எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எதிர்க்கட்சி முன்னிலை - டிரம்புக்கு பின்னடைவு

வாசிங்டன், நவ. 8- அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு மிட்டெர்ம் தேர்தல் எனப்படும் இடைக்கால தேர்தல் நேற்று நடந்தது.  இதில் 100 பேரில் மூன்றில் ஒரு பங்கு செனட் சபை உறுப் பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த 436 உறுப்பினர் கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது அதிபர் தேர்தலுக்கு சமமான தேர்தலாக கருதப்படுகிறது. மேலும் 36 மாகாணங் களுக்கு இந்த வருடம் ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள் ளனர். இந்த தேர்தல் அமெரிக்க அரசியலில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த கூடியது.

இந்த நிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான முடிவுகளில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த கட்சி 194 இடங்களில் வெற்றி பெற்றுள் ளது. அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி 174 இடங்களை பிடித்துள்ளது.

இதன் மூலம் அதிபர் டிரம்புக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் டிரம்புக்கு இன்னும் 2 ஆண்டுகள் மீதம் உள்ளது. புதிய சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்றால் இந்த உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

அதே நேரத்தில் செனட் சபை தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையை தக்க வைத்துள்ளது. அதில் உள்ள 100 இடங்களில் குடியரசு கட்சி 51 இடங்களை பிடித்துள்ளது. ஜனநாயக கட்சி 42 இடங்களை கைப்பற்றியுள்ளது.

இந்தியர்கள் முன்னிலை

அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல் முறையாக 100க்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் போட்டி யிட்டனர். இதில், இறுதியில்  50 பேர் மட்டுமே களத்தில் நின்றனர். இவர்களில் ஏற்கெனவே பிரதிநிதிகள் சபையில் பதவி வகித்த இந்திய வம்சாவளி எம்பி.க்கள் 4 பேர் உட்பட 12 பேரும், செனட்  சபையில் ஒருவரும் முன் னிலை வகிக்கின்றனர். இல்லினாஸ் செனட் சபைக்கு இந்தியர் ராம்வில்லிவலம் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதேபோல், வடக்கு கரோலினா மாநில செனட் சபைக்கு இந்திய வம்சாவளி முசுலிம் முஸ்தபா முகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதிநிதிகள் சபையில்  ஏற்கெனவே பதவி வகித்து வரும் ராஜா கிருஷ்ணமூர்த்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் குடியரசு கட்சி வேட்பாளரான இந்தியர் ஜிதேந்தர்  திகான்வேரை தோற்கடித்துள்ளார்.  வாசிங்டன் மாநில பிரதிநிதிகள் சபைக்கு இந்திய அமெரிக்கர் பிரமிளா ஜெயபால் 2ஆம் முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  இதேபோல், கலிபோர்னியா பிரதிநிதிகள் சபைக்கு 2வது முறையாக ரோகன்னா வெற்றி பெற்றுள்ளார். இதே போல் 3 முறை எம்பியாக பதவி வகித்துள்ள அமி  பெராவும் வெற்றி பெற்றுள்ளார். இந்திய பெண் அனிதா மாலிக், அரிசோனா மாவட்ட தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். வாசிங்டன் மாநில செனட் சபைக்கு மங்கா  திங்காரா, வந்தனா ஷ்லேட்டர் மீண்டும் தேர்வு செய் யப்பட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner