எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஏப். 12- அமெரிக்கா விலிருந்து இறக்குமதி செய்யப் படும் பெரும்பாலான பொருள் களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பெரும் எண்ணிக்கையிலான அமெரிக்க பொருள்களுக்கு இந்திய 100 சதவீத வரியை விதித்து வருகிறது. ஆனால், அமெரிக்காவைப் பொருத்த வரையில் இதேபோன்ற வரி விதிப்பு நடைமுறையை கடை பிடிப்பது கிடையாது.

இந்தியாவைப் போலவே சில நாடுகளும் அமெரிக்கப் பொருள்களுக்கு இதே அளவி லான வரிவிதிப்பு நடைமுறையை அமல்படுத்தி வருகின்றன. எனவே, இவற்றை கருத்தில் கொண்டு வரி விதிப்பிலிருந்து அமெரிக்கப் பொருள்களை பாது காக்கும் வகையிலான நடவடிக் கைக்கு நாடாளுமன்ற உறுப்பி னர்கள் ஆதரவளிக்க வேண்டும்.

இந்திய 100 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளது போல், அமெரிக்காவும் பதிலடி யாக அதே அளவு வரி விதிப்பை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இருநாடுகளுக்கிடையில் வரி விதிப்புகள் சமநிலையில் இல்லாத சூழ்நிலையில் வர்த் தகம் மேற்கொள்வது முட்டாள் தனமானது என்பதுடன் நியா யமற்றதும் கூட. அதிக வரி விதிப்பு வர்த்தகத்தால் அமெரிக் காவுக்கு ஆண்டுக்கு 800 பில்லி யன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே, அமெரிக்காவுடனான வர்த்தக ஏற்றத் தாழ்வுகளை போக்க இந்தியா தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண் டும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner