எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், ஆக.28 பக்கிங்காம்ஷரில் உள்ள நியூபோர்ட் பேக்னல்லில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் மினி பேருந்து சனிக்கிழமை சென்றது. அப்போது மினி பேருந்தின் மீது 2 பெரிய லாரிகள் மோதின. இதில் அந்த 2 லாரிகளுக்கும் இடையே சிக்கி, மினி பேருந்து உருக்குலைந்தது.

இந்த விபத்தில், மினி பேருந்தில் பயணித்த 8 பேர் பலியானார்கள். அவர் களில் 2 பேர் பெண்கள். மேலும் 4 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 2 லாரிகளின் ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிவந்து மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கிய மினி பேருந்தின் ஓட்டுநர் கேரளத்தைச் சேர்ந்தவர் ஆவார். பிரிட்டனில் கடந்த 15 ஆண்டுகளாக அவர் வசித்து வருகிறார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்....

விபத்தில் உயிரிழந்த பன்னீர்செல்வம் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் மண்டபம் தெருவைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தனியார் கல்லூரி ஊழியர். இவரது மனைவி வள்ளி (56). இவர்களின் மகன் மனோரஞ்சன் (34), தனது மனைவி சங்கீதாவுடன் (30) லண்டனில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 18- ஆம் தேதி தனது மனைவியுடன் பன்னீர்செல்வம், காஞ்சிபுரத்தில் இருந்து புதுடில்லி சென்று, அங்கிருந்து தனது தங்கை தமிழ்மணி (50), அவரது கணவர் அருள்செல்வம் ஆகியோருடன் லண்டனுக்குச் சென்றபோதுதான் இந்த விபத்து ஏற்பட்டது.

இதில், பன்னீர்செல்வம், அருள் செல்வம், தமிழ்மணி ஆகியோர் நிகழ் விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கும்பகோணத்தைச் சேர்ந்த நால்வரும்  உயிரிழந்தனர். வள்ளி, மனோரஞ்சன், சங்கீதா ஆகியோர் காய மடைந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 பேரில், 5 வயது சிறுமி, பெண் உள்ளிட்ட 3 பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இன்னொரு பெண்ணும் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் இறந்த பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் இந்திய தூதரகம் மூலம் இங்கிலாந்து தூதரகத்தைத் தொடர்பு கொண்டு உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட் டுள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner