எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, நவ.4 இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்தராஜபக்சே அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்தத் தருணத்தில் நடுநிலை வகிப்ப தென்பது அராஜகம் வெற்றிபெற வழி செய்யும் என்றும் கூட்டமைப்பு தெரிவித் துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கூட்ட மைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரை பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் அதிபரிடம் இல்லையெனவும், இந்த அதிகாரம் 19 ஆவது திருத்தத்தின்மூலம் நீக்கப்பட்டுவிட்டதாகவும் ஆகவே பிரத மரை நீக்குவதாக வெளியிட்ட அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்றத்தில் பெரும் பான்மை இல்லாத ஒருவரை பிரதமராக அறிவித்துவிட்டு, பெரும்பான்மையை அவர் நிரூபிப்பதற்கு வேண்டிய தேவையை தாமதிக்கவே கால அவ காசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூட்ட மைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இந்த காலநீட்டிப்பைப் பயன்படுத்தி, அமைச்சர் பதவிகளையும் பணத்தையும் லஞ்சமாகக் கொடுத்து தனது பக்கத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுத்தெடுப்பது ஜன நாயக விரோத நடவடிக்கையென்றும், தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இந்த சதிக்கு பலியா னதுகடுமையானகண்டனத்திற்குஉரிய தென்றும் அவர் மீது நடவடிக்கைஎடுக்கப் போவதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள் ளது.

உங்கள் நியமனம் அரசியலமைப்பிற்கு முரணானது என மகிந்தவிடம் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஏற்கெனவே நேரில் சந்தித்து கூறியிருந்தார்.

ராஜபக்சே அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதர வாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக் களிக்கும் என்றும், இந்தத் தருணத்தில் நடுநிலை வகிப்பது அராஜகம் வெற்றி யீட்டக்கூடிய ஜனநாயக விரோத செயல் என்றும் கூட்டமைப்பின் அறிக்கை தெரி விக்கிறது.

இலங்கையில் தற்போது எழுந்துள்ள சூழல் குறித்து முடிவெடுக்க கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வெள் ளிக்கிழமையன்றுமாலையில்நடைபெற் றது. அந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூட்டமைப்பு தெரிவித் துள்ளது.


குற்றச்சாட்டு

மத்திய அரசு வழங்கவேண்டிய ரூ.18 ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை.

இப்படி சொல்பவர் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை (அ.தி.மு.க.).

பீதி!'

நேற்று ஒரு நாள் மட்டும் சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் 186.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner