எழுத்துரு அளவு Larger Font Smaller Font

துபாய், ஜன.11 2019 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு இரண்டு மடங்கு தேசியமய மாக்கப் படும் என்று துபாயின் ஆட்சியாளர் கூறி உள்ளார். இதனால் இந்திய தொழிலா ளர்களின் வேலை வாய்ப்பு களுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

வளைகுடா அரபு நாடு களில் வேலைகள் தேசியமய மாக்கப்படும் விகிதம் அதி கரிப்பு  இந்திய தொழிலாளர் களுக்கு  நேரடி அச்சுறுத்த லாக உள்ளது.

சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகியவற்றை தொடர்ந்தது  2019 ஆம் ஆண்டில் மேலும் வேலைவாய்ப்புகள் தேசியமயமாக்கப்படும் என்று துபாயின் எமிரேட் கூறியுள்ளது.

2018 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புகளை தேசியமயமாக்குவது துபாயில் 200 சதவிகிதம் அதிகரித்துள்ளது என அய்க்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் மற்றும் பிரதமர்  ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும் ட்விட்டரில் கூறியுள்ளார்.

இன்று நான் அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். அதில் 2018 ஆம் ஆண்டின் விளைவு மற்றும் 2019க்கான திட்டத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். 2018 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புகளின் உள்ளூர்மயமாக்கல் 200 சதவிகிதம் அதிகரித்தது. 2019 ஆம் ஆண்டில் அதனை இரட்டிப்பாக்க நாங்கள் முயற்சி செய்வோம் என ட்விட்டரில் கூறி உள்ளார்.

அய்க்கிய அரபு அமீரகத்தில் சுமார் 20 லட்சம்  இந்தியர்கள்  வாழ்க்கை மற்றும் வேலை செய்து வருகின்றனர். துபாயின் ஆட்சி யாளர்கள் 1999ஆம் ஆண்டில்  வேலைவாய்ப்பை தேசியமயமாக்கல்  ஆரம்பித் திருந்த போதிலும், அது பல ஆண்டுகளாக அது குறைந்தபட்சமாக இருந்தது.

இருப்பினும் 2008 நிதியியல் நெருக்கடி, பொருளாதாரத்தை பரவலாக்குவதற்கும், தனியார் துறைகளில் வேலைகளை தேர்ந் தெடுப்பதற்கும் அதிக விகிதம் வேலைவாய்ப்பு தேசியமயமாக்கப் பட்டது. வளைகுடா அரபு குடிமக்கள் குறைந்த  ஊதியங்கள் மற்றும் கடுமையான வேலை போன்ற காரணங்களால் தனியார் துறைகளில் சேர விரும்பவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner