எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டெல்அலிவ், ஏப். 12- இஸ்ரேலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் பிரதமர் நெதன்யாகு முன்னிலை வகித்து வருகிறார்.

இதையடுத்து, 5-ஆவது முறையாக அந்த நாட்டின் பிர தமராகத் தேர்ந்தெடுக்கப்படும் சாதனையை அவர் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில், பிரதமர் நெதன்யாகுவின் லிக்குட் கட்சிக்கும், ராணுவ முன்னாள் தலைமை தளபதி பெஞ்சமின் கண்ட்ஸின் புளூ அண்டு ஒயிட் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தேசப் பாதுகாப்பு, வளர்ச்சி போன்ற விவகாரங்களில் நெதன் யாகுவின் செயல்பாட்டுக்கு வரவேற்பு இருந்தாலும், ஏராள மான ஊழல் குற்றச்சாட்டுக ளுக்கிடையே அவர் இந்தத் தேர்தலை எதிர்கொண்டார்.

இந்த நிலையில், முதல்கட் டமாக வெளியாகியுள்ள தேர் தல் முடிவுகளில் நெதன்யாகு வின் லிக்குட் கட்சியும், பெஞ்சமின் கண்ட்ஸின் புளூ அண்டு ஒயிட் கட்சியும் தலா 35 இடங் களில் முன்னிலை வகித்தன.

எனினும், ஆளும் கூட்ட ணியைச் சேர்ந்த இரு கட்சிகள் தலா 5 இடங்களிலும், நெதன் யாகுவுக்கு ஆதரவான குலானு கட்சி 4 இடங்களிலும் முன் னிலை வகிக்கின்றன. மேலும், நெதன்யாகுவை ஆதரிக்கும் ஷாஸ் மற்றும் அய்க்கிய டோரா யூதக் கட்சி ஆகியவை தலா 8 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

அதையடுத்து, 120 இடங் களைக் கொண்ட நாடாளுமன் றத்தில் நெதன்யாகுவின் பலம் 65-ஆக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதன் மூலம், இஸ்ரேல் பிரதமராக 13 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ள பெஞ்சமின் நெதன்யாகு, 5-ஆவது முறையாக மீண்டும் பிரதமரா கத் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை புரிவார் என்று கூறப்படுகிறது.

தனது ஆட்சிக் காலத்தை பெஞ்சமின் நெதன்யாகு பூர்த்தி செய்தால், இஸ்ரேலில் மிக அதிக காலம் ஆட்சி செலுத்திய பிரதமர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner