எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சீன விமானம் தாங்கிக் கப்பல்: விரைவில் சோதனை

பெய்ஜிங், ஆக.24 சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலான 'டைப் 001-ஏ', விரைவில் சோதனை முறையில் இயக்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து சீனா ஷிப் பில்டிங் இண்டஸ்ட்ரி கார்ப் பரேசனின் தலைவர் ஹு வென்மிங் கூறியதாவது:

புதிய விமானம் தாங்கிக் கப்பலை வெள்ளோட்டத்துக்கு விடு வதற்கான பூர்வாங்கப் பணிகள் அனைத்தையும், குறித்த காலத்துக்கு முன்னரே எங்களது பணியாளர் குழு நிறைவு செய்துவிட்டது.

அந்த விவரங்களை அரசிடம் சமர்ப்பிள்ளோம். எனவே, கூடிய விரைவில் அந்த விமானம் தாங்கிக் கப்பலை சீன கடற்படை சோதனை முறையில் இயக்கத் தொடங்கும் என்றார் அவர்.

'லியோனிங்' என்ற ஒரு விமானம் தாங்கிக் கப்பலை இயக்கி வரும் சீனக் கடற்படை, உள்நாட்டிலேயே தயா ரிக்கப்பட்ட இந்த முதல் கப்பலை கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தியது.


பாகிஸ்தானில் மழை வெள்ளத்துக்கு 24 பேர் பலி

கராச்சி, ஆக.24 பாகிஸ்தானின் கராச்சி நகரில், கடந்த 2 நாள்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக 24 பேர் உயிரிழந்தனர்.

அந்த நாட்டின் தெற்கே அமைந்துள்ள துறைமுக நகரமான கராச்சியில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 2 கோடி பேர் வசிக்கும் அந்த நகரில், செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த வெள்ளத்தில் மூழ்கியும், மின் சாரம் தாக்கியும், வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தும் 24 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கராச்சி நகரில் தொடர்ந்து கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.