எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சனா, ஆக.20 யேமன் உள்நாட்டுப் போரில் கடந்த ஆண்டு பலியான குழந்தைகள், சிறார்களில் 51 சதவீதத்தினர் சவூதி கூட்டுப் படையினரின் வான்வழித் தாக்குதலுக்கு இரையாகினர் என்று அய்.நா. பொதுச்செயலாளர் சார்பிலான அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கை அதி காரபூர்வமாக வெளி யிடப்படாத நிலையில், இதனைக் கசியவிட்டது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்ப தாவது:

ஏமன் உள்நாட்டுப் போரில் கடந்த 2016-ஆம் ஆண்டு 1,340 சிறார்கள் பலியாகினர் என்பது அய்.நா.வின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் 683 பேர் - சுமார் 51 சதவீதத்தினர் - சவூதி கூட்டுப் படையினரின் தாக்குதலில் உயிரிழந்தனர். பள்ளிகள், மருத்துவமனை கட்டடங்கள் மீது வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. கடந்த ஆண்டு அது போன்ற 52 தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதில் 38 தாக்குதல்கள் சவூதி கூட்டுப் படையினர் நடத்தியவையாகும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற அதிபர் மன்சூர் ஹாதியின் அரசுக்கு எதிராக ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் சண்டையிட்டு வருகின்றனர். ஒரு கட்டத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்திருந்த கிளர்ச்சி யாளர்கள் தற்போது தென் பகுதியிலிருந்து விரட்டப்பட்டு விட்டனர். எனினும் ஏமன் தலைநகர் சனாவும், அந்த நாட்டின் வட பகுதியில் பெரும்பாலான இடங்களும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுத உதவி அளித்து வருகிறது.

அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சவூதி தலைமையிலான 10 நாடுகளின் கூட்டுப் படை கடந்த 2015- ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வான்வழித் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் தென் பகுதியில் கணிசமான இடங்களை இழந்துள்ள போதிலும், அப்பாவிப் பொதுமக்களும் பலியாகி வருகின்றனர்.

சென்ற 2014 முதல் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இது வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக அய்.நா.வின் மற்றோர் அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2015- ஆம் ஆண்டுக்கான ஏமன் உள்நாட்டுப் போர் அறிக்கையில் 1,953 சிறார்கள் பலியானதாக அய்.நா. கூறியது. தங்களை கடுமையாக விமர்சித்த அந்த அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று சவூதி கூறியது. அப்படித் திரும்பப் பெறாவிட்டால், அய்.நா.வுக்கு நிதி அளிப்பதை நிறுத்திவிடுவோம் என்று சவூதி மிரட்டியது. எனினும், அப் போதைய அய்.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் அறிக்கையைத் திரும்பப் பெற மறுத்துவிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner