எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சீனாவில் மிக நீண்ட தூரத்துக்கு
புல்லட் ரயில் சேவை தொடக்கம்  


பீஜிங், ஜன.6
சீனாவின் குன்மிங் நகரிலிருந்து அந்நாட் டின் தலைநகர் பெய்ஜிங் வரை 2,760 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயில் சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

உலகின் மிக நீண்ட தூரத் துக்கு செல்லும் புல்லட் ரயில் குன்மிங் நகரிலிருந்து வியாழக் கிழமை காலை 11.05 மணியளவில் புறப்பட்டது. இந்த ரயில் பெய்ஜிங் நகரை அடைய 13 மணி நேரம் ஆகும்.

இந்த ரயிலுக்கு உலகப் புகழ் பெற்றதும் சீனாவின் யுன்னன் மாகாணத்தில் உள்ள ஷங்ரி-லா என்ற ரிசார்ட்டின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

பிரிட்டன் நாவலாசிரியர் தான் எழுதிய “லாஸ்ட் ஹாரி ஸான்’ என்ற புத்தகத்தில் இந்தப் பெயரை முதன்முதலில் பயன் படுத்தினார்.

இந்த புல்லட் ரயிலின் இரண்டாம் வகுப்புக் கட்டணம் 1,147 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.11,227) என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இந்த ரயில் செல்லும் பாதையும் மிக நீண்ட தூரத்துக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் கிழக்கு-மேற்கு ரயில் வேயை இணைக்கும் வகையில் சுமார் 20,000 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை விரிவுப்படுத்தப் பட்டுள்ளது.
இந்தப் பாதையின் அளவு 2030-ஆம் ஆண்டில் 45ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கவும் சீன அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner