எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஆக. 25- கடந்த 2016ஆ-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதி பர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, ஆபாசப் பட நடிகை உள்பட 2 பெண்கள் டிரம்ப் மீது பாலியல் புகார் சுமத்தினர். அவர்களுக்கு டிரம்ப் பின் வழக்குரைஞர் மைக்கேன் கோகன் பணம் கொடுத்து வாயை அடைத்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில், இது தொடர் பான வழக்கில் கோகன் தான் குற்றம் செய்ததை நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டார். டிரம்ப் கூறியே தான் இப்படி செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் கொடுக்கப்பட்டுள்ளதால் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அமெரிக்காவில் குரல் எழுந்து உள்ளது.

இது மட்டுமல்லாமல்  டிரம்பின் முன்னாள் உதவியாளர் பால் மானபோர்ட் வங்கிமோசடி வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட சம்பவங் களால் டிரம்ப் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக பேட் டியளித்த டிரம்ப், தன்னை பதவியிலிருந்து நீக்கினால் அமெரிக்கப் பொருளாதாரம் சீர்குலையும் என கூறியுள்ளார். ‘எல்லா வேலையையும் சரியாக செய்யும் ஒருவரை எப்படி பதவியிலிருந்து நீக்க முடியும் என எனக்கு தெரியவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.