எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கராகஸ், மா£ச் 14- வெனிசுலாவின் அதிபர் பதவியை விரைவில் அடைவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அதிபர் நிகோலஸ் மடூரோவுக்கு எதி ராக ஜுவான் குவாய்டோ போராட் டங்களில் ஈடுபட்டு வந்தார். அந் நாட்டின் இடைக்கால அதிபராகவும் தன்னை அவர் அறிவித்துக் கொண்டார். இதனால், அந்நாட்டில் பெரும் பதற்றம் நிலவியது. அமெரிக்கா உள்ளிட்ட அய்ம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளும் குவாய்டோவின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதே வேளையில், சீனா, ரசியா உள்ளிட்ட சில நாடுகள் மடூரோவுக்கு ஆதரவு தெரிவித்து வரு கின்றன.

வெனிசுலாவில் மீண்டும் அதிபர் தேர்தல் நடத்தக் கோரும் குவாய்டோ வின் கோரிக்கைகளை அதிபர் மடூரோ ஏற்க மறுத்து வருகிறார். அந்நாட்டு ராணுவமும் அதிபர் மடூரோவுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, வெனிசுலாவில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து தென் அமெரிக்காவில் உள்ள மற்ற நாடுகளுக்கு எடுத்துரைக்கும் வகையில், அந்நாடுகளுக்கு குவாய்டோ பயணம் மேற்கொண்டார். வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், அந்தத் தடையை மீறி கடந்த மாதம் 23-ஆம் தேதியிலிருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், கடந்த வாரம் நாடு திரும்பினார்.

இந்நிலையில், நாடு முழுவதும் பல் வேறு ஆர்ப்பாட்டங்களை குவாய்டோ முன்னின்று நடத்தி வருகிறார். மடூரோ அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் மக்கள் திரளாகப் பங்கேற்று, குவாய் டோவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற னர். தலைநகர் கராகஸில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குவாய்டோ பேசியதாவது:

நாட்டில் நிலைமை மிகவும் மோச மடைந்து வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே நாட்டின் நிலைமை சீராகும். இந்தக் கடினமான இருண்ட காலத்தில் இருந்து, நாடு விரைவில் மீண்டு வரும் என்பதை மக்கள் அனைவரும் உறுதியுடன் நம்ப வேண்டும். நாட்டின் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு நமக்கு ஓர் அலுவலகம் தேவைப்படுகிறது. நாட்டின் ராணுவம் நமக்கு ஆதரவளித் தால், அதிபர் மாளிகையில் நமக்கான அலுவலகம் தயாராகிவிடும். நாட்டின் அதிபர் பதவியை விரைவில் அடை வேன் என்று அவர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner