எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செவ்வாய்க் கிரகத்தில் குடியேறினால் நோய் எதிர்ப்பு சக்தி பறிபோகும்: விஞ்ஞானி தகவல்

மாஸ்கோ, செப்.4 செவ்வாய் கிரகத் தில் குடியேறினால் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும் என்று விஞ்ஞானி எப்ஜினி தெரிவித்துள்ளார்.

பூமியில் உள்ள அனைத்து நிலப்பரப்பு களையும் மனிதன் கண்டுபிடித்து குடி யேறி விட்டான். அடுத்து பூமியை போலவே தட்பவெப்ப நிலை நிலவும் செவ்வாய் கிரகத்தில் மனிதனால் வாழ முடியும் என்று விஞ்ஞானிகள் கூறு கிறார்கள்.

எனவே, மனிதனை செவ்வாய் கிரகத் தில் குடியேற வைக்க தீவிர ஆய்வுகள் நடந்து வருகின்றன.

ஆனால், செவ்வாய் கிரகத்தில் குடி யேறினால் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவன் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாக கூடும். அங்கு உயிர் வாழ்வது கடினம் என்று ரஷ்ய விஞ்ஞானி கூறுகிறார்.

மாஸ்கோவில் உள்ள இயற்பியல் தொழில்நுட்ப கல்வி மய்யத்தின் பேரா சிரியர் எவ்ஜினி நிகாலோங் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்றது போல் மனிதனின் உடல் அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த ஈர்ப்பு விசைக்கு தகுந்த மாதிரி நோய் எதிர்ப்பு சக்திகளும் உடலில் உருவாகின்றன.

ஆனால், செவ்வாய் கிரகத்தில் ஈர்ப்பு சக்தி வேறு மாதிரி இருக்கும். எனவே, மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி மறைந்து விடும். இதன் மூலம் பல்வேறு நோய்களை சந்திப்பான். அங்கு வாழ்வது கடினம்.

விண்வெளியில் ஈர்ப்பு சக்தி இல்லா மல் உள்ளது. விண்வெளி ஓடத்தில் 6 மாதம் வரை தங்கி இருந்த 18 ரஷ்ய விண்வெளி வீரர்களை ஆய்வு செய்த போது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருந்தது. சாதாரண சூழ்நிலை யில் கூட நோய் கிருமி தாக்குதலுக்கு ஆளானார்கள்.

இதே போல்தான் செவ்வாய் கிரகத் துக்கு மனிதன் சென்றாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இவ்வாறு அவர் கூறினார்.


புயல்-மழை பாதிப்பு: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்

10 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பு

ஹூஸ்டன், செப்.4 ஹார்வே புயல் மற்றும் பலத்த மழை காரணமாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 10 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கூடங் களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழைக்கு 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். 40 ஆயிரம் வீடுகளை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது. 1 லட்சத்து 85 ஆயிரத்து 149 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 ஆயிரம் பேர் தங்க இடம் இல்லாமல் முகாம்களில் உள்ளனர். பெரும்பாலான பள்ளிக்கூட வளாகம் முழுவதும் சகதியாக இருக்கிறது. பல பள்ளிக் கூடங்களில் வகுப்பறைகள் தண்ணீர் தேங்கி மிதக்கிறது.உள்ளது.

எனவே, 2 வார காலத்துக்கு பள்ளிக் கூடங்களை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சில பள்ளிக்கூடங்களை ஒரு மாதத்துக்கு மேல் மூட வேண்டிய நிலை மழை கடுமையாக பாதித்த பகுதிகளில் 10 லட்சம் மாணவர்கள் உள்ளனர். அவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மழையால் சுகாதார சீர் கேடுகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.