியை அதிகரிப்பதையே இந்தத் தீர்ப்பு காட்டுவதாக பார்வையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner