எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெய்ஜிங், நவ. 4- பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக தேர்வானவர் தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான்.

இவர் அரசுமுறை பயணமாக நான்கு நாட்கள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அதிகாலை பெய்ஜிங் சென்றடைந்த இம்ரான் கானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, தியானன்மென் சதுக்கத்தில் அமைந்துள்ள அரசு அரங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இம்ரான் கான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவை மேம் படுத்துவதற்கு இந்த சுற்றுப்பயணம் உதவும். இதன்மூலம் இருதரப்பு உறவில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகும் என இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர். பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான் கானின் இந்த சீனப் பயணம் அவரது முதல் வெளிநாட்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றம்

ரியோ டி ஜெனிரோ, நவ. 4 யூத, கிறித்துவ, இசுலாமிய மதங்களின் "புனித" தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கருதி வந்தது. மற்ற நாடுகள் இதை அங்கீகரிக்காத நிலையில், அதிரடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். இந்த முடிவுக்கு எதிராக அரபு நாடுகள் போர்க்கொடி உயர்த்தின.

எனினும் அவற்றை பொருட்படுத்தாமல், இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க அரசு தனது புதிய தூதரகத்தை கடந்த மே மாதம் திறந்து ஒரு புதிய அரசியல் அடையாளத்தை அந்நகருக்கு அளித்தது. அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா, பராகுவே நாட்டின் தூதரகங்கள் ஜெருசலேம் நகரில் திறக்கப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற முடிவு செய்த பிரேசில் நாட்டின் முடிவை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக, பிரேசிலில் நடந்த அதிபர் தேர்தலில் புதிய அதிபராக தேர்வான ஜயிர் போல்ஸ்னோரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இஸ்ரேலில் உள்ள பிரேசில் தூதரகம் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner