எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், மார்ச் 8- அமெரிக் காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடை பெறுகிறது. அவ்வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் கிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் கிலாரி வெற்றி பெற்று, நாட் டின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்று சிறப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிலாரி தோல்வியைத் தழுவினார்.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்த லிலும் டிரம்பை எதிர்த்து ஜன நாயக கட்சி சார்பில் கிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இதுபற்றி முதல் முறையாக கருத்து தெரிவித்த கிலாரி கிளிண்டன், அதிபர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

‘வரும் பொதுத் தேர்தலில் டொனால்டு டிரம்பை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால், ஜனநாயக கட்சியில் ஏராளமான போட்டியாளர்கள் இருப்பதால், வேட்பாளர் தேர்வில் வெற்றி பெறுவது கடினம்’ என்றார் கிலாரி.

இதேபோல் நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளூம்பெர்க்கும் அதிபர் பத விக்கான போட்டியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner