எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பேரிகை, 26  கிருட்டிணகிரி மாவட்டம் பேரிகையில் 24.11.2017 அன்று நீட் ஒழிப்பு கூட்டமைப்பு - ஓசூர் சார்பில் நீட் தேர்வால் பாதிப்படைந்த அரியலூர் அனிதாவிற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி பேரிகை திமுக ஒன்றிய செயலாளர் நாகேஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் மு.துக் காராம், மாவட்ட இணை செயலாளர் வனவேந்தன், திமுக ஓசூர் நகர செயலாளர் மாதேஸ் வரன், காங்கிரஸ் கட்சி ஒன்றிய தலைவர் பாஷா, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக தலைமை கழக பேச்சாளர் நவுசாத், முன்னால் பஞ்சாயத் தலைவர் நாராயணப்பா, திமுக வை சார்ந்த முனி கிருஷ்ணப்பா, சுக்கூர், இலியாஸ், ராஜப்பா, சீனப்பாகவுடு, அவை தலைவர் சீனப்பா, காதர்பேகு, ரமேஷ், ஜான்பாஷா, பொதுக்குழு உறுப் பினர் த.மு.மு.கழகம் சலீம், சூளகிரி ஒன்றிய செயலாளர், பேரிகை செயலாளர் முக்தீயார், ஜீயதுள்ளா, பொருளாளர் த.மு. மு.கழகம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

‘நீட்’ தேர்வு எதிர்ப்பு விளக்க ஆண்டறிக்கை பொது மக்களிடம் வழங்கப்பட்டது.