எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், அக். 11- அமெரிக்காவில், உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப் பேற்றுள்ள பிரெட் கவானா மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது குறித்து, அமெரிக்கா சார்பில் அவரிடம் மன்னிப்பு கேட்பதாக அதிபர் டிரம்ப் உருக்கமாகத் தெரிவித்தார்.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 114-ஆவது நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள பிரெட் கவானாவின் அதிகாரப்பூர்வ பதவியேற்பு நிகழ்ச்சி வாசிங்டனிலுள்ள அதிபர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பிரெட் கவானா தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார்.

அப்போது அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:

நீதிபதி கவானா மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தியதன் மூலம் பெரும் துன்பத்தை அனுபவித்த அவரி டமும், அவரது குடும்பத்தினரிடமும் அமெரிக்கா சார்பில் மன்னிப்பு கோரு கிறேன்.

நமது நாட்டுக்காக சேவையாற்ற முன்வருவோரை நாம் நேர்மையுடனும், கவுரவத்துடனும் வரவேற்க வேண்டும். அவர்கள் மீது பொய்யான அவதூறுகளை வாரியிறைக்கக் கூடாது.

கவானாவுக்கும், அவரது குடும்பத் தாருக்கும் நடைபெற்ற கொடுமைகள், இந்த நடைமுறைக்கு முற்றிலும் மாறு பட்டதாக இருந்தது என்றார் அவர்.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் துணை நீதிபதியாக இருந்த அந்தோணி கென்னடியின் பதவிக் காலம் முடிவ டைந்ததையடுத்து, அந்தப் பதவிக்கு பிரெட் காவனாவின் பெயரை அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பிரெட் காவனா மீது கிறிஸ்டைன் பிளேசி ஃபோர்டு பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஊடகங்களிடம் தாமாக முன்வந்து பேட்டியளித்த கிறிஸ்டைன் பிளேசி, 1980-களில் பிரெட் காவனா தன்னை பாலியல் வன்முறை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, டெபோரா ரமீரெஸ் (53) என்ற பெண்ணும் யேல் பல்கலைக்கழகத்தில் 1983-ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, பிரெட் காவனா தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியாக குற்றம் சாட்டினார். அதையடுத்து, ஜூலி ஸ்வெட்னிக் என்ற பெண், காவனா கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை காவனா திட்டவட்டமாக மறுத்து வந்த நிலை யில், அவர் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகும் ஒரு கேளிக்கை நிகழ்ச்சியில் தன்னுடன் இருந்த பெண் மீது காவனா பாலியல் தாக்குதல் நிகழ்த்தியதாக மேலும் ஒரு பெண் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், காவனா மீதான பாலியல் புகார் அளித்த கிறிஸ்டைன் பிளேசி ஃபோர்டிடமும், காவனாவிட மும் நாடாளுமன்ற குழு தனித் தனியாக விசாரணை நடத்தியது.

மேலும், இதுகுறித்து அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.அய். யும் இதுகுறித்து விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், அவரது நியமனத் துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவை களும் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அவர் தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக் கிடையிலும், முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பதவிக்கு கவானா தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளது, அவரைப் பரிந்துரைத்த அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி யாக கருதப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner