எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சோமாலியாவில் ராணுவதளம்மீது தாக்குதல் - படை வீரர்கள் 26 பேர் பலி

நைரோபி, செப்.4 சோமாலியாவில் ராணுவதளம் மீது அல் ஷபாப் பயங் கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் படை வீரர்கள் 26 பேர் உயிரிழந்தனர்.

சோமாலியா நாட்டில் அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அங்கு பல கிராமங்களில் இவர்கள் மத அடிப்படையிலான சட் டத்தை அமல்படுத்தி உள்ளனர்.

2012ஆ-ம் ஆண்டு முதல் அல்கொய்தா இயக்கத்தின் துணை அமைப்பாக செயல்பட்டு வருகிற இந்த அமைப்பினை அமெரிக்காவும், இங்கிலாந்தும் தடை செய்துள்ளன.

இந்த அமைப்பை சேர்ந்த பயங்கர வாதிகள் சோமாலியா நாட்டின் தென் பகுதியில் உள்ள துறைமுக நகரான கிஸ் மாயு நகருக்கு அருகே அமைந்துள்ள ஜூபலாண்ட் ராணுவ தளத்தின்மீது நேற்று காலை திடீர் தாக்குதல் நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலால் படை வீரர்கள் திணறிப்போயினர். இந்த திடீர் தாக்குதலில் படை வீரர்கள் 26 பேர் உயிரி ழந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து உள்ளூர் மக்கள் கூறும்போது, பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்றது என்றனர்.

அல் ஷபாப் அமைப்பின் செய்தி தொடர்பாளர் அப்தியாசிஸ் அபு முசாப் ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசும்போது,  நாங்கள் ஜூபலாண்ட் ராணுவ தளத்தின்மீது அதிரடி தாக்குதல் நடத்தினோம். படை வீரர்கள் 26 பேரை கொன்று குவித்தோம். 2 கார்களை எரித் தோம். 3 கார்களை அங்கிருந்து கைப் பற்றினோம் என்று கூறினார்.

மேலும் அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் எடுத்துச் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.


 

நேபாளம்: வெள்ளத்தில் பலியானவர்களில்

19 பேர் மாணவர்கள் - அரசு தகவல்

காத்மாண்டு, செப்.4 நேபாளம் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியான வர்களில் 19 பேர் மாணவர்கள் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளம் நாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி பலர் பலியாகினர். சித்வான், மக்வான்பூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 500 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 19 மாணவர்கள் பலியாகி உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளி கட்டிடங்களில் தான் தங்க வைக்கப்பட் டுள்ளனர்.இதேபோல், இயற்கை பேரழி வால் தன்ஷுவா மாவட்டத்தில் உள்ள 26 பள்ளிகளில் சுமார் 6.6 மில்லியன் ரூபாய் அளவுக்கு சேதமடைந்துள்ளது என தெரிவித்துள்ளனர். இந்தாண்டில் இதுவரை 150 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்: