எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஹூஸ்டன், மார்ச் 20- அமெரிக்க நாட்டில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்துவரும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கிற வகையில் தேசிய அறிவியல் அறக்கட்டளை பிரசித்தி பெற்ற கேரியர் விருது வழங்கி சிறப்பு செய்து வருகிறது.

இந்த ஆண்டு அந்த விருது பெற்றவர்களில் ஒருவர், அன் சுமலி சிறீவஸ்தவா. இந்திய வம்சாவளி கணினி விஞ்ஞானி யான இவர் அங்கு ஹூஸ்ட னில் உள்ள ரைஸ் பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரி யராக பணியாற்றி வருகிறார்.

கணினி ஆராய்ச்சியில் இவரது முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் கேரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் மேற்கு வங்காள மாநிலம், கரக்பூரில் உள்ள அய்.அய்.டி. என்னும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் படித்து பட்டம் பெற்றவர்.

அமெரிக்கா வில் உள்ள கார்னல் பல்கலைக் கழகத்தில் கணினி அறிவிய லில் ஆராய்ச்சி செய்து முனை வர் பட்டம் பெற்றுள்ளார். முனைவர் பட்டம் பெற்றதும் ஹூஸ்டன் ரைஸ் பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியராக சேர்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner