எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நியூசிலாந்தில் இறந்த நிலையில்

கரை ஒதுங்கிய 400 திமிங்கலங்கள்

வெலிங்டன், பிப்.11  நியூசி லாந்து கடற்பகுதியில் இறந்த நிலையில் சுமார் 400 திமிங் கலங்கள் கரைஒதுங்கியதால் கடல்வாழ் விலங்கின அமைப் பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நியூசிலாந்து கடற்கரை பகுதியில் 400-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. இதில் 300-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துள்ளதாக அந்நாட்டு கடல்வாழ் விலங்கின அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தின் தெற்கு பகுதி யில் உள்ள தங்க வளைகுடா பகுதியில் பைலட் திமிங்க லங்கள் அதிகளவில் காணப்படு கிறது. இந்த வகை திமிங்க லங்கள் 20 அடி நீளம் உடையது.

இந்நிலையில் நேற்று

400-க்கும் மேற்பட்ட திமிங்கலங் கள் கரை ஒதுங்கின.

இதில் 300-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்த நிலை யில், எஞ்சியுள்ள திமிங்கலங் களை காப்பாற்ற நியூசிலாந்தின் உயிரின ஆர்வல அமைப்பு மற்றும் சமூக அமைப்புகள் கடற்கரை பகுதியில் தீவிரமாக ஈடுபட்டடுள்ளன.

கரைஒதுங்கிய திமிங்கலங் களில் பல காயத்துடன் இருப் பதால், அவற்றிற்கு தேவையான சிகிச்சைகள் செய்யப்பட்ட பிறகு  திமிங்கலங்கள் மீண்டும் கடலில் கொண்டு விடப்பட்ட நிலையில், அவை மீண்டும் கரைஒதுங்கியதால் கடல்வாழ் விலங்கின  அமைப்பினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

திமிங்கலங்களின் உயிரி ழப்பு குறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது 1918 ஆம் ஆண்டில் சதாம் தீவு பகுதியில்  அதிகபட்சமாக 1000 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. ஆக்லாந்தில் 1985ஆம் ஆண்டு 450 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின


 

டிரம்ப்பின் முஸ்லிம் குடியேற்றத் தடையை நீக்க

கலிஃபோர்னியா நீதிமன்றம் மறுப்பு

கலிஃபோர்னியா, பிப்.11 முஸ் லிம்கள் பெரும்பான்மை யாகக் கொண்ட ஏழு நாடுகளி லிருந்து அமெரிக்கா வர தடை விதிக்கும் அதிபரின் உத்தரவுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கலிஃபோர்னியா மேல் முறையீட்டு நீதிமன்றம் மறுத்தது.

ஈரான், ஈராக், யேமன், சிரியா, சூடான், லிபியா, சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு 90 நாள்கள் தடை விதித்து அதிபர் டிரம்ப் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், அந்த நாடுகளிலி ருந்து அகதிகளாக வருபவர் களுக்கு 120 நாள்களும், சிரியா நாட்டு அகதிகளுக்கு மட்டும் காலவரையறையின்றியும் அமெ ரிக்கா வர தடை விதிக்கப்பட்டது.

அதிபரின் குடியேற்றத் தடை உத்தரவு மத துவேஷத்தை வெளிப்படுத்துவதாகக் கூறி உலகின் பல்வேறு பகுதிகளி லிருந்து கண்டனங்கள் எழுந்தன.

டிரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக, வாஷிங்டன் மாகாண அட்டர்னி ஜெனரல், சியாட்டில் நகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி, அதிபரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில், அந்த தடை உத்தரவை நீக்கக் கோரி சான் ஃபிரான்சிஸ்கோ மேல்முறை யீட்டு நீதிமன்றத்தில் நீதித் துறை அமைச்சகம் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அரசு வழக் குரைஞரிடம் பல்வேறு கேள்வி களை எழுப்பினர்.

குறிப்பிட்ட 7 முஸ்லிம் நாடு களைச் சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வருவதற்கு விதிக்கப் படும் தடை, அரசியல் சாசனம் வழங்கியுள்ள மத சுதந்திரத்தை மீறுவதாக அமையாதா என்று நீதிபதிகள் கேட்டனர்.

மேலும், குறிப்பிட்ட நாடு களைச் சேர்ந்தவர்களால் அமெரிக் காவின் பாதுகாப்புக்கு அச்சு றுத்தல் உள்ளதாகக் கூறப்படு வதற்கு ஆதாரம் உள்ளதா என்றும் அரசு வழக்குரைஞரிடம் நீதி பதிகள் வினவினர்.

ஒரு பிரிவினருக்கு 90 நாட் களும், இன்னொரு பிரிவினருக்கு 120 நாட்களும் அமெரிக்கா வர தாற்காலிகத் தடை விதிக்கப்பட் டுள்ளது. அந்த தடையை அதிபர் மறு பரிசீலனை செய்வார் என்று அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.

அந்த மனு மீதான இறுதி உத்தரவு புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில், அதிபரின் குடியேற்ற உத்தரவுக்கு வாஷிங் டன் மாகாணம், சியாட்டில் நகர விசாரணை நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்க முடியாது என்று நீதிபதிகள் ஒருமனதாகத் தெரிவித்தனர்.

அதிபரின் அதிகார வரம்பு, அவரது உத்தரவு அரசியல் சாச னத்துக்கு உட்பட்டு இருக்கிறதா என்ற பிரச்னைக்குள் போக வில்லை என்று தெரிவித்த நீதி பதிகள், தாற்காலிகத் தடைக்கான அவசியத்தை அழுத்தமாக அரசுத் தரப்பு முன்வைக்கவில்லை என்றனர்.

அதிபரின் ஆணையில், ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த வர்கள் அமெரிக்காவுக்குள் வர அனுமதிப்பது குறித்த பகுதியை மட்டுமே பரிசீலித்ததாக நீதி பதிகள் தெரிவித்தனர். அமெரிக் காவுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு அதிபருக்கு முழு அதிகாரம் உள் ளது என்று நீதிபதிகள் கூறினர்.

இரு தரப்பினருமே ஆணித்தர மான வாதங்களை முன்வைத்த போதிலும், அதிபரின் தடை உத்தரவால் குடும்ப உறுப்பி னர்கள், மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மத்திய அரசின் கருத்துகளை சியாட்டில் விசாரணை நீதிமன் றத்தில் இறுதி வாதங்களின்போது தெரிவிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


ஈஃபிள் கோபுரத்தைச் சுற்றி அமைக்கப்படும் கண்ணாடிச்சுவர்

பாரீஸ், பிப்.11   பிரான்சில் உள்ள பிரபல ஈஃபிள் கோபுரத்தை சுற்றிலும் கண்ணாடியால் ஆன தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ளது.

பிரான்சில் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தை சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடியால் ஆன சுற்றுச்சுவர் எழுப்ப பிரான்ஸ் அரசு  திட்டமிட்டுள்ளது. சுமார் 2.5 மீட்டர் உயரத்தில் அமையவுள்ள இந்த கண்ணாடி சுவர் அமைக்க 300 மில்லியன் யூரோ செலவு கணக்கிடப்பட்டுள்ளது.

128 ஆண்டு பழைமையான ஈஃபிள் டவரை புதுப்பிக்கும் வகையில் இந்த கண்ணாடி சுவர் மாதிரியை அமைக்க உள்ளதாக  ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதற்கான பணிகள் தற்போது தொடங்க உள்ளது.

ஈஃபிள் கோபுரத்தை கண்டுகளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் எந்தப் பகுதியில் இருந்து வேண்டுமானாலும் உள்ளே நுழைய  முடியும். இந்த கண்ணாடியால் ஆன மதிலை எழுப்புவதன் மூலம் குறிப்பிட்ட வழியாக மட்டுமே சுற்றுலாப் பயணிகள் உள்ளே  வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுவர் எழுப்புவதன் மூலம் நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே உள்ளே நுழைய முடியும். மேலும் ஈஃபிள் கோபுரம்  பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெரு முன்னாள் அதிபருக்கு

சர்வதேச பிடியாணை

லிமா, பிப்.11  ஊழல் வழக்கு எதிரொலியால் பெரு முன்னாள் அதிபர் அலெஜாண்ட்ரோ டோலிடோவுக்கு சர்வதேச பிடிகட்ட ளையை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் 2001- - 2006 ஆண்டுகளில் அதிபராக இருந்தவர் அலெஜாண்ட்ரோ டோலிடோ. இவர் பிரேசில் நாட்டை சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் ஓடிபிரெச்ட் என்பவரிடம் 20 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.136 கோடி) கையூட்டு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அலெஜாண்ட்ரோ டோலிடோ, தனது பதவியை தவறாக பயன்படுத்தி, நெடுஞ்சாலை திட்டங்களை டெண்டர் விடுவதில் முறைகேடு புரிந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த பெரு நாட்டின் நீதிபதி ரிச்சர்ட் கன்சப்சியன், அலெஜாண்ட்ரோ டோலிடோவை கைது செய்வதற்கு சர்வதேச பிடிகட்டளை பிறப்பித்து உத்தர விட்டுள்ளார்.

அலெஜாண்ட்ரோ டோலிடோ, தன் மீதான ஊழல் வழக்கில் ஆஜராகாமல் தப்பி ஓடிவிட்டார். அவர் பிரான்ஸ் நாட்டில் இருப்பதாக தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டு விசா ரணையை எதிர்கொண்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக அரசு வழக்குரைஞர் ஹாமில்டன் காஸ்ட்ரோ தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner