எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிறுவர்கள், பெண்கள் உள்பட 14 பேர் பலி லாகூர், ஏப்.26 பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பழங்குடியினர் பகுதியில் பயணிகள் வாகனம் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 சிறுவர்கள், 4 பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள குர்ரம் மாவட்டம், கொன்டாரா கிராமத்தில், பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சிற்றுந்தைக் குறிவைத்து குண்டு வெடிப்புத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

அந்த வாகனம் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி குண்டு ரிமோட் கன்ட்ரோல் முறையில் வெடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 2 சிறுவர்கள், 4 பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, அந்தப் பகுதிக்கு ராணுவ ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும், பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, இந்தத் தாக்கு தலுடன் தொடர்புடையவர்களைத் தேடி வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனினும், குர்ரம் மாவட்டத்தில் இன ரீதியில் அடிக்கடி நிகழ்த்தப்படும் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த மாதம் இந்தப் பகுதியில் ஷியா பிரிவினரைக் குறி வைத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பயங்கரவாத அமைப்பிலிருந்து பிரிந்த ‘ஜமாதுல் ஆஹ்ரார்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner