எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பியாங்யோங், ஜூன் 10- அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் வரும் 12-ஆம் தேதி சந்தித்து பேசுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடு களும் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் செண்டோசா ரிசார்ட்டில் இந்த சந்திப்பு நடக்கிறது. எனவே, சந்திப் புக்கு முன்னதாக கிம் நிர்ண யித்த அதிகாரிகள் அங்கு சென்று அதன் பாதுகாப்பு ஏற் பாட்டைக் கண்காணிக்க விருக்கிறார்கள்.

இந்நிலையில், சிங்கப்பூரில் நடக்க உள்ள சந்திப்பின் போது தாம் கொலை செய்யப்படலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக கடந்த ஞாயிறன்று தனது ராணுவ தளபதிகள் மூவரை திடீரென மாற்றினார்.

மேலும், தென்கொரியாவிலும் சில நபர்கள் தன்னை கொல்ல தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாக கிம் ஜாங் அன்னுக்கு செய்தி கிடைத்துள்ளதும் அவரது உயிர் பயத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து, சந்திப்பு நிகழும் செண் டோசா ரிசார்ட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.

இதற்கிடையே, செண்டோசா ரிசார்ட் பகுதியில் சந்தேகத் திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த இரண்டு தென்கொரிய நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.முழு காஷ்மீர் பகுதி பள்ளி புத்தகங்களில் வரைபடம்

பாகிஸ்தான் தடை

இசுலாமாபாத், ஜூன் 10- காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியா உடன் இணைந்தும், மற்றொரு பகுதியை பாகிஸ்தான் ஆகிரமித்தும் வைத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 2 முதல் 8ஆ-ம் வகுப்புக்கு வழங் கப்பட்டுள்ள சமூக அறிவியல் பாட புத்தகத்தில் முழு காஷ் மீர் பகுதியும் இந்தியாவின் அங்கமாக இருப்பது போன்ற வரைபடம் இருந்துள்ளது.

இந்த தகவல்கள் வெளியானதும் மாகாண அரசு இந்த புத்தகங்களுக்கு தடை விதித்தது. மேற்கண்ட பள்ளிகளுக்கு இது தொடர்பாக தாக்கீது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண் ணம் இருக்குமாறு பாட புத்தக வடிவமைப்பு குழு விதிகளை உருவாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.