எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு கென்யா முழுத் தடை

கென்யா, ஆக.30 கென்யாவில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு முற்றிலுமாக அந்நாட்டு அரசு அதிரடியாக தடைவித்துள்ளது.

இதுகுறித்து கென்யா அரசு தெரிவித்துள்ளதாவது:

பிளாஸ்டிக் பைகள் சுற்றுப்புறச் சூழலுக்கு பெரும் தீங்கு விளை விப்பதாக உள்ளது. இவை மக்கு வது கிடையாது என்பதுடன் கால் வாய்களிலும் அடைப்புகளை ஏற் படுத்தி பல்வேறு பிரச்சினைகள் உருவாக காரணமாகிறது. எனவே, இதனை உள்நாட்டில் தயாரிக்கவும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. இதனை மீறுவோருக்கு 38,000 டாலர் (சுமார் ரூ.24.70 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும் என்று கென்ய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த தடை வேலை வாய்ப்புகளை பாதிக்கும் என பிளாஸ்டிக் பை உற்பத்தியாளர்கள் தெரி வித்துள்ளனர்.

கென்யாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் மட்டும் ஆண் டுக்கு 10 கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக அய்.நா. வின் சுற்றுச்சூழல் அமைப்பு தெரி வித்துள்ளது. கேமரூன், கினியா-பிசாவ், மாலி, தான்சானியா, உகாண்டா, எத் தியோப்பியா, மோரிடேனியா, மாலவி ஆகிய நாடுகளிலும் பிளாஸ்டிக் பைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு அச்சுறுத்தல்

லண்டன், ஆக.30 பிரிட்டன் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தேம்ஸ் நதி வழியாக பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிய வந்ததையடுத்து, ஆயுதமேந்திய வீரர்கள் படகுகளில் ரோந்து வரத் தொடங்கியுள்ளனர்.

அண்மையில் நாடாளுமன்றப் பாதுகாப்புக்கான ரகசிய ஒத்திகை நடத்தப்பட்டது. இரவு நேரத்தில் படகு கள்மூலம் வந்த பயங்கரவாதிகள் நாடா ளுமன்றத்தைத் தாக்குவதாக நடைபெற்ற ஒத்திகையின்போது, சுமார் 100 எம்.பி.க்கள் "தாக்குதலுக்கு' உள்ளாகினர்.

இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருப்பது தெரிய வந்தது என்று ‘தி டைம்ஸ்' நாளிதழ் வெளியிட்ட செய்தியில் தெரி வித்துள்ளது. இதையடுத்து, தேம்ஸ் நதியில் ஆயுதமேந்திய காவலர்கள் ரோந்து வருவதை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம், நாடாளுமன்ற வளாக முகப்பில் காரை வேகமாக ஓட்டி வந்து பாதசாரிகள் மீது மோதிய நபர், பின்னர் காவலர்களைக் கத்தியால் தாக் கினார். காவலர்கள் அவரை சுட்டுக் கொன்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner